Loading...
கேமிங்கின்போது போன் சூடாகிறதா? ஏடிஎம் கார்டு அளவில் ஒன்பிளஸின் புதிய மேக்னடிக் கூலர் Ice Card Mini அறிமுகம்
ஏடிஎம் கார்டு அளவில் ஒன்பிளஸின் புதிய மேக்னடிக் கூலர் Ice Card Mini அறிமுகம்

கேமிங்கின்போது போன் சூடாகிறதா? ஏடிஎம் கார்டு அளவில் ஒன்பிளஸின் புதிய மேக்னடிக் கூலர் Ice Card Mini அறிமுகம்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 12, 2026
04:11 pm

செய்தி முன்னோட்டம்

மொபைல் கேமிங் பிரியர்களுக்கு ஒரு நற்செய்தியாக, விளையாட்டின் போது ஸ்மார்ட்போன் அதிக அளவில் சூடாவதைத் தடுப்பதற்காக ஐஸ் கார்ட் மினி (Ice Card Mini) என்ற சிறிய மேக்னடிக் போன் கூலரை ஒன்பிளஸ் அறிமுகப்படுத்துகிறது. சாதாரண ஏடிஎம் கார்டு போன்ற தோற்றத்தில், போனின் பின்புறம் சுலபமாக ஒட்டிக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சாதனம், கனமான கிளிப்கள் ஏதுமின்றி இலகுவாகப் பயன்படுத்த உதவும். கூடுதல் விபரங்கள் இங்கே:-

சிறப்பம்சங்கள்

வடிவமைப்பு மற்றும் அளவு சிறப்பம்சங்கள்

இந்த புதிய ஐஸ் கார்ட் மினி கூலர் வெறும் 50 கிராம் எடையும், 70mm x 53.4mm அளவும் கொண்டது.

இது ஒன்பிளஸின் முந்தைய 68 கிராம் எடையுள்ள மேக்னடிக் ஐஸ் கூலிங் கிளிப் மாடலை விட சுமார் 30 சதவீதம் சிறியது.

இதன் தடிமன் 9.7 மி.மீ ஆக இருந்தாலும், காற்று உள்ளிழுக்கும் பகுதியில் 12.3 மி.மீ ஆக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அலுமினியம் அலாய் மற்றும் பாலிகார்பனேட் கலவையால் உருவாக்கப்பட்டுள்ள இது சில்வர் விங் கிரே நிறத்தில் கிடைக்கிறது.

தொழில்நுட்பம்

குளிரூட்டும் தொழில்நுட்பம் மற்றும் சத்தமில்லா இயக்கம்

இந்த கருவி மின்சாரத்தைப் பயன்படுத்தி வெப்பத்தை வெளியேற்றும் TEC கூலிங் சிப் மற்றும் ஏர்-கூலிங் அமைப்பைக் கொண்டுள்ளது.

இது போனில் அதிக வெப்பம் உருவாகும் பகுதிகளை இலக்காகக் கொண்டு குளிரவைக்கிறது.

USB-C கேபிள் மூலம் 3.5 வாட்ஸ் மின்சாரத்தை நுகரும் இக்கூலரில் இருவேறு குளிரூட்டும் முறைகள் உள்ளன.

அவை முறையே 25dB மற்றும் 35dB என்ற மிகக் குறைந்த சத்தத்தில் இயங்குவதால், கேமிங் விளையாடும் போது எவ்வித இடையூறும் இருக்காது.

ADVERTISEMENT

இணக்கம்

பயன்பாட்டு முறைகள் மற்றும் இணக்கத்தன்மை

சுமார் 10N காந்த விசை கொண்ட இந்த கூலரை, பில்ட்-இன் காந்த வசதி இல்லாத போன்களிலும் பயன்படுத்த பெட்டியில் பிரத்யேக மேக்னடிக் பிளேட் வழங்கப்படுகிறது.

இதனால் அனைத்து வகை ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களிலும் இதனைப் பயன்படுத்த முடியும்.

10,000mAh பவர் பேங்க் மூலம் இக்கூலரை அதிகபட்ச பயன்முறையில் தொடர்ந்து 8 மணி நேரம் வரை இயக்க முடியும்.

ColorOS X கொண்ட ஒன்பிளஸ் மற்றும் ஓப்போ போன்களில் ஹை-பெர்ஃபார்மன்ஸ் மோட் ஆதரவும் இதற்கு வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT