Page Loader
'பத்து தல' படத்தின் ட்ரைலர் இன்றிரவு வெளிவரும் என அறிவிப்பு; இன்று மாலை படத்தின் ஆடியோ லான்ச் நடைபெறுகிறது
'பத்து தல' படத்தின் ட்ரைலர் இன்றிரவு வெளிவரும்!

'பத்து தல' படத்தின் ட்ரைலர் இன்றிரவு வெளிவரும் என அறிவிப்பு; இன்று மாலை படத்தின் ஆடியோ லான்ச் நடைபெறுகிறது

எழுதியவர் Venkatalakshmi V
Mar 18, 2023
05:25 pm

செய்தி முன்னோட்டம்

சிலம்பரசன், கவுதம் கார்த்திக் முதல் முறையாக இணைந்து நடிக்கும் 'பத்து தல' படத்தின் ட்ரைலர், இன்றிரவு 10 மணிக்கு வெளியிடப்படும் என தயாரிப்பாளர் தரப்பு அறிவித்துள்ளது. படத்தின் டீஸர் ஏற்கனவே பயங்கர வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இந்த திரைப்படத்தின் ட்ரைலருக்காக அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர். இன்று மாலை, 'பத்து தல' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது. இந்த ஆடியோ வெளியீட்டு விழாவிற்காக, வெளிநாடு சென்றிருந்த சிம்புவும் நேற்று சென்னை திரும்பியுள்ளார். 'ஏஜிஆர்' என்ற பெயரில், டான் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். இந்த படத்தை, 'சில்லுனு ஒரு காதல்' படத்தை இயக்கிய ஒபேலி கிருஷ்ணா இயக்கியுள்ளார். இந்த படத்தின் இசையமைப்பாளர், ஏ.ர். ரஹ்மான்.

ட்விட்டர் அஞ்சல்

'பத்து தல' ட்ரைலர்