LOADING...
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது சரியா? உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டது சரியா? உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது சரியா? உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 04, 2025
11:51 am

செய்தி முன்னோட்டம்

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை (செப்டம்பர் 4) அவருக்குச் சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளது. திண்டுக்கல்லைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் சூர்யமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முன்னதாக கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இபிஎஸ் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்துச் சூர்யமூர்த்தி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை நிராகரிக்கக் கோரி இபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

மேல்முறையீடு

உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு

இந்த உத்தரவுக்கு எதிராக இபிஎஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அங்கு வழக்கை விசாரித்த நீதிபதி பி.பி. பாலாஜி, உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து, எடப்பாடி பழனிசாமியின் மனுவை ஏற்றுக்கொண்டார். இதன் மூலம், பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு செல்லாது என்று நீதிமன்றம் அறிவித்தது. இந்தத் தீர்ப்பானது எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தீர்ப்பு, 2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு சட்டரீதியான அங்கீகாரத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.