Loading...

விளையாட்டு செய்தி

கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.

கிரிக்கெட்டை புறக்கணித்த ரசிகர்கள்: டர்பனில் உள்ளூர் கால்பந்துக்கு அலைமோதிய கூட்டம்

தென்னாப்பிரிக்காவின் டர்பன் கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி, பார்வையாளர்களின் வருகையின்றி வெறிச்சோடியது கிரிக்கெட் உலகை உலுக்கியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் ஆஃபரை நிராகரித்த ராகுல் டிராவிட்! கில் கிறிஸ்ட், மோர்கனும் நோ;அடுத்த கோச் யார்?

ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து மகேலா ஜெயவர்த்தனே விலகியுள்ளதைத் தொடர்ந்து, அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் வட்டாரங்களில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

17 Oct 2026
• ஐபிஎல்

ஐபிஎல் 2027: மும்பை இந்தியன்ஸ் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார் மகேலா ஜெயவர்த்தனே

ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற முன்னணி ஐபிஎல் அணியான மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians), வரவிருக்கும் ஐபிஎல் 2027 சீசனை முன்னிட்டு நிர்வாகக் கட்டமைப்பில் மிகப்பெரிய மாற்றங்களைத் தொடங்கியுள்ளது.

வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு மறுப்பு: சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக கம்பீர் அதிரடி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஜோடி தொடர்ந்து களமிறக்கப்பட்டு வரும் நிலையில், இளம் அதிரடி ஆட்டக்காரரான 15 வயது வைபவ் சூர்யவன்ஷி நான்கு போட்டிகளிலும் பெஞ்சில் அமரவைக்கப்பட்டது கிரிக்கெட் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் புறக்கணிப்பு: தேர்வுக்குழுவை சாடிய ரவிச்சந்திரன் அஸ்வின்

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இளம் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சேர்க்கப்படாதது குறித்து, இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பிசிசிஐ தேர்வுக்குழுவை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

17 Oct 2026
• ஒலிம்பிக்

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அதிரடி: மனித உரிமை உட்பட 12 முக்கிய குழுக்கள் கலைப்பு

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) தனது நிர்வாகக் கட்டமைப்பை எளிமையாக்கவும் செலவுகளைக் குறைக்கவும் திட்டமிட்டு, மனித உரிமைகள் மற்றும் பாலின சமத்துவம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களைக் கையாண்டு வந்த 12 நிரந்தர நிலைக்குழுக்களை அதிரடியாகக் கலைத்துள்ளது.

16 ஆண்டுகளுக்குப் பின் ஐபிஎல் ரீ-என்ட்ரி: டெல்லி பவுலிங் கோச்சாக இணைந்தார் சமிந்தா வாஸ்

சர்வதேச கிரிக்கெட் அரங்கின் தலைசிறந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான இலங்கையின் சமிந்தா வாஸ் (Chaminda Vaas), சுமார் 16 நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடருக்குள் நுழைந்துள்ளார்.

ரவீந்திர ஜடேஜா நீக்கம்! நியூசிலாந்து தொடருக்கான இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகள் அறிவிப்பு

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ள 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணிகளை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

16 Oct 2026
• கபில்தேவ்

மூத்தவர்களின் அனுபவத்தைக் கேளுங்கள்! போராட்டத்தில் குதித்துள்ள Gen Z இளைஞர்களுக்குக் கபில்தேவ் டோஸ்

இந்தியாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) நடைமுறைகளில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் ராஜினாமாவை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் சிஜேபி அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியாவுடன் விளையாடினால் $1 கூட கிடைக்காது! வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் சிஇஓ கிறிஸ் டெஹ்ரிங் பரபரப்பு குற்றச்சாட்டு

சர்வதேச கிரிக்கெட்டின் தற்போதைய நிதிப் பங்கீட்டு மாதிரியைக் கடுமையாக விமர்சித்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி கிறிஸ் டெஹ்ரிங், இந்திய மண்ணில் நடைபெறும் இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் இருதரப்புத் தொடர் மிகப்பெரிய வணிக வருவாயை ஈட்டினாலும், அதில் பூஜ்ஜியம் தொகையே தங்களுக்குக் கிடைப்பதாக பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

16 Oct 2026
• ஐபிஎல்

ஐபிஎல் தொடரில் பங்கேற்கப் போவதில்லையா? 2027 சீசன் பங்கேற்பு குறித்து ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஓபன் டாக்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி இடதுகை வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க், எதிர்வரும் 2027 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் பங்கேற்பது குறித்து தன் முடிவைத் திறந்த மனதுடன் வைத்துள்ளார்.

