LOADING...
இந்திய அணியின் மூத்த லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ரா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு
இந்திய அணியின் மூத்த லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ரா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

இந்திய அணியின் மூத்த லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ரா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 04, 2025
01:32 pm

செய்தி முன்னோட்டம்

25 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பிறகு, இந்திய அணியின் அனுபவமிக்க லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ரா, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தனது ஓய்வை அறிவித்துள்ளார். 42 வயதான இவர், தொடர்ந்து ஏற்பட்ட காயங்கள் மற்றும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளார். தனது ஓய்வு குறித்து அமித் மிஸ்ரா வெளியிட்ட அறிக்கையில், தனது கிரிக்கெட் பயணத்தில் உறுதுணையாக இருந்த பிசிசிஐ, ஹரியானா கிரிக்கெட் சங்கம், சக வீரர்கள், உதவி ஊழியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார். கிரிக்கெட்டில் தனது இந்த 25 வருட வாழ்க்கை மறக்க முடியாதது என்று அவர் குறிப்பிட்டார். ரசிகர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

புள்ளி விபரங்கள் 

அமித் மிஸ்ராவின் கிரிக்கெட் புள்ளி விபரங்கள் 

அமித் மிஸ்ராவின் கிரிக்கெட் வாழ்க்கை, குறிப்பாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக இருந்தது. அவர் இந்திய கிரிக்கெட் அணிக்காக 68 போட்டிகளில் விளையாடி, மொத்தம் 156 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேலும், இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியிலும் இவர் ஒரு முக்கிய வீரராகத் திகழ்ந்தார். ஐபிஎல்லில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உட்பட நான்கு அணிகளுக்காக விளையாடியுள்ளார். அவர் 162 ஐபிஎல் போட்டிகளில் 174 விக்கெட்டுகளை வீழ்த்தி, 7.37 என்ற சிறந்த எக்கானமியைப் பராமரித்துள்ளார். 2024 ஐபிஎல் சீசனில் தனது கடைசிப் போட்டியில் விளையாடிய அமித் மிஸ்ரா, ஓய்வுக்குப் பிறகும் பயிற்சியாளர் அல்லது வர்ணனையாளர் போன்ற ஒரு பணியில் கிரிக்கெட்டுடன் தொடர்ந்து இணைந்திருக்க விரும்புவதாகக் கூறியுள்ளார்.