Loading...
'25 வருசமா உங்க அசிஸ்டெண்ட் தான் தாதா!' டெல்லி கேப்பிடல்ஸில் இணைந்தது குறித்து யுவராஜ் சிங் வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்
டெல்லி கேப்பிடல்ஸில் இணைந்தது குறித்து யுவராஜ் சிங் வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்

'25 வருசமா உங்க அசிஸ்டெண்ட் தான் தாதா!' டெல்லி கேப்பிடல்ஸில் இணைந்தது குறித்து யுவராஜ் சிங் வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 15, 2026
01:46 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2027 தொடருக்காக தனது பயிற்சியாளர் குழுவை டெல்லி கேப்பிடல்ஸ் நிர்வாகம் முற்றிலும் மாற்றியமைத்துள்ளது. அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள சௌரவ் கங்குலிக்கு உதவியாளராகவும், பேட்டிங் பயிற்சியாளராகவும் முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். 2027 சீசனில் தனது முதல் ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றும் நோக்கில் டெல்லி கேப்பிடல்ஸ் களம் காணவுள்ள சூழலில், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத மைல்கற்களை எட்டிய இரு ஜாம்பவான்கள் மீண்டும் ஒரே அணியில் இணைந்துள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

சுவாரஸ்ய உரையாடல்

கங்குலியுடன் யுவராஜ் நிகழ்த்திய சுவாரஸ்ய உரையாடல்

சௌரவ் கங்குலியின் கேப்டன்சியின் கீழ் 2000 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானவர் யுவராஜ் சிங்.

இந்நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோவில், கங்குலி தனக்கு அளித்த வாய்ப்பு குறித்து யுவராஜ் மனம் திறந்துள்ளார்.

கங்குலி தனக்கு போன் செய்து "எனக்கு உதவிப் பயிற்சியாளராக வர விருப்பமா?" எனக் கேட்டதாகக் கூறினார்.

அதற்கு "கடந்த 25 ஆண்டுகளாக நான் உங்களின் உதவியாளராகத் தான் செயல்பட்டு வருகிறேன். எனவே அதே வேலையைத் தொடர்ந்து செய்கிறேன்!" என நகைச்சுவையாகப் பதிலளித்ததாக யுவராஜ் பகிர்ந்து கொண்டார்.

புதிய சவால்

இளம் வீரர்களுக்கான வழிகாட்டி மற்றும் புதிய சவால்

கடந்த சில ஆண்டுகளாக ஷுப்மன் கில், அபிஷேக் சர்மா போன்ற இளம் வீரர்களுக்கு தனிப்பட்ட முறையில் பயிற்சி அளித்து வந்த யுவராஜ் சிங், இந்த புதிய பொறுப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கடந்த 3 முதல் 4 ஆண்டுகளாக இந்த நிலைக்குத் தன்னைத் தயார்படுத்தி வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

தனிப்பட்ட வீரர்களுடன் பணியாற்றிய அனுபவம் உள்ள நிலையில், தற்போது ஒரு அணியின் ஒட்டுமொத்த பயிற்சி சூழலில் இணைந்து செயல்படுவது தனக்கு ஒரு முற்றிலும் புதிய மற்றும் உற்சாகமான அனுபவமாக இருக்கும் என யுவராஜ் நம்புகிறார்.

ADVERTISEMENT

தலைமைப் பண்பு

கங்குலியிடம் கற்ற தலைமைப் பண்புகள்

தனது கேப்டன் கங்குலியைப் பற்றி பேசிய யுவராஜ், "அணிக்குள்ளே ஒரு நல்ல, நட்பான சூழலை எவ்வாறு உருவாக்குவது என்பதை தாதாவிடமிருந்தே (கங்குலி) நான் கற்றுக்கொண்டேன்.

நான் அறிமுகமான காலத்தில் அணியை ஒற்றுமையாக வழிநடத்தி, வெளிநாடுகளிலும் நாம் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை எங்களுக்கு அவரே விதைத்தார்.

எனக்கு ஒரு மூத்த சகோதரராக இருந்து, தேர்வுக்குழு முடிவுகள் முதல் சர்வதேசக் கிரிக்கெட்டில் சிறந்த வீரராக உருவெடுப்பது வரை அனைத்திலும் அவர் வழிகாட்டியாகத் திகழ்ந்துள்ளார்." என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ADVERTISEMENT