LOADING...
தமிழக ஹோட்டல் சங்கம் பெப்சி, கோக் உள்ளிட்ட அமெரிக்கா பொருட்களை புறக்கணிக்க அதிரடி முடிவு

தமிழக ஹோட்டல் சங்கம் பெப்சி, கோக் உள்ளிட்ட அமெரிக்கா பொருட்களை புறக்கணிக்க அதிரடி முடிவு

எழுதியவர் Venkatalakshmi V
Sep 03, 2025
11:51 am

செய்தி முன்னோட்டம்

இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்ததைத் தொடர்ந்து, தமிழக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அமெரிக்கப் பொருட்களை புறக்கணிக்க தீர்மானித்துள்ளது. இந்த முடிவை சங்கத் தலைவர் வெங்கடசுப்பு இன்று செய்தியாளர்களிடம் அறிவித்தார். அமெரிக்கா, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளதால் இந்த முடிவு என அவர் தெரிவித்தார். இதனையடுத்து, அமெரிக்க நிறுவனங்களான பெப்சி, கோக் உள்ளிட்டவற்றின் தயாரிப்புகளை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டதாகவும், அமெரிக்காவில் தயாரிக்கப்படும் மினரல் வாட்டர் பாட்டில்களும் இதற்குள் அடங்கும் எனவும் கூறினார். இதற்கு மாற்றாக, "இந்தியாவில் தரமான மாற்று தயாரிப்புகள் கிடைக்கின்றன. அவற்றையே பயன்படுத்துவோம்," என வெங்கடசுப்பு தெரிவித்தார்.

ஃபூட் டெலிவரி

ஃபூட் டெலிவரி ஆப்ஸ்களுக்கும் தடையா?

மேலும் அமெரிக்க ஆதரவு பெற்றதாகக் கூறப்படும் ஃபூட் டெலிவரி ஆப்கள் ஸ்விக்கி மற்றும் சொமேட்டோவையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். அதன் மாற்றாக, தமிழ்நாட்டிற்கே உரிய புதிய டெலிவரி செயலியான 'ZAAROZ' விரைவில் அறிமுகமாகவுள்ளது என்றும், அதில் தற்போதைய ஊழியர்களுக்கு வேலை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த தொழில் முனைவோர் ஒருவர் உருவாக்கிய இந்த செயலி முதன் முறையாக ஜூலை 1 ஆம் தேதி நாமக்கல் நகர் மற்றும் தாலுகாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கான பேச்சுவார்த்தை இறுதி வடிவம் பற்றுவருவதாகவும், விரைவில் அறிவிப்பு வெளிவரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த முடிவு தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post