LOADING...

04 Sep 2025


பிசிசிஐயின் தலைவராக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் நியமிக்கப்பட வாய்ப்பு: பரபரப்புத் தகவல்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐயில் மற்றொரு தலைமை மாற்றம் ஏற்படவுள்ளது.

பிறந்தநாள் ஸ்பெஷல்; வெற்றிமாறன் இயக்கத்தில் STR 49 படத்தின் முதல் பார்வை வெளியீடு

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியிருந்த வட சென்னை திரைப்படத்தின் தொடர்ச்சியாக இருக்கும் என கருதப்படும் STR 49 படத்தின் முதல் பார்வை வியாழக்கிழமை (செப்டம்பர் 4) அன்று வெளியிடப்பட்டது.

இந்தியாவில் அதிகரிக்கும் இதய நோய்; அலட்சியப்படுத்தக் கூடாத எச்சரிக்கை அறிகுறிகள் என்னென்ன?

இந்தியாவில் ஏற்படும் மொத்த உயிரிழப்புகளில் சுமார் 28% இதய நோய்களால் ஏற்படுகிறது. இருப்பினும், பெரும்பாலான மக்கள் அதன் ஆரம்ப அறிகுறிகளை அலட்சியம் செய்கின்றனர்.

அரசின் உத்தரவை மதிக்காததால் நேபாளத்தில் ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட முக்கிய சமூக வலைதளங்களுக்குத் தடை

நேபாள அரசு, உள்நாட்டு விதிமுறைகளின்படி பதிவு செய்யத் தவறியதற்காக, ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற முக்கிய சமூக வலைதளங்களுக்குத் தடை விதித்துள்ளது.

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அடுத்த தலைமுறைக்கானவை: பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு

மறைமுக வரி விதிப்பு முறையை மாற்றி அமைக்கும் ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

2015க்கு முன்பு தமிழகம் வந்த இலங்கை தமிழ் அகதிகள் இந்தியாவில் தங்க சட்டப்பூர்வ அனுமதி வழங்கியது மத்திய அரசு

உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவிற்குள் நுழைந்த இலங்கைத் தமிழ் அகதிகள், இங்குத் தொடர்ந்து சட்டப்பூர்வமாகத் தங்கிக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை; விசித்திரமான சாதனை படைத்தது கனடா அணி

சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை நடந்திராத ஒரு விசித்திரமான சம்பவம், ஸ்காட்லாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கனடா அணிக்கு நடந்தது.

யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாமில் முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறி யுகி பாம்ப்ரி சாதனை

இந்தியாவின் யுகி பாம்ப்ரி மற்றும் அவரது நியூசிலாந்து ஜோடி மைக்கேல் வீனஸ், யுஎஸ் ஓபன் 2025 போட்டியின் இரட்டையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறி புதிய வரலாறு படைத்துள்ளனர்.

தீவிரவாத எதிர்ப்பு முதல் பொருளாதார ஒத்துழைப்பு வரை; டெல்லியில் பிரதமர் மோடி சிங்கப்பூர் பிரதமருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் உடன் இருதரப்பு சந்திப்பை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான மற்றும் நோக்கம் கொண்ட கூட்டாண்மையை வலியுறுத்தினார்.

உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 5) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (செப்டம்பர் 5) தமிழகத்தில் கோவை மெட்ரோவில் மட்டும் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

NIRF தரவரிசைப் பட்டியல் 2025: தேசிய அளவில் டாப் 10 இடங்களை பிடித்துள்ள தமிழக கல்லூரிகளின் பட்டியல்

மத்திய அரசின் தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) 2025 க்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய அணியின் மூத்த லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ரா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

25 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பிறகு, இந்திய அணியின் அனுபவமிக்க லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ரா, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி 2.0: ஐபிஎல் போட்டிகளை பார்ப்பதற்கு இனி அதிகம் செலவு செய்ய வேண்டும்; புதிய வரி எவ்வளவு?

கிரிக்கெட் ரசிகர்கள் இனி ஐபிஎல் போட்டிகளை மைதானத்தில் நேரடியாகக் காண அதிக பணம் செலவழிக்க நேரிடும்.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது சரியா? உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை (செப்டம்பர் 4) அவருக்குச் சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளது.

தங்கத்தின் விலை சற்று சரிவு; இன்றைய (செப்டம்பர் 4) விலை நிலவரம்

கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை வியாழக் கிழமை (செப்டம்பர் 4) சற்று சரிவைச் சந்தித்துள்ளது.

