Loading...
முழங்காலில் காயம்! வலியையும் பொருட்படுத்தாமல் தொடக்க வீரராகக் களமிறங்கிய சாய் சுதர்சன்
காலில் காயம் அடைந்த நிலையிலும் தொடக்க வீரராகக் களமிறங்கி விளையாடினார் சாய் சுதர்சன்.

முழங்காலில் காயம்! வலியையும் பொருட்படுத்தாமல் தொடக்க வீரராகக் களமிறங்கிய சாய் சுதர்சன்

எழுதியவர் Vasuki
Oct 12, 2026
07:09 pm

செய்தி முன்னோட்டம்

ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை லீக் ஆட்டத்தில், தமிழ்நாடு அணியின் இளம் நட்சத்திர தொடக்க வீரர் சாய் சுதர்சன் பலத்த காயமடைந்தார். போட்டியின் 2-ஆம் நாளான இன்று ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, கவர் திசையில் நின்ற சாய் சுதர்சன் கரண் லம்பா அடித்த ஷாட்டைத் தடுக்க முயன்றார். அப்போது பந்து முழங்காலில் பலமாகத் தாக்கியதில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். களத்தில் பிசியோதெரபிஸ்ட் முதலுதவி அளித்த பின்னர் உதவியாளர்களின் துணையோடு ஓய்வறைக்குச் சென்ற அவருக்கு, எலும்பு முறிவு ஏதுமில்லை என்றும் தசைப் பிடிப்பு வலி மட்டுமே ஏற்பட்டுள்ளது என்றும் பரிசோதனையில் உறுதியானது.

கடைசி நேர சேர்க்கை

காயத்தையும் மீறி களமிறங்கி ஏமாற்றம்

ராஜஸ்தான் அணியின் இன்னிங்ஸ் முடியும் வரை களத்திற்கு வராத சாய் சுதர்சன், தமிழ்நாடு அணியின் பேட்டிங் தொடங்குவதற்கு முன் நெட் பயிற்சியில் ஈடுபட்டுத் தனது உடற்தகுதியைச் சோதித்தார்.

அணிக்கு உதவ வேண்டும் என்ற உறுதியுடன், நாராயண் ஜெகதீசனுடன் இணைந்து தமிழ்நாடு அணியின் தொடக்க வீரராகவே களம் புகுந்தார்.

இருப்பினும், அறிமுக வேகப்பந்து வீச்சாளர் சேத்தன் சர்மாவின் பந்துவீச்சில் வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

நியூசிலாந்து சுற்றுப்பயணம்

இந்தியா 'ஏ' தொடர் மற்றும் மருத்துவக் கண்காணிப்பு

புதுச்சேரியில் ஆஸ்திரேலியா 'ஏ' தொடரை முடித்துக் கொண்டு கடைசி நேரத்தில் ஜெய்ப்பூருக்கு வந்து தமிழ்நாடு அணியில் சாய் சுதர்சன் இணைந்தார்.

சமீபத்தில்தான் கால்விரல் காயத்தில் இருந்து குணமடைந்திருந்த 24 வயதான சாய் சுதர்சன், வரும் அக்டோபர் 26-ஆம் தேதி தொடங்கவுள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று 4-நாள் போட்டிகள் கொண்ட இந்தியா 'ஏ' அணியிலும் இடம்பிடித்துள்ளார்.

முதல்தர கிரிக்கெட்டில் 3,123 ரன்கள் குவித்து இந்திய டெஸ்ட் அணியிலும் அங்கம் வகிக்கும் அவரது காயத்தின் தீவிரத்தை மருத்துவக் குழு தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

ADVERTISEMENT