பெண் ரசிகர்களுக்கு ஆஃபர்! ராய்ப்பூரில் நடைபெறும் இந்தியா - ஜிம்பாப்வே பெண்கள் டி20 போட்டிக்கு இலவச அனுமதி

சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் அமைந்துள்ள ஷாஹித் வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 16) அன்று தொடங்குகிறது.

16 Oct 2026
• கால்பந்து

ஃபிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ மன்னிப்பு கோரினார்; உலகக்கோப்பை சர்ச்சைக்கு விடை கிடைக்காமல் ஐரோப்பிய நாடுகள் அதிருப்தி

சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பின் (ஃபிஃபா) தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ, உலகக்கோப்பை விற்பனைத் திட்டம் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சர்ச்சைக்குரிய தலையீடு ஆகிய விவகாரங்கள் தொடர்பாக ஃபிஃபா கவுன்சில் கூட்டத்தில் முறைப்படி மன்னிப்புக் கோரினார்.

85 பதக்கங்களுடன் சாதனை! ஆசிய விளையாட்டுப் போட்டியில் வென்ற இந்திய வீரர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி பாராட்டு

ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என மொத்தம் 85 பதக்கங்களை வென்று சாதனை படைத்த இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகளைத் டெல்லியில் வியாழக்கிழமை (அக்டோபர் 15) அன்று பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்துப் பாராட்டினார்.

'25 வருசமா உங்க அசிஸ்டெண்ட் தான் தாதா!' டெல்லி கேப்பிடல்ஸில் இணைந்தது குறித்து யுவராஜ் சிங் வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்

ஐபிஎல் 2027 தொடருக்காக தனது பயிற்சியாளர் குழுவை டெல்லி கேப்பிடல்ஸ் நிர்வாகம் முற்றிலும் மாற்றியமைத்துள்ளது.

சூர்யகுமார் யாதவ் சாதனையை தகர்த்த அபிஷேக் சர்மா! 2026-இல் 69 சிக்ஸர்கள் விளாசி புதிய உலக சாதனை

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

14 Oct 2026
• ஐபிஎல்

மீண்டும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்குத் திரும்பினார் தமிழக வீரர் நடராஜன்

ஐபிஎல் 2027 தொடருக்கான முன்னேற்பாடுகள் இப்போதே சூடுபிடித்துள்ள நிலையில், தமிழகத்தை சேர்ந்த நட்சத்திர இடதுகை வேகப்பந்து வீச்சாளர் தங்கராசு நடராஜனை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மீண்டும் தங்களது பாசறைக்குக் கொண்டுவந்துள்ளது.

21-ஆம் நூற்றாண்டின் டாப் 10 பவுலர்கள்: ஜாம்பவான்களை முந்தி பும்ரா சாதனை

நவீன கிரிக்கெட் உலகின் 21-ஆம் நூற்றாண்டுக்கான டாப் 10 தலைசிறந்த டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் பட்டியலை இங்கிலாந்து அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்டர் ஜோஸ் பட்லர் மற்றும் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

14 Oct 2026
• கால்பந்து

கால்பந்து வளர்ச்சிக்காக $6.35 பில்லியன் நிதி ஒதுக்க FIFA புதிய திட்டம்

சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA), உலகளவில் கால்பந்து விளையாட்டை அடிமட்ட அளவில் இருந்து பிரம்மாண்டமாக வளர்த்தெடுக்கும் நோக்கில், 2027 முதல் 2030 வரையிலான அடுத்த நான்காண்டு காலத்திற்கு சுமார் 6.35 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.53,000 கோடிக்கு மேல்) மதிப்பிலான வளர்ச்சி நிதியை ஒதுக்கீடு செய்யப் பரிந்துரைத்துள்ளது.

14 Oct 2026
• இந்தியா

பிரணவி அர்ஸின் மன உறுதி அசாத்தியமானது: இந்திய வீராங்கனையை வியந்து பாராட்டிய ரோரி மெக்இல்ராய்

நான்கு முறை மேஜர் பட்டம் வென்ற சர்வதேச கோல்ஃப் உலகின் நட்சத்திர வீரரான ரோரி மெக்இல்ராய், இந்தியாவில் நடைபெறவுள்ள 'டிபி வேர்ல்ட் இந்தியா சாம்பியன்ஷிப்' தொடரில் பங்கேற்பதற்காக இரண்டாவது முறையாக இந்தியா வந்துள்ளார்.

