Page Loader
லைட்மேன்களுக்கு உதவ, சென்னையில், வரும் மார்ச் 19-ம் தேதி இசை கச்சேரி நடத்தும் ஏ.ஆர்.ரஹ்மான்
லைட்மேன்களுக்கு உதவ, சென்னையில் இசை கச்சேரி நடத்தும் ஏ.ஆர்.ரஹ்மான்

லைட்மேன்களுக்கு உதவ, சென்னையில், வரும் மார்ச் 19-ம் தேதி இசை கச்சேரி நடத்தும் ஏ.ஆர்.ரஹ்மான்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 27, 2023
12:22 pm

செய்தி முன்னோட்டம்

படப்பிடிப்பின் போது, இறந்த லைட்மேன்களுக்கு உதவ, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், வரும் மார்ச் 19-ம் தேதி, சென்னையில் இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார். இது பற்றி அறிக்கை வெளியிட்டுள்ளார், தென்னிந்திய திரைப்பட ஊழியர் சம்மேளனமான FEFSI அமைப்பின் தலைவர், இயக்குனர் ஆர்.கே.செல்வமணி. "ஒரு உன்னதமான முயற்சியைத் தொடங்குகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். திரையுலகின் முக்கிய அங்கமான லைட்மேன்களுக்கு விபத்துகளில் காயம் ஏற்பட்டால் அவர்களுக்கு உதவ கார்பஸ் நிதியை உருவாக்கப் போகிறார். இதற்காக வரும் மார்ச் 19,சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில், பிரமாண்ட இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தப்போகிறார். இந்த இசை நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் தொகையை திரைப்படத் தளங்களில் விபத்துக்களில் இறக்கும் லைட்மேன்களின் குடும்பங்களுக்கு உதவும்படி எங்களிடம் கூறினார். அவருக்கு FEFSI எங்கள் மனமார்ந்த நன்றிகளை வழங்குகிறது" எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரி

ட்விட்டர் அஞ்சல்

FEFSI arikkai