LOADING...
புதிய ஜிஎஸ்டி விகிதத்தால் கார்களின் விலை உயர்கிறதா குறைகிறதா? விரிவான பார்வை
கார்களுக்கான புதிய ஜிஎஸ்டி விகிதம்

புதிய ஜிஎஸ்டி விகிதத்தால் கார்களின் விலை உயர்கிறதா குறைகிறதா? விரிவான பார்வை

எழுதியவர் Sekar Chinnappan
Sep 04, 2025
09:19 am

செய்தி முன்னோட்டம்

மத்திய அரசின் புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி 2.0) விதிகளின்படி, ஆடம்பர கார்கள் மற்றும் உயர் ரக மின்சார வாகனங்களின் விலை மாற்றங்களை சந்திக்க உள்ளது. இந்த புதிய விதிமுறைகளின் கீழ், ஆடம்பர வாகனங்கள் மற்றும் பெரிய என்ஜின் திறன் கொண்ட வாகனங்கள், ஆடம்பரப் பொருட்கள் என வகைப்படுத்தப்பட்டு, அவற்றிற்கு 40% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். கூடுதல் விபரங்கள் இங்கே:

வரி உயர்வு

வரி உயர்வை எதிர்கொள்ளும் கார்கள்

புதிய விதிகளின்படி, நான்கு மீட்டருக்கு மேல் நீளம் கொண்ட, 1,200 சிசிக்கு மேல் பெட்ரோல் என்ஜின் அல்லது 1,500 சிசிக்கு மேல் டீசல் என்ஜின் திறன் கொண்ட கார்கள் இனி 40% ஜிஎஸ்டி வரிக்கு உட்படும். இதேபோன்று, 1,500 சிசிக்கு மேல் என்ஜின் திறன் கொண்ட மற்றும் 4,000 மிமீக்கு மேல் நீளம் கொண்ட நடுத்தர மற்றும் பெரிய கார்களுக்கும் இந்த 40% ஜிஎஸ்டி விகிதம் பொருந்தும். எஸ்யுவி, எம்யுவி, எம்பிவி மற்றும் எக்ஸ்யுவி போன்ற வாகனங்களுக்கு, 1,500 சிசிக்கு மேல் என்ஜின் திறன், 4,000 மிமீக்கு மேல் நீளம், மற்றும் 170 மிமீ அல்லது அதற்கு மேல் தரை அனுமதி (ground clearance) கொண்டிருந்தால், அவற்றுக்கும் 40% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்.

தாக்கம்

ஜிஎஸ்டி வரி மறுசீரமைப்பால் ஏற்படும் தாக்கம்

புதிய ஜிஎஸ்டி விகிதங்களின்படி, இந்த வகைக் கார்களுக்கு ஜிஎஸ்டி விகிதம் கடுமையாக உயர்ந்தாலும், இழப்பீடு வரியில் (cess) செய்யப்படும் குறைப்பால், ஒட்டுமொத்த வரி உயர்வு ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்படும். இந்த வரி சீரமைப்பு பொதுமக்கள் அதிக பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதால், அவர்கள் கார் வாங்கும்போது நிதிச் சுமையை இந்த வரி சீரமைப்பு குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.