14 Oct 2026
• டென்னிஸ்

வுகான் ஓபன் டென்னிஸ் 2026: செரீனா வில்லியம்ஸ் சாதனையை முறியடித்த இகா ஸ்வியாடெக்

சீனாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வுகான் ஓபன் மகளிர் டென்னிஸ் தொடரில், போலந்தின் முன்னணி நட்சத்திர வீராங்கனை இகா ஸ்வியாடெக் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

லண்டனில் தெரு கிரிக்கெட் ஆடிய இளவரசர் வில்லியம்: கங்குலி பந்தில் சிக்ஸர் விளாசி அசத்தல்

லண்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வெளியே சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான்களுடன் பிரிட்டன் இளவரசர் வில்லியம் கலகலப்பாகத் தெரு கிரிக்கெட் விளையாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு விழா

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகளைப் பாராட்டி கெளரவிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி நாளை புதுடெல்லியில் சிறப்புப் பாராட்டு விழாவை நடத்தவுள்ளார்.

14 Oct 2026
• கால்பந்து

கொல்கத்தாவில் எல் கிளாசிகோ: ரியல் மாட்ரிட் லெஜண்ட்ஸ் - பார்சிலோனா லெஜண்ட்ஸ் அணிகள் மோதல்

இந்தியக் கால்பந்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற சால்ட் லேக் மைதானத்தில், உலகின் முன்னணி கால்பந்து கிளப் அணிகளான ரியல் மாட்ரிட் லெஜண்ட்ஸ் மற்றும் பார்சிலோனா லெஜண்ட்ஸ் அணிகள் மோதும் எல் கிளாசிகோ காட்சிப் போட்டி வரும் நவம்பர் 25 அன்று நடைபெறவுள்ளது.

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைக்குப் பிறகு ஓய்வா? வெளியான தகவல்களுக்கு இந்திய வீரர்கள் மறுப்பு

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடருக்குப் பிறகு இந்திய ஆடவர் ஹாக்கி அணியைச் சேர்ந்த நான்கு முன்னணி மூத்த வீரர்கள் ஓய்வு பெறவுள்ளதாக வெளியான தகவல்கள் விளையாட்டு வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஐசிசி செப்டம்பர் மாத சிறந்த வீரர் விருது: ஷுப்மன் கில் 5-வது முறையாக வென்று சாதனை!

இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில், 2026 செப்டம்பர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த ஆடவர் கிரிக்கெட் வீரர் விருதை தட்டிச் சென்றுள்ளார்.

2027 உலகக் கோப்பையில் ரோஹித் - கோலி ஆடுவார்களா? பிசிசிஐ தலைவர் முன்வைத்த நிபந்தனைகள்

சர்வதேச ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு 2027-ல் நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணியின் முன்னணி தூண்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரின் எதிர்காலம் குறித்து கிரிக்கெட் வட்டாரங்களில் பல்வேறு விவாதங்கள் எழுந்து வருகின்றன.

'மற்றவர்கள் பேச்சைக் கேட்டு பிரிந்தேன்': பிரித்வி ஷாவுடன் மீண்டும் இணைந்த ஆக்ரிதி

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா மற்றும் பிரபல பாலிவுட் நடிகை ஆக்ரிதி அகர்வால் ஆகியோர், தங்களது நிச்சயதார்த்தம் ரத்து செய்யப்பட்ட சில வாரங்களிலேயே கருத்து வேறுபாடுகளைக் களைந்து மீண்டும் ஒன்றாக இணைந்துள்ளனர்.

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: பாகிஸ்தான் விலகல் குறித்து சூரஜ் கார்கேரா கருத்து

பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் மற்றும் மொஹாலியில் வரும் அக்டோபர் 27 முதல் நவம்பர் 5 வரை நடைபெறவுள்ள ஆசிய சாம்பியன்ஸ் டிராபி சர்வதேச ஆடவர் ஹாக்கி தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி திடீரென விலகியுள்ளது.

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றிலேயே உலக நம்பர் 1 வீராங்கனையுடன் மோதும் சிந்து

டென்மார்க்கின் ஓடன்ஸ் நகரில் தொடங்கும் டென்மார்க் ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் தொடரில், இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்துவுக்கு முதல் சுற்றிலேயே மிகக் கடுமையான சவால் காத்திருக்கிறது.

