இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
அதிமுகவுடன் கூட்டணியா? பாஜக இருக்கும் கூட்டணியில் இடம்பெற மாட்டோம் என தமிழக வெற்றிக் கழகம் விளக்கம்
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தமிழ்நாட்டில் தேர்தல் கூட்டணிகள் குறித்த ஊகங்களைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி (இபிஎஸ்) சமீபத்தில் அளித்த பேட்டியைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வலுவான விளக்கத்தைக் கொடுத்துள்ளது.
இந்தியா கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது ஆம் ஆத்மி
ஆம் ஆத்மி கட்சி (AAP) INDIA கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 15ஆம் தேதி வாக்கில் பாஜகவுக்கு புதிய தேசியத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு; முன்னணி வேட்பாளர்கள் யார்?
தேசிய ஊடகங்களில் வரும் செய்திகளின்படி, சுதந்திர தினத்தன்று பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய தேசியத் தலைவர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.
மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும் இந்தியா - கனடா உறவு; உயர் ஆணையர்களை பணியமர்த்த நடவடிக்கை
இந்தியாவும் கனடாவும் இராஜதந்திர உறவுகளை இயல்பாக்குவதற்கு பாடுபடுகின்றன. இரு நாடுகளும் பரஸ்பரம் தலைநகரங்களில் உயர் ஆணையர்களை மீண்டும் நிறுவ நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய வெளியுறவுத்துறை உறுதிப்படுத்தியது.
சிந்து நதிநீர் ஒப்பந்த ரத்துக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் நான்கு முக்கிய நீர்மின் திட்டங்களை விரைவுபடுத்துகிறது இந்தியா
பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் நான்கு பெரிய நீர்மின் திட்டங்களுக்கான பணிகளை இந்தியா கணிசமாக துரிதப்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் மகன் அமலாக்கத்துறையால் கைது
₹2,000 கோடி மதிப்பிலான மதுபான ஊழல் தொடர்பாக சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் மகன் சைதன்யா பாகேலை அமலாக்க இயக்குநரகம் (ED) கைது செய்துள்ளது.
TRF மீதான அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை இந்தியாவிற்கு எப்படி பயன்தரும்?
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட கொடிய பயங்கரவாதத் தாக்குதலுக்கு காரணமான, லஷ்கர்-இ-தொய்பாவின் கிளையான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) ஐ வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஒரே நாளில் 40 பெங்களூரு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
வெள்ளிக்கிழமை காலை பெங்களூருவில் குறைந்தது 40 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன.
உச்ச நீதிமன்ற குழுவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலேயே மனு தாக்கல் செய்த நீதிபதி யஷ்வந்த் வர்மா
அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா, தனது பதவி நீக்கத்தை பரிந்துரைத்த உள்ளக விசாரணை அறிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையாவை 'கொன்ற' மெட்டா மொழிபெயர்ப்பு கருவி; இணையத்தில் வைரலாகும் ட்வீட்
கர்நாடக முதல்வர் சித்தராமையா இறந்துவிட்டதாக மெட்டாவின் ஆட்டோமேட்டிக் மொழிபெயர்ப்புக் கருவி தவறாக மொழிபெயர்த்த விவகாரம் இணையத்தில் விவாதத்தை தூண்டியுள்ளது.
சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் ஜூலை 22ம் தேதி வரை கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சரிபார்க்கப்படாத தகவல்களை பரப்புவதாக அமெரிக்க ஊடகங்கள் மீது AAIB விமர்சனம்
ஜூன் 12 அன்று நடந்த ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விபத்து தொடர்பான தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் சரிபார்க்கப்படாத தகவல்களை வெளியிட்டதற்காக விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) சர்வதேச ஊடகங்களின் சில பிரிவுகளை கடுமையாக விமர்சித்துள்ளது.
சுதந்திர தினத்திற்கு முன்பு Made in India ஏகே-203 ரைபிள்கள் இந்திய ராணுவத்திற்கு வழங்கப்படும் என தகவல்
இந்திய ராணுவம் ஆகஸ்ட் 15க்கு முன் அடுத்த தொகுதி ஏகே-203 தாக்குதல் ரைபிள்களைப் பெற உள்ளது.
