Page Loader
கர்நாடக முதல்வர் சித்தராமையாவை 'கொன்ற' மெட்டா மொழிபெயர்ப்பு கருவி; இணையத்தில் வைரலாகும் ட்வீட்
Facebook இரங்கல் செய்தியை மொழிபெயர்த்தபோது, ஒரு பெரிய தவறு நிகழ்ந்ததுள்ளது

கர்நாடக முதல்வர் சித்தராமையாவை 'கொன்ற' மெட்டா மொழிபெயர்ப்பு கருவி; இணையத்தில் வைரலாகும் ட்வீட்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 18, 2025
09:51 am

செய்தி முன்னோட்டம்

கர்நாடக முதல்வர் சித்தராமையா இறந்துவிட்டதாக மெட்டாவின் ஆட்டோமேட்டிக் மொழிபெயர்ப்புக் கருவி தவறாக மொழிபெயர்த்த விவகாரம் இணையத்தில் விவாதத்தை தூண்டியுள்ளது. ஃபேஸ்புக்கில், கர்நாடக முதல்வர் அலுவலகம் (CMO), பழம்பெரும் நடிகை சரோஜா தேவியின் மறைவிற்கு வெளியிட்ட இரங்கல் செய்தியை மொழிபெயர்த்தபோது, ஒரு பெரிய தவறு நிகழ்ந்ததுள்ளது. மூத்த நடிகை சரோஜா தேவியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க கன்னடத்தில் எழுதப்பட்ட இந்தப் பதிவு, ஆங்கிலத்தில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டதால், சித்தராமையா கடும் விமர்சனத்தையும், மெட்டாவுக்கு அதிகாரப்பூர்வ செய்தியையும் அனுப்பியுள்ளார்.

பதிவு

தவறாக மொழிபெயர்க்கப்பட்ட பதிவு

மறைந்த நடிகை சரோஜா தேவியின் உடலுக்கு முதல்வர் மரியாதை செலுத்தியதை குறிப்பிட்டு போடப்பட்டது ஒரிஜினல் பதிவு. அது, "முதல்வர் சித்தராமையா நேற்று காலமானார், பன்மொழி நட்சத்திரம், மூத்த நடிகை பி. சரோஜாதேவியின் உடலை தரிசனம் செய்து இறுதி மரியாதை செலுத்தினார்," என்று பதிவின் தவறான மொழிபெயர்ப்பு கூறியுள்ளது. இது சித்தராமையாவை கடுப்பேற்றியது. உடனே அவர் மெட்டாவிற்கு ஒரு கண்டன கடிதத்தை எழுதியதாக கூறப்படுகிறது. அதில் அவர், சமூக ஊடக தளங்கள் பொறுப்புடன் செயல்படுமாறு கேட்டுக் கொண்டார், மேலும் அது துல்லியமாக இருக்கும் வரை மெட்டா அதன் கன்னட தானியங்கி மொழிபெயர்ப்பு அம்சத்தை நிறுத்தி வைக்குமாறு வலியுறுத்தினார். மெட்டா பின்னர் மொழிபெயர்ப்பை சரிசெய்ததாகத் தெரிகிறது.