Loading...
ஐபிஎல் தொடரில் பங்கேற்கப் போவதில்லையா? 2027 சீசன் பங்கேற்பு குறித்து ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஓபன் டாக்
2027 சீசன் பங்கேற்பு குறித்து ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஓபன் டாக்

ஐபிஎல் தொடரில் பங்கேற்கப் போவதில்லையா? 2027 சீசன் பங்கேற்பு குறித்து ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஓபன் டாக்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 16, 2026
05:48 pm

செய்தி முன்னோட்டம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி இடதுகை வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க், எதிர்வரும் 2027 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் பங்கேற்பது குறித்து தன் முடிவைத் திறந்த மனதுடன் வைத்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு அடுத்த ஆண்டில் மிகக் கடுமையான சர்வதேசப் போட்டிகள் வரிசைகட்டி நிற்பதால், ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாகத் தனது பங்கேற்பு குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துடன் பேசி முடிவெடுக்க உள்ளதாக அவர் சூசகமாகத் தெரிவித்துள்ளார். கூடுதல் விபரங்கள் இங்கே:-

நினைவு டெஸ்ட் போட்டி

நெருக்கடியான சர்வதேச அட்டவணையும் 150-வது நினைவு டெஸ்ட் போட்டியும்

2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலும் (ஜனவரி - மார்ச்), அதைத் தொடர்ந்து மார்ச் 11, 2027 முதல் இங்கிலாந்துக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க 150-வது ஆண்டு நினைவு டெஸ்ட் போட்டியிலும் விளையாடவுள்ளது.

இதன்பின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் ஆஷஸ் தொடர் போன்றவை வரவுள்ளதால், ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஐபிஎல் தொடருடன் சேர்த்து சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவது உடல்ரீதியாகப் பெரும் சவாலாக அமையும்.

பயிற்சியாளர் கருத்து

தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டின் கருத்து

இது குறித்துப் பேசிய ஆஸ்திரேலிய தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு, "எங்கள் வீரர்களுக்கு உலகின் தலைசிறந்த டி20 தொடரான ஐபிஎல்லில் விளையாடுவது சிறந்த அனுபவத்தைத் தருகிறது.

ஆனால், அதே நேரத்தில் வேகப்பந்து வீச்சாளர்களின் உடல்தகுதியைப் பேணுவது மற்றும் பணிச்சுமையை சீராக நிர்வகிப்பது எங்களது முதன்மைப் பொறுப்பாகும்.

வீரர்கள் தங்களது நாட்டின் பிரதிநிதித்துவத்திற்கு முன்னுரிமை அளித்துச் சரியான முடிவை எடுப்பார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ஐபிஎல் 2026

டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கடந்த சீசன் பின்னடைவு

கடந்த ஐபிஎல் 2026 ஏலத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மிட்செல் ஸ்டார்க்கை ₹11.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

ஆனால் தோள்பட்டை மற்றும் முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் தொடரின் பெரும்பாலான போட்டிகளை இழந்து, வெறும் 6 போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.

2027 தொடர் வரை உடல்தகுதியைப் பேணவும், தேசிய அணிப் போட்டிகளில் முழுமையாகக் கவனம் செலுத்தவும் ஸ்டார்க் ஐபிஎல் தொடரிலிருந்து விலக வாய்ப்புள்ளதாகக் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT