ஏ.ஆர்.ரகுமான் பிறந்த நாள் - அவரை பற்றிய சுவாரசியமான தகவல்கள்
இன்று பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் பிறந்தநாள். 56-வது பிறந்த நாளை கொண்டாடும் இவருக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துச் செய்திகளை தெரிவித்து வருகின்றனர். அவரின் பிறந்தநாளன்று அவரை பற்றிய சுவாரசிய தகவல்களை தெரிந்துக்கொள்வோம். 1966-ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் இவர். இவரின் இயற்பெயர் திலீப் குமார் ஆகும். தனது 23வது வயதில் இவர் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். இவரின் தந்தையும் மலையாள திரையுலகில் இசையமைப்பராக இருந்தவர். ரகுமானின் 9-வது வயதில் அவர் தந்தை மரணமடைந்தார். அதன் பிறகு 25 வயது வரை தனக்கு தற்கொலை செய்யும் எண்ணம் இருந்தாக தனது இளமை கால கஷ்டங்களை 'நோட்ஸ் ஆஃப் எ ட்ரீம்' எனும் அவரின் சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நீண்டுக் கொண்டு போகும் ஏ.ஆர்.ரகுமானின் விருதுகளின் பட்டியல்
எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் இளையராஜா ஆகியோருடம் உதவியாளராக இருந்துள்ளார். 1992-ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா படத்தின் மூலம் இவர் இசையமைப்பாளர் ஆனார். முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றார். அதன்பின் தமிழ், ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம், சீனம் என பல மொழிகளில் இசையமைத்து உலகளவில் புகழை பெற்றார். 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தின் மூலம் உயரிய விருதான ஆஸ்கார் விருத்தினை பெற்றார். மொத்தமாக 2 ஆஸ்கார் விருதுகள் , 6 தேசிய விருதுகள், 11 IIFA விருதுகள், 32 பிலிம்பேர் விருதுகள், பாப்தா, கிராமி விருது என இவர் பெற்ற விருதுகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இவர் 27 வருடங்களாக திரையுலகில் தனெக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்று ஜாம்பவானாக திகழ்ந்து வருகிறார்.