Loading...
ரவீந்திர ஜடேஜா நீக்கம்! நியூசிலாந்து தொடருக்கான இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகள் அறிவிப்பு
நியூசிலாந்து தொடருக்கான இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகள் அறிவிப்பு

ரவீந்திர ஜடேஜா நீக்கம்! நியூசிலாந்து தொடருக்கான இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகள் அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Oct 17, 2026
09:14 am

செய்தி முன்னோட்டம்

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ள 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணிகளை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நவம்பர் 4 ஆம் தேதி ஆக்லாந்தில் தொடங்கும் ஒருநாள் தொடருக்காக இரண்டு வெவ்வேறு அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. முன்னணி டெஸ்ட் வீரர்களுக்கு பணிச்சுமை மேலாண்மை காரணத்திற்காக கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-

ஒருநாள் அணிகள்

வெவ்வேறு கேப்டன்களின் தலைமையில் ஒருநாள் அணிகள்

முதல் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கு ஷுப்மன் கில் கேப்டனாகவும், ஷ்ரேயாஸ் ஐயர் துணை கேப்டனாகவும் செயல்படுவார்கள்.

கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கு ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாகவும், இஷான் கிஷன் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மூத்த வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி அனைத்து ஒருநாள் போட்டிகளுக்கான அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.

இளம் விக்கெட் கீப்பர் குமார் குஷாக்ராவிற்கு முதல்முறையாக ஒருநாள் அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் அணி

டெஸ்ட் அணியில் ஆகாஷ் தீப் மற்றும் ரிஷப் பண்ட்

டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணிக்கு ஷுப்மன் கில் கேப்டனாகவும், கே.எல்.ராகுல் துணை கேப்டனாகவும் செயல்படுவார்கள்.

இரானி கோப்பை மற்றும் ரஞ்சி கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் மீண்டும் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்தாலும், அவரது பங்கேற்பு மருத்துவப் பரிசோதனை மற்றும் உடல்தகுதி சான்றிதழுக்கு உட்பட்டது என பிசிசிஐ தெளிவுபடுத்தியுள்ளது.

ADVERTISEMENT

ஜடேஜா நீக்கம்

ரவீந்திர ஜடேஜா நீக்கம் மற்றும் அக்சர் படேல் சேர்க்கை

சமீபத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரவீந்திர ஜடேஜா எதிர்பார்த்த அளவிற்குச் சோபிக்கவில்லை.

இதன் காரணமாக அவர் ஒருநாள் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்குப் பதிலாக அக்சர் படேல் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இருப்பினும், ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் போட்டிக்கான அணியில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

அணி விவரங்கள்

ஒருநாள் அணி வீரர்களின் பட்டியல்

முதல் 3 போட்டிகளுக்கான ஒருநாள் அணி: ஷுப்மன் கில், ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், நமன் தீர், அன்ஷுல் கம்போஜ், குர்நூர் பிரார், ருதுராஜ் கெய்க்வாட், அர்ஷ்தீப் சிங், இஷான் கிஷன், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ்.

கடைசி 2 போட்டிகளுக்கான ஒருநாள் அணி: ஷ்ரேயாஸ் ஐயர், ரோஹித் ஷர்மா, விராட் கோலி, திலக் வர்மா, இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், நமன் தீர், ஆகிப் நபி, குர்நூர் பிரார், ருதுராஜ் கெய்க்வாட், அர்ஷ்தீப் சிங், குமார் குஷாக்ரா, முகமது சிராஜ், யாஷ் தாக்கூர், குல்தீப் யாதவ்.

அணி விபரங்கள்

டெஸ்ட் அணி வீரர்களின் பட்டியல்

டெஸ்ட் அணி: ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், தேவ்தத் படிக்கல், ரிஷப் பண்ட், துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா, அன்ஷுல் கம்போஜ், ஜஸ்ப்ரீத் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், சாய் சுதர்சன், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.

ADVERTISEMENT