இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
டெல்டா விவசாயிகளுக்கு நிம்மதி: பயிர் காப்பீடு செய்வதற்கான அவகாசம் நீட்டிப்பு; தமிழக அரசு அறிவிப்பு
டெல்டா மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் சம்பா நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கு விதிக்கப்பட்டக் காலக்கெடுவை, வரும் நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டித்துத் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மிக கனமழைக்கு வாய்ப்பு; மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக அரசு அவசர எச்சரிக்கை
தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியின் காரணமாக, காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழக அரசு மாநிலத்தின் அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஐந்து நாட்களுக்குக் கனமழை நீடிக்கும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சனிக் கிழமை (நவம்பர் 15) தெரிவித்துள்ளது.
தள்ளுவண்டிக் கடைகளுக்கும் FSSAI உரிமம் கட்டாயம்; தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை அறிவிப்பு
தமிழ்நாட்டில் பொது இடங்களில் தள்ளுவண்டியில் வைத்துச் சுடச்சுட உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து வகை நடமாடும் கடைகளுக்கும் FSSAI (இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்) சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை சனிக்கிழமை (நவம்பர் 15) அறிவித்துள்ளது.
மலிவு விலை மருந்தகங்கள்: கூடுதலாக 10 புதிய AMRIT மருந்தகங்களை தொடங்கியது மத்திய அரசு
மலிவு விலையில் தரமான மருந்துகள் கிடைப்பதை உறுதிசெய்து, நாட்டில் சுகாதார வசதிகளை வலுப்படுத்தும் நோக்குடன் மேலும் 10 புதிய AMRIT (Affordable Medicines and Reliable Implants for Treatment) மருந்தகங்களை மத்திய அரசு சனிக்கிழமை (நவம்பர் 15) தொடங்கியது.
பீகார் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து லாலுவின் மகள் ரோகிணி ஆச்சார்யா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவிப்பு
2025 பீகார் சட்டமன்றத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணி படுதோல்வியைச் சந்தித்த ஒரு நாள் கழித்து, