
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இன்று காலை வரை மழைக்கு வாய்ப்பு: IMD
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை மற்றும் கனமழை தாக்கம் தொடரக்கூடிய நிலையில் உள்ளது. இன்று (ஜூலை 15) காலை 10 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று மழை ஏற்படும் மாவட்டங்கள் - கோயம்புத்தூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் என கூறப்படுகிறது. அது மட்டுமின்றி கோயம்புத்தூர், நீலகிரி, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை (ஜூலை 16) கனமழை பெய்யும் சாத்தியம் உள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக மழை நீடிக்கும்
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்தில் மழை தொடரும் எனவும் IMD கணித்துள்ளது. தமிழகத்தின் உள் மாவட்டங்கள்— குறிப்பாக தேனி, தென்காசி, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என வானிலை மையம் எச்சரிக்கிறது. இம்மாவட்டங்களுக்கு, வரும் 17ம் தேதி மற்றும் 18ம் தேதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை குறைந்தபட்ச வெப்பநிலை 100°F (37.7°C), அதிகபட்சம் 102°F (38.8°C) வரை இருக்கலாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.