
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உணவு எப்படி சாப்பிடப்படுகிறது? சுபான்ஷூ சுக்லா பகிர்ந்த வீடியோ
செய்தி முன்னோட்டம்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உணவு எப்படி சாப்பிடப்படுகின்றது என்பதைக் குறித்த இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் காலடி பதித்த முதல் இந்தியராகவும், விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியராகவும் அடையாளம் கொண்டவர் சுபான்ஷூ சுக்லா. அண்மையில் அவர், விண்வெளியில் தனது உணவு அனுபவங்களைப் பதிவு செய்து, இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவாகப் பகிர்ந்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Food in space. Never thought I would have to learn to eat again 😅. Here I am explaining why habits matter when you are eating in space. If you are not mindful you can easily create a mess and you don’t want to be that guy. Solid mantra that works for anything in space “Slow is… pic.twitter.com/ZxVtqaM8Jz
— Shubhanshu Shukla (@gagan_shux) September 2, 2025
பதிவு
சுபான்ஷு சுக்லாவின் பதிவு
"விண்வெளியில் உணவு சாப்பிட கற்றுக்கொள்ள வேண்டிய நிலை வரும் என்று ஒருபோதும் நினைக்கவில்லை," என அந்த பதிவில் சுக்லா கூறியுள்ளார். மேலும், "பழக்கவழக்கங்கள் ஏன் முக்கியம் என்பதை இங்கே விளக்குகிறேன். நீங்கள் இதை புரிந்து கொள்ளவில்லை என்றால் குழப்பமாக இருக்கலாம்," என்றும் தெரிவித்துள்ளார். வீடியோவில், விண்வெளியில் சாப்பிடும் முறைகள், அதற்கான சவால்கள் மற்றும் அவற்றை எப்படி சமாளிக்கிறார் என்பதை சுபான்ஷூ சுக்லா நேரடியாக விளக்குகிறார். விண்வெளி பணிகளில் பொறுமையின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த வீடியோ பலரும் பார்வையிட்டிருப்பதோடு, சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.