Loading...
'முட்டாள் மாதிரி நேரத்தை வீணடிச்சிட்டேன்': சர்வதேச ஓய்வுக்குப் பின் மெஸ்ஸியின் உருக்கம்
ஆங்கிலம் கற்காமல் போனது வாழ்நாளின் மிகப்பெரிய வருத்தம் என லியோனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

'முட்டாள் மாதிரி நேரத்தை வீணடிச்சிட்டேன்': சர்வதேச ஓய்வுக்குப் பின் மெஸ்ஸியின் உருக்கம்

எழுதியவர் Vasuki
Oct 12, 2026
07:05 pm

செய்தி முன்னோட்டம்

உலக கால்பந்து வரலாற்றின் மிகச்சிறந்த வீரராகப் போற்றப்படும் லியோனல் மெஸ்ஸி, தனது 39-வது வயதில் அர்ஜென்டினா அணிக்கான சர்வதேச கால்பந்து வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில், தன் வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு முக்கிய வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். 8 முறை பாலன் டி ஓர் விருது, கிளப் அணிகளுக்காக எண்ணற்ற சாம்பியன்ஸ் லீக் பட்டங்கள் மற்றும் அர்ஜென்டினா அணிக்காக ஃபிஃபா உலகக்கோப்பை என வெல்ல முடியாத சிகரங்களே இல்லை என்ற நிலையை எட்டியிருந்தாலும், பள்ளிப் பருவத்தில் ஆங்கில மொழியைக் கற்காமல் போனது பெரும் குறையாகவே உள்ளதாக அவர் ஆதங்கப்பட்டுள்ளார்.

மெஸ்ஸி உருக்கம்

அறிவிலி போல நின்ற தருணங்கள்

மெக்சிகன் போட்காஸ்ட் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசிய மெஸ்ஸி, உலகளாவிய சூப்பர் ஸ்டாராக உயர்ந்த பின்னரும் ஸ்பானிஷ் மொழியை மட்டுமே அறிந்திருந்ததால் மொழிதடையால் முக்கிய தருணங்களை இழந்ததாகக் கூறினார்.

"நான் பல விஷயங்களுக்காக வருந்துகிறேன். குறிப்பாகச் சிறுவனாக இருந்தபோது ஆங்கிலம் படிக்காமல் போனதை நினைத்து இன்றுவரை மிகவும் வேதனைப்படுகிறேன்.

அதைச் செய்வதற்கு எனக்குப் போதிய நேரம் இருந்தது, ஆனால் நான் செய்யவில்லை. உலகின் மிகச்சிறந்த மற்றும் மகத்தான ஆளுமைகளுடன் அமர்ந்திருக்கும் தருணங்கள் எனக்குக் கிடைத்தன.

அவர்களிடம் பேசி உரையாடியிருக்க வேண்டிய தருணங்களில் மொழி தெரியாமல் ஒரு அரை-அறிவிலி போல நின்றுள்ளேன்.

நான் எவ்வளவு பெரிய முட்டாளாக இருந்து நேரத்தை வீணடித்துள்ளேன் என்று அப்போது எனக்குத் தோன்றும்" என வேதனையுடன் தெரிவித்தார்.

மொழி

குழந்தைகளுக்கு மெஸ்ஸி தரும் கல்வி அறிவுரை

இளமையில் கல்வியின் முக்கியத்துவத்தைப் பலரும் உணர்வதில்லை என்ற மெஸ்ஸி, தன் தவறிலிருந்து பாடம் கற்றுப் பிள்ளைகளுக்கு வழிகாட்டுவதாகத் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், "இளமையில் கல்வியின் மகத்துவம் புரிவதில்லை. நல்ல கல்வி, பன்மொழி அறிவைப் பெற்று உலகை எதிர்கொள்ளத் தயாராகுமாறு என் பிள்ளைகளுக்கு அறிவுறுத்துகிறேன்" என்றார்.

அர்ஜென்டினா பள்ளிப் பருவத்திற்குப் பின் பார்சிலோனாவின் லா மாசியாவில் படித்ததை நினைவுகூர்ந்தார்.

தொடர்ந்து, "கால்பந்து நற்பண்புகளைக் கற்பிக்கும் வழிமுறை. மனித வளர்ச்சிக்கு மொழி அறிவே பாலம்" எனக் கூறி ரசிகர்களுக்கு சிறந்த வாழ்வியல் பாடத்தை உணர்த்தினார்.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT