சுழற்பந்தை சமாளிக்க கோலியை யூடியூபில் பார்த்தேன்: ஆஸ்திரேலிய கேப்டன் நாதன் மெக்ஸ்வீனி
செய்தி முன்னோட்டம்
இந்தியா 'ஏ' அணிக்கு எதிராக புதுச்சேரியில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி ஆஸ்திரேலிய 'ஏ' அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. இத்தொடரில் 3 போட்டிகளில் ஒரு சதம் உட்பட 194 ரன்களைக் குவித்து 'தொடர் நாயகன்' விருதைத் தட்டிச் சென்ற ஆஸ்திரேலிய அணியின் 27 வயது நட்சத்திர பேட்டர் நாதன் மெக்ஸ்வீனி, இந்திய மண்ணில் சுழற்பந்து வீச்சை எதிர்கொண்டு ஆதிக்கம் செலுத்தியதன் ரகசியத்தை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.
ஸ்டீவ் ஸ்மித்
யூடியூப்பில் விராட் கோலியின் ஆட்டத்தை ஆராய்ந்தேன்
இந்திய ஆடுகளங்களில் சுழற்பந்து வீச்சை எதிர்கொண்ட உத்தி குறித்துப் பேசிய நாதன் மெக்ஸ்வீனி, "இந்தியாவிற்கு வரும்போது சுழற்பந்து வீச்சைச் சமாளிப்பதே முதன்மையான சவாலாக இருக்கும்.
அதற்காக இந்திய வீரர்கள் சுழற்பந்தை எப்படிக் கையாள்கிறார்கள் என்பதைப் பார்த்தேன். குறிப்பாக, யூடியூப்பில் விராட் கோலியின் வீடியோக்களைத் தொடர்ந்து பார்த்து, அவரது கால்களின் அசைவு எப்படி இருக்கிறது என்பதை நுணுக்கமாகப் படித்தேன்.
அவருடன் ஸ்டீவ் ஸ்மித் ஆட்டத்தையும் ஆய்வு செய்தோம். எங்களுக்கு வழங்கப்பட்ட தரவுகளையும் நுணுக்கங்களையும் ஆடுகளத்தில் சரியாகச் செயல்படுத்தியது பலனைக் கொடுத்தது" என்றார்.
டெஸ்ட் தொடரின் அனுபவம்
ஒருநாள் தொடரில் அபார வெற்றி
முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளையும் ஆஸ்திரேலிய 'ஏ' அணி முறையே 125 மற்றும் 69 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.
இதில் இரண்டாவது போட்டிக்கு மெக்ஸ்வீனி கேப்டனாகவும் செயல்பட்டார். மூன்றாவது போட்டியில் இந்தியா 'ஏ' அணி ஆறுதல் வெற்றி பெற்றாலும், தொடர் 2-1 என ஆஸ்திரேலியா வசமானது.
முன்னதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்தியா 'ஏ' வென்ற நிலையில், நீண்ட வடிவ போட்டிகளில் முதல் இன்னிங்ஸிலேயே பெரிய ஸ்கோர் அடிப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்ததாகவும், அடுத்த முறை அதில் கூடுதல் கவனம் செலுத்துவேன் என்றும் குறிப்பிட்டார்.
எளிதான காரியம் அல்ல
இந்தியாவில் தொடரை வெல்வது எளிதான காரியம் அல்ல
இந்தியாவில் விளையாடுவது எப்போதுமே ஒரு கடினமான போர்க்களம் என்று வர்ணித்த மெக்ஸ்வீனி, "இந்திய மண்ணில் மிகக் கடுமையான போட்டிகளுக்கு இடையே தொடரை வெல்வது சர்வதேச அளவில் எந்தவொரு அணிக்கும் எளிதான சாதனை அல்ல. எங்கள் அணியின் அனைத்து வீரர்களும் சிறப்பான உழைப்பைக் கொடுத்தனர்".
இந்தத் தொடர் வெற்றி எங்கள் ஒட்டுமொத்த அணிக்கும், தனிப்பட்ட முறையில் எனக்கும் அளப்பரிய தன்னம்பிக்கையைத் தந்துள்ளது" எனக் கூறினார்.
விராட் கோலியின் பேட்டிங் உத்திகளைப் படித்து இந்திய மண்ணிலேயே முத்திரை பதித்திருப்பது கவனத்தைப் பெற்றுள்ளது.