கண்ணியமாக பேச வேண்டும்; காமராஜர் தொடர்பான சர்ச்சை குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
கிங் மேக்கர் எனப் போற்றப்படும் தமிழகத்தின் மிகப்பெரும் தலைவர்களில் ஒருவரான காமராஜரைப் பற்றிய சமீபத்திய பொது சர்ச்சைகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவலை தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியா விபத்து விசாரணை விமானத்தை இயக்கிய மூத்த விமானியின் பக்கம் திரும்பியுள்ளது
கடந்த மாதம் நடந்த ஏர் இந்தியா விபத்து குறித்த விசாரணை, இப்போது விமானத்தின் கேப்டன் சுமீத் சபர்வாலின் செயல்களில் மீது கவனம் செலுத்துகிறது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 18) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஜூலை 18) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து 8வது ஆண்டாக இந்தியாவின் தூய்மையான நகரமாக இந்தூர் தேர்வு
2024-25 ஆம் ஆண்டுக்கான ஸ்வச் சர்வேக்ஷன் விருது வழங்கும் விழாவில், 'Super Swachh League Cities'-இல் இந்தூர் தொடர்ந்து எட்டாவது ஆண்டாக தூய்மையான நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் பள்ளியில் 9 வயது சிறுமி தொடர் மாரடைப்பு ஏற்பட்டதில் உயிரிழப்பு
ராஜஸ்தான் மாநிலம் சிகார், டான்டா நகரில் உள்ள பள்ளியில் செவ்வாய்க்கிழமை ஒன்பது வயது சிறுமி பிராச்சி குமாவத் மாரடைப்பால் இறந்தார் எனக்கூறப்படுகிறது.
கூட்ட நெரிசலுக்கு RCB தான் காரணம் என்று கர்நாடகா அரசு அறிக்கை; விராட் கோலியின் பெயரும் இடம்பெற்றுள்ளது
ஜூன் 4ஆம் தேதி RCB கிரிக்கெட் அணியின் ஐபிஎல் வெற்றி அணிவகுப்பின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) மீது கர்நாடக அரசு குற்றம் சாட்டியுள்ளது.
போயிங் 787 விமானங்கள் தொடர்பான விசாரணையில் ஏர் இந்தியா கண்டறிந்தது என்ன?
போயிங் 787 ட்ரீம்லைனர் விமானக் குழுவில் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச் லாக்கிங் வழிமுறைகளின் ஆய்வுகளை ஏர் இந்தியா முடித்துள்ளது.
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தான் எல்லையில் ரோந்து பணிக்காக அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் அடுத்த வாரம் வருகின்றன
இந்தியா ஜூலை 21 ஆம் தேதி அமெரிக்காவிலிருந்து மூன்று AH-64E அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்களின் முதல் தொகுப்பை பெறும் என்று NDTV தெரிவித்துள்ளது.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் வெளியூர் பேருந்துகள் இன்றுடன் சேவை நிறுத்தம்
திருச்சி மாநகரின் முக்கியமான வரலாற்றுச் சின்னமாக இருந்த மத்திய பேருந்து நிலையம், 53 ஆண்டுகளுக்குப் பின்னர், வெளியூர் பேருந்து சேவையை இன்றுடன் (ஜூலை 16, 2025) நிறைவு செய்கிறது.
பஹல்காம் தாக்குதல், பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம்: மழைக்கால கூட்டத்தொடரில் காங்கிரஸ் கேள்வி எழுப்ப திட்டம்
ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பல முக்கியமான பிரச்சினைகளை எழுப்ப காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 25-இல் மதுரையில் நடைபெறும்
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு வருகிற ஆகஸ்ட் 25ஆம் தேதி திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்று கட்சித் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
ஏமனில் நிமிஷா பிரியாவின் மரணதண்டனையை ஒத்திவைக்க உதவிய 'இந்தியாவின் கிராண்ட் முப்தி' ஷேக் அபுபக்கர் அகமது யார்?
