LOADING...
ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அடுத்த தலைமுறைக்கானவை: பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அடுத்த தலைமுறைக்கானவை என பிரதமர் மோடி பாராட்டு

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அடுத்த தலைமுறைக்கானவை: பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 04, 2025
07:04 pm

செய்தி முன்னோட்டம்

மறைமுக வரி விதிப்பு முறையை மாற்றி அமைக்கும் ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். இந்த ஆண்டு நவராத்திரியில் அமலுக்கு வரும் இந்த புதிய வரி அமைப்பை, அடுத்த தலைமுறைக்கான சீர்திருத்தங்கள் என்று அவர் பெருமையாகக் குறிப்பிட்டார். "இப்போது ஜிஎஸ்டி இன்னும் எளிமையாக்கப்பட்டுள்ளது. 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகளே எஞ்சியுள்ளன. இது ஒவ்வொரு குடிமகன் மற்றும் வணிகத்திற்கும் எளிதாக இருக்கும்." என்று பிரதமர் கூறினார். ஜிஎஸ்டி கவுன்சில், 12% மற்றும் 28% ஆகிய வரி அடுக்குகளை நீக்கிவிட்டு, 5% மற்றும் 18% ஆகிய விகிதங்களை மட்டும் தக்கவைத்துள்ளது.

சீர்திருத்தம்

ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பிறகு முதல் சீர்திருத்தம்

இந்தியாவில் செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வரும் இந்த மாற்றங்கள், 2017 இல் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு மேற்கொள்ளப்பட்ட மிக முக்கியமான சீர்திருத்தங்களில் ஒன்றாகும். முன்பு அதிக வரி விதிக்கப்பட்ட பல பொருட்கள், இப்போது குறைந்த வரி விகிதங்களுக்கு மாற்றப்படுவதால், வீட்டு உபயோகப் பொருட்கள், தனிநபர் பராமரிப்புப் பொருட்கள், உணவகங்களில் உணவு, பயணம், மின்னணுக் கருவிகள் மற்றும் வாகனங்கள் போன்ற பல பொருட்களின் விலை குறையும். இந்தச் சீர்திருத்தங்கள், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயன் அளிக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார். "ஸ்கூட்டர்கள் மற்றும் கார்களின் ஜிஎஸ்டி விகிதங்கள் குறைக்கப்பட்டதால், அவை இன்னும் குறைந்த விலையில் கிடைக்கும்." என்று அவர் தெரிவித்தார்.