
சென்னையில் 19-ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஏ.ர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி; சேவை நேரத்தை நீட்டிப்பதாக மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
சென்னையில், வரும் ஞாயிற்றுகிழமை, இசைப்புயல் ஏ.ர். ரஹ்மான் இசை கச்சேரி நடத்தவிருக்கிறார்.
படப்பிடிப்பின் போது, இறந்த லைட்மேன்களுக்கு உதவ, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்.
இது பற்றி அறிக்கை வெளியிட்டிருந்த FEFSI அமைப்பு, "ஒரு உன்னதமான முயற்சியைத் தொடங்குகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த இசை நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் தொகையை திரைப்படத் தளங்களில் விபத்துக்களில் இறக்கும் லைட்மேன்களின் குடும்பங்களுக்கு உதவும்படி எங்களிடம் கூறினார். அவருக்கு FEFSI எங்கள் மனமார்ந்த நன்றிகளை வழங்குகிறது" எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, சென்னை மெட்ரோ நிர்வாகம், அந்த நாளன்று இரவு, மெட்ரோ ட்ரெயின் நேரத்தை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி, இரவு 12 வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
ட்விட்டர் அஞ்சல்
மெட்ரோ சேவை நீட்டிப்பு
#BREAKING ஞாயிற்றுக்கிழமை மட்டும் 12 மணி வரை மெட்ரோ #Metro #ARRahman #ChennaiMetro #News18TamilNadu https://t.co/7dpn9FD15R pic.twitter.com/xEFL3IZ4Rv
— News18 Tamil Nadu (@News18TamilNadu) March 17, 2023