
தங்கத்தின் விலை சற்று சரிவு; இன்றைய (செப்டம்பர் 4) விலை நிலவரம்
செய்தி முன்னோட்டம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை வியாழக் கிழமை (செப்டம்பர் 4) சற்று சரிவைச் சந்தித்துள்ளது. வியாழக் கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹10 குறைந்து ₹9,795 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹80 குறைந்து ₹78,360 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹11 குறைந்து ₹10,686 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹88 குறைந்து, ₹85,488 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையில் மாற்றமில்லை
18 காரட் தங்கத்தின் விலையும் சரிந்துள்ளது. 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹5 குறைந்து ₹8,110 ஆகவும், ஒரு சவரன் ₹40 குறைந்து ₹64,880 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே வெள்ளி விலை வியாழக்கிழமை எந்த மாற்றமும் இல்லாமல் நிலையாக உள்ளது. வெள்ளி விலை வியாழக் கிழமை நிலவரப்படி ஒரு கிராம் ₹137 ஆகவும், ஒரு கிலோ ₹1,37,000 ஆகவும் விற்பனை ஆகிறது. இதற்கிடையே, தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நீடித்து வரும் நிலையில், டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பு அச்சுறுத்தல் உள்ளிட்ட தற்போதைய சர்வதேச சூழல்கள் காரணமாக, இன்னும் சில காலத்திற்கு இதேபோன்ற ஏற்ற இறக்க நிலையே நீடிக்கும் என சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.