
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 5) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (செப்டம்பர் 5) தமிழகத்தில் கோவை மெட்ரோவில் மட்டும் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:- கோவை மெட்ரோ: காமராஜ் சாலை, பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ, வி.ஆர்.புரம், என்.கே. பாளையம், கிருஷ்ணாபுரம், ஹவுசிங் யூனிட், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஜி.வி.ரெசிடென்சி, மசக்காளிபாளையம், உப்பிலிபாளையம்
பெயர் மாற்றம்
மின் இணைப்பு பெயர் மாற்றம் இனி எளிது
தொடர்புடைய மற்றொரு செய்தியில், வீட்டு மின் இணைப்பின் பெயரை மாற்ற, தேவையில்லாத ஆவணங்களைக் குறைத்து, செயல்முறையை தமிழ்நாடு மின்சார வாரியம் எளிதாக்கியுள்ளது. அதன்படி, இனி படிவம் 2 ஐ சமர்ப்பிக்கத் தேவையில்லை. மின் இணைப்பின் பெயரை மாற்றுவதற்கு சொத்துப் பிரிவினை, விற்பனை அல்லது பரிசளிப்பு போன்ற காரணங்களுக்காக, சொத்து வரி ரசீது அல்லது விற்பனைப் பத்திரம் போன்ற ஏதேனும் ஒரு ஆவணத்தைச் சமர்ப்பித்தால் போதும். மேலும், உரிமையாளர் இறந்தால், வாரிசு சான்றிதழ் அல்லது சொத்து வரி ரசீது போதுமானது. இது பெயர் மாற்றத்தை விரைவுபடுத்தும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.