
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம்: பொதுமக்கள் என்னென்ன சேவைகளுக்கு விண்ணப்பிக்கலாம்? முழுமையான விவரம்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு அரசு ஆரம்பித்துள்ள 'உங்களுடன் ஸ்டாலின்' மக்கள் தொடர்புத் திட்டம், நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் துறைவாரியான பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், மக்கள் நேரடியாக தங்களது தேவைகள், புகார்கள் மற்றும் நலன்கள் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து தீர்வுகளை பெறலாம். இந்த திட்டத்தின் கீழ், நகர்ப்புறங்களில் - 13 துறைகள் மூலம் 43 சேவைகள், ஊரகப்பகுதிகளில் - 15 துறைகள் மூலம் 46 சேவைகள் வழங்கப்படவுள்ளன. அனைத்து விண்ணப்பங்களுக்கும் தேவைப்படும் ஆவணங்கள் சரியாக இருப்பின், அதிகாரிகள் ஒரே நாளில் அல்லது அதிகபட்சமாக 45 நாட்களுக்குள் தீர்வு தரப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
முக்கிய சேவைகள்
முக்கிய சேவைகள் மற்றும் விண்ணப்பிக்கக்கூடிய திட்டங்கள்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்: விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்: குடும்ப அட்டை ஆதார் அட்டை வங்கிக் கணக்கு புத்தகம் மின்கட்டண ரசீது தகுதி: ஆண்டுக்கு ₹2.5 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் 5 ஏக்கருக்கும் குறைவான நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்கும் குறைவான புன்செய் நிலம் ஆண்டு மின்சார உபயோகம் 3,600 யூனிட்டுக்கு குறைவாக இருக்க வேண்டும் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே உதவித்தொகை அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், மக்கள் பிரதிநிதிகள் அல்லாதவர்கள் அரசு மானியம் பெற்று வாங்கிய வாகனம் இருப்பினும், தகுதியுள்ள குடும்ப பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
நகர்ப்புற முகாம்
நகர்ப்புற முகாம்களில் விண்ணப்பிக்கக்கூடிய சேவைகள்
முதல்வர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் ஆதரவற்ற குழந்தைகளுக்கான நிதி உதவித் திட்டம் கட்டட வரைபட திட்ட அனுமதி கலைஞர் கைவினைத் திட்டம் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (வேலையில்லா இளைஞர்களுக்காக) முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் உறுப்பினராக இணைவது மகளிர் சுய உதவிக்குழு கடன்
ஊரகப் பகுதி
ஊரகப் பகுதிகளில் விண்ணப்பிக்கக்கூடிய சேவைகள்
100 நாள் வேலை உறுதி திட்டம் மகளிர் சுய உதவிக்குழு கடன் பட்டா மாறுதல் வேளாண் இடுபொருட்கள், எந்திரங்கள் மானியத்தில் பெறுவது சிறு, குறு விவசாயக் கடன் கட்டட வரைபட அனுமதி கலைஞர் கைவினைத் திட்டம் கடல்சார் கல்விக்கான உதவித்தொகை மீன்பிடி உபகரணங்களுக்கு 50% மானியம் அலங்கார மீன் வளர்ப்பு தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் முதியோர், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பட்டியலின/பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை நலவாரிய உறுப்பினர் சேர்க்கை நாட்டுக்கோழி பண்ணை நிறுவும் திட்டம்