ஏமனில் இந்திய செவிலியர் நிமிஷா ப்ரியாவின் மரணதண்டனை ஒத்திவைக்கப்படுவதை உறுதி செய்ததில் பிரபல முஸ்லிம் மதகுரு காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியார் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
புகழ்பெற்ற மராத்தான் ஓட்டப்பந்தய வீரர் ஃபௌஜா சிங்கின் மரணம் தொடர்பாக NRI கைது
புகழ்பெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் ஃபௌஜா சிங்கின் மரணம் தொடர்பாக பஞ்சாப் காவல்துறை, அமிர்த்பால் சிங் தில்லான் என்ற 30 வயது NRI ஒருவரை கைது செய்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஜூலை 17) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
ஜப்பானை போல இந்தியாவிலும் வருகிறது புல்லட் ரயில்; எங்கே தெரியுமா?
மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்லை ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஏமனில் செவிலியர் நிமிஷா பிரியாவின் மரணதண்டனை ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல்
ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 38 வயதான கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரணதண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம்: பொதுமக்கள் என்னென்ன சேவைகளுக்கு விண்ணப்பிக்கலாம்? முழுமையான விவரம்
தமிழ்நாடு அரசு ஆரம்பித்துள்ள 'உங்களுடன் ஸ்டாலின்' மக்கள் தொடர்புத் திட்டம், நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் துறைவாரியான பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.
ஜூலை 25ஆம் தேதி கமல்ஹாசன் ராஜ்யசபா MPயாக பதவியேற்கிறார்: மக்கள் நீதி மய்யம்
மக்கள் நீதி மய்யம் (மநீம) தலைவர் கமல்ஹாசன், நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராக ஜூலை 25ஆம் தேதி பதவியேற்கவுள்ளதாக அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இன்று காலை வரை மழைக்கு வாய்ப்பு: IMD
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை மற்றும் கனமழை தாக்கம் தொடரக்கூடிய நிலையில் உள்ளது.
கடலூரில் இன்று முதல் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டம்: முதல் கட்டத்தில் 3,563 முகாம்கள்
மக்கள் குறைகளை நேரடியாக கேட்டு தீர்வு காணும் நோக்கில் உருவாக்கப்பட்ட "உங்களுடன் ஸ்டாலின்" என்ற புதிய தலைமைச்செயலாளர் திட்டத்தை, முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தொடங்கி வைக்கிறார்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 16) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (ஜூலை 16) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
NEET தேர்ச்சி பெற்ற மூன்று சீனியர் சிட்டிசன்ஸ், MBBS படிப்புக்கு விண்ணப்பம்!
"கல்விக்கு வயது ஒரு தடையல்ல" என்பதை நிரூபிக்கும் வகையில், இந்தாண்டு நீட் தேர்வில் வெற்றி பெற்ற மூன்று மூத்த குடிமக்கள், வயது 60-ஐ தாண்டியிருந்தாலும், தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளனர்.
தம்பதிகளுக்கிடையே நடைபெற்ற உரையாடல் ரகசியமாக பதிவு செய்திருந்தாலும், அது விவகாரத்திற்கான சான்றாகும்: உச்ச நீதிமன்றம்
தம்பதிகளுக்கு இடையே ரகசியமாக பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடல்களை சட்ட நடவடிக்கைகளில் ஆதாரமாகப் பயன்படுத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
"எங்கள் கையை மீறிவிட்டது": ஏமனில் மரணதண்டனை எதிர்கொள்ளும் நிமிஷாவின் வழக்கில் மத்திய அரசு வாதம்
கேரள செவிலியர் நிமிஷா பிரியாவை ஜூலை 16 ஆம் தேதி ஏமனில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்த மரணதண்டனையிலிருந்து காப்பாற்ற அனைத்து ராஜதந்திர முயற்சிகளும் தீர்ந்துவிட்டதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியா விபத்து குறித்த அறிக்கையில் இயந்திர, பராமரிப்பு பிரச்சினைகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்கிறார் நிறுவனத்தின் CEO
ஜூன் 12 அன்று ஒரு பயங்கர விபத்தில் சிக்கிய போயிங் 787-8 விமானத்தில் எந்த இயந்திர அல்லது பராமரிப்பு பிரச்சனைகளும் இல்லை என்று ஏர் இந்தியா CEO கேம்பல் வில்சன் தெளிவுபடுத்தியுள்ளார்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் 14 ஆண்டுகள் கழித்து கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்தது
முருகனின் ஆறு படைவீடுகளில் முதன்மையானதாக கருதப்படும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், இன்று (ஜூலை 14) அதிகாலை 5:30 மணிக்கு அரோகரா கோஷம் விண்ணைப்பிளக்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.