
ஜூலை 25ஆம் தேதி கமல்ஹாசன் ராஜ்யசபா MPயாக பதவியேற்கிறார்: மக்கள் நீதி மய்யம்
செய்தி முன்னோட்டம்
மக்கள் நீதி மய்யம் (மநீம) தலைவர் கமல்ஹாசன், நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராக ஜூலை 25ஆம் தேதி பதவியேற்கவுள்ளதாக அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மநீம வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: "மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை (ராஜ்ய சபா) தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் வருகிற ஜூலை 25-ஆம் தேதி அன்று (25-07-2025) நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு பதவியேற்கவுள்ளார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். " என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
நாடாளுமன்றத்தில் தலைவர் திரு. @ikamalhaasan அவர்கள் பதவியேற்பு!!
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) July 15, 2025
மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை (ராஜ்ய சபா) தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலங்களவை… pic.twitter.com/SkzygJeCXn
மற்ற உறுப்பினர்கள்
போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பின்வருமாறு: திமுக சார்பில்: பி. வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் அதிமுக சார்பில்: தனபால் ஐ.எஸ்., இன்பதுரை திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூவரும், ஜூலை 25ஆம் தேதி பதவியேற்கவுள்ளனர். இந்நிலையில், நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 21ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில், கமல்ஹாசன் தனது முதல் பதவி காலத்தைத் தொடங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.