12 Oct 2026
• இந்தியா

டெல்லியிலிருந்து போட்டி மாற்றப்படவில்லை: இந்தியா - இலங்கை ஒருநாள் போட்டி வதந்திக்கு பிசிசிஐ முற்றுப்புள்ளி

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே டிசம்பரில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடரின் தொடக்கப் போட்டி, டெல்லியிலிருந்து அகமதாபாத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை பிசிசிஐ திட்டவட்டமாக மறுத்துள்ளது.

சுழற்பந்தை சமாளிக்க கோலியை யூடியூபில் பார்த்தேன்: ஆஸ்திரேலிய கேப்டன் நாதன் மெக்ஸ்வீனி

இந்தியா 'ஏ' அணிக்கு எதிராக புதுச்சேரியில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி ஆஸ்திரேலிய 'ஏ' அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.

முழங்காலில் காயம்! வலியையும் பொருட்படுத்தாமல் தொடக்க வீரராகக் களமிறங்கிய சாய் சுதர்சன்

ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை லீக் ஆட்டத்தில், தமிழ்நாடு அணியின் இளம் நட்சத்திர தொடக்க வீரர் சாய் சுதர்சன் பலத்த காயமடைந்தார்.

12 Oct 2026
• கால்பந்து

நான்தான் வரலாற்றின் தலைசிறந்த வீரர்: தற்காலிக நீக்கத்திற்குப் பின் பொங்கிய ரொனால்டோ

போர்ச்சுகல் கால்பந்து அணியின் பயிற்சி முகாமிலிருந்து வெளியேறி தற்காலிக சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு ஆளாகியுள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோ, கால்பந்து வரலாற்றின் தலைசிறந்த வீரர் நான்தான் எனப் பிரகடனப்படுத்தியுள்ளார்.

12 Oct 2026
• கால்பந்து

'முட்டாள் மாதிரி நேரத்தை வீணடிச்சிட்டேன்': சர்வதேச ஓய்வுக்குப் பின் மெஸ்ஸியின் உருக்கம்

உலக கால்பந்து வரலாற்றின் மிகச்சிறந்த வீரராகப் போற்றப்படும் லியோனல் மெஸ்ஸி, தனது 39-வது வயதில் அர்ஜென்டினா அணிக்கான சர்வதேச கால்பந்து வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில், தன் வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு முக்கிய வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சானியா மிர்சா சாதனையை உடைத்த தமிழக வீராங்கனை: 17 வயதில் மாயா ராஜேஸ்வரன் இரட்டை மகுடம்

இந்திய டென்னிஸ் அரங்கின் முடிசூடா ராணியாகத் திகழ்ந்த சானியா மிர்சாவின் 22 ஆண்டுகால அசைக்க முடியாத சாதனையை, தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 வயது இளம் புயல் மாயா ராஜேஸ்வரன் ரேவதி முறியடித்து புதிய சகாப்தம் படைத்துள்ளார்.

நியூசிலாந்து டெஸ்டுக்கு முன் ரவீந்திர ஜடேஜா ருத்ரதாண்டவம்: ரஞ்சி கோப்பையில் சதம் விளாசல்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, அடுத்த மாதம் தொடங்கவுள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக உள்ளூர் ரஞ்சி கோப்பை தொடரில் சதம் விளாசி தனது அசுர ஃபார்மை நிரூபித்துள்ளார்.

15 ஆண்டுகளுக்குப் பின் அரிய டி20 சாதனை: ஸ்ரீசாந்த், அஸ்வின் பட்டியலில் இணைந்த பிரின்ஸ் யாதவ்

இந்திய அணியின் பின்வரிசை வீரர் பிரின்ஸ் யாதவ், சர்வதேச டி20 போட்டியில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்த அரிய பேட்டிங் சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார்.

பவுண்டரி என நினைத்துக் கொண்டாடிய திலக் வர்மா: விநோத ரன் அவுட்டால் அதிர்ச்சி

இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற 3-வது டி20 சர்வதேச போட்டியில், இந்திய பேட்டர் திலக் வர்மா களத்தில் காட்டிய கவனக்குறைவால் கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகவும் வினோதமான முறையில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்துள்ளார்.

யுவராஜ் சாதனையை நேபாளம் உடைப்பதா? அசோசியேட் டி20 சாதனைகளுக்கு கவாஸ்கர் எதிர்ப்பு

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் முழு உறுப்பினர் தகுதி பெற்ற முன்னணி அணிகளின் சாதனைகளோடு, கத்துக்குட்டி அசோசியேட் நாடுகளின் போட்டிகளில் நிகழ்த்தப்படும் சாதனைகளை சமமாக வைத்துப் பதிவு செய்வதற்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.