வாகனங்களுக்கான ஜிஎஸ்டி குறைப்பால் பங்குச் சந்தையில் ஆட்டோமொபைல் பங்குகள் எழுச்சி

புதன்கிழமை (செப்டம்பர் 3) அன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், வாகனங்களுக்கான வரியில் அதிரடி குறைப்பு அறிவிக்கப்பட்டதை அடுத்து, இந்திய வாகனத் துறை புத்துயிர் பெற்றுள்ளது.

புதிய ஜிஎஸ்டி விகிதத்தால் கார்களின் விலை உயர்கிறதா குறைகிறதா? விரிவான பார்வை

மத்திய அரசின் புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி 2.0) விதிகளின்படி, ஆடம்பர கார்கள் மற்றும் உயர் ரக மின்சார வாகனங்களின் விலை மாற்றங்களை சந்திக்க உள்ளது.

15 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபேடில் இன்ஸ்டாகிராம் செயலியை அறிமுகம் செய்தது மெட்டா நிறுவனம்

ஆப்பிள் ஐபேட் அறிமுகப்படுத்தப்பட்டு 15 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்ஸ்டாகிராம் நிறுவனம் ஐபேடிற்கான பிரத்யேகமான செயலியை வெளியிட்டுள்ளது.

இந்தியா மீது மேலும் தடைகள் விதிக்க வாய்ப்புள்ளதாம்; சொல்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

வர்த்தகப் பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்குவதால், இந்தியா மீது அமெரிக்கா இரண்டாம் நிலைத் தடைகளை விதித்துள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜிஎஸ்டி 2.0: வரிவிலக்கு பெற்ற பொருட்களின் முழுமையான பட்டியல்

பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில், ஒரு முக்கிய வரி சீரமைப்புத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

03 Sep 2025


ஜிஎஸ்டி கவுன்சில் 5% மற்றும் 18% என 2-நிலை வரி கட்டமைப்பை அங்கீகரித்துள்ளது

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் 5% மற்றும் 18% என்ற இரண்டு அடுக்கு விகித கட்டமைப்பை அங்கீகரித்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் விரைவில் வருகிறது PiP அம்சம்; அப்படியென்றால்?

இன்ஸ்டாகிராம் தனது ரீல்களுக்காக புதிய பிக்சர்-இன்-பிக்சர் (PiP) அம்சத்தை சோதித்து வருவதாக நிறுவனம் டெக் க்ரஞ்சிடம் உறுதிப்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள நேருவின் அதிகாரபூர்வ இல்லம் Rs.1,100 கோடிக்கு விற்கப்பட்டது

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அதிகாரப்பூர்வ இல்லமாக இருந்த டெல்லியின் லுடியன்ஸ் பங்களா மண்டலத்தில் (LBZ) உள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க பங்களா, ₹1,100 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடைபெறும் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரை பாகிஸ்தான் புறக்கணிக்க வாய்ப்பு

சென்னையில் நடைபெறவிருக்கும் 2025 FIH ஆண்கள் ஜூனியர் உலகக் கோப்பையை பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பு (PHF) புறக்கணிக்க வாய்ப்புள்ளது.

பிளாட்ஃபார்ம் கட்டணத்தை உயர்த்திய Zomato; நுகர்வோர்களுக்கு கடும் தாக்கம்

பண்டிகை காலத்தில் எதிர்பார்க்கப்படும் தேவை அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, Zomato அதன் பிளாட்ஃபார்ம் கட்டணத்தை ஒரு ஆர்டருக்கு ₹10 லிருந்து ₹12 ஆக உயர்த்தியுள்ளது.

விமான நிலைய சேவைகளில் தாமதமானால் விமான நிலையங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்

முக்கிய விமான நிலையங்களில் பயணிகள் சேவைகளை மேம்படுத்துவதற்காக இந்திய விமான நிலைய பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம் (AERA) ஒரு புதிய திட்டத்தை முன்மொழிந்துள்ளது.

உலகளவில் ChatGPT செயலிழப்பு: இணையதளம், செயலியை அணுக முடியாமல் பயனர்களால் அவதி

OpenAI ஆல் உருவாக்கப்பட்ட பிரபலமான AI சாட்போட்டான ChatGPT தற்போது பெரும் செயலிழப்பை எதிர்கொள்கிறது.

போர்ஷே 911 டர்போ: செப்டம்பர் 7 ஆம் தேதி அதிகாரபூர்வமாக வெளியாகிறது

போர்ஷே புதுப்பிக்கப்பட்ட 911 டர்போ மற்றும் டர்போ எஸ் புதிய மாடல்களை வெளியிட தயாராகி வருகிறது.

CAA: 2024 க்குள் இந்தியா வந்த சிறுபான்மையினர் தொடர்ந்து தங்க அனுமதி வழங்கிய மத்திய அரசு

மதத் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க டிசம்பர் 31, 2024 வரை இந்தியாவிற்கு வந்த மற்ற நாட்டை சேர்ந்த சிறுபான்மையினர் தங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியாவின் சேவைகள் துறை ஆகஸ்ட் மாதத்தில் 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வளர்ச்சியை கண்டுள்ளது

இந்தியாவின் சேவைகள் துறை ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பெரிய ஏற்றத்தைக் கண்டது, 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது.

உத்தரபிரதேசத்தில் 52 வயது பெண்ணைக் கொன்ற 26 வயது இன்ஸ்டாகிராம் காதலன்

உத்தரபிரதேசத்தின் மெயின்புரியில் 52 வயது பெண் ஒருவர் தனது 26 வயது காதலனால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கல்யாணி பிரியதர்ஷனின் 'லோகா' படத்தை OTT-யில் எப்போது, ​​எங்கே பார்க்கலாம்?

கல்யாணி பிரியதர்ஷன் நடித்த மலையாள சூப்பர் ஹீரோ படமான 'லோகா அத்தியாயம் 1: சந்திரா' இன்னும் திரையரங்குகளில் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

'SSMB 29' படப்பிடிப்பின் போது கென்யா அமைச்சரை சந்தித்த இயக்குனர் ராஜமௌலி

திரைப்பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி சமீபத்தில் கென்யாவில் வெளியுறவுத்துறை அமைச்சரவை செயலாளர் முசாலியா முடவாடியை சந்தித்தார்.

தமிழக ஹோட்டல் சங்கம் பெப்சி, கோக் உள்ளிட்ட அமெரிக்கா பொருட்களை புறக்கணிக்க அதிரடி முடிவு

இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்ததைத் தொடர்ந்து, தமிழக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அமெரிக்கப் பொருட்களை புறக்கணிக்க தீர்மானித்துள்ளது.

GST கவுன்சில் இன்று கூடுகிறது: வரி குறைப்புக்கள், 2-வரி அடுக்கு அமைப்பு குறித்த முக்கிய முடிவுகள் எதிர்பார்க்கலாம்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் இன்று இரண்டு நாள் கூட்டத்தைத் தொடங்க உள்ளது.

சீனியர் சிடிஸன்களுக்கு மலிவான விமானக் கட்டணத்தை வழங்கும் ஏர் இந்தியா

ஏர் இந்தியா நிறுவனம் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு பிரத்யேக சலுகைகளை வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உணவு எப்படி சாப்பிடப்படுகிறது? சுபான்ஷூ சுக்லா பகிர்ந்த வீடியோ

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உணவு எப்படி சாப்பிடப்படுகின்றது என்பதைக் குறித்த இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக்கில் அஸ்வின் ரவிச்சந்திரன் இடம்பெறுவாரா?

முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன் விரைவில் ஆஸ்திரேலியாவின் முதன்மையான டி20 லீக்கான பிக் பாஷ் லீக்கில் (BBL) அறிமுகமாகலாம்.

நுரையீரல் ஆரோக்கியத்திற்கு நீங்கள் சாப்பிட வேண்டிய காய்கறிகள் இவைதான்

தொடர்ந்து காய்கறிகள் உண்பது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரும்.

அமெரிக்காவின் வரிகளுக்கு மத்தியில் ரஷ்யாவிடமிருந்து அதிக எண்ணெய் மற்றும் ஏவுகணைகளை வாங்க இந்தியா திட்டம் 

இந்தியாவும், ரஷ்யாவும் S-400 தரையிலிருந்து வான் ஏவுகணை அமைப்புகளை கூடுதலாக வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ரஷ்ய பாதுகாப்பு ஏற்றுமதி அதிகாரி ஒருவர் ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான TASS-இடம் தெரிவித்தார்.

"ஒருதலைப்பட்சமானது": 50% வரி சர்ச்சைக்கு மத்தியில் அமெரிக்க-இந்தியா உறவுகள் குறித்து டிரம்ப்

இந்தியாவின் வர்த்தகக் கொள்கைகள் மீதான தனது தாக்குதலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாயன்று தீவிரப்படுத்தியுள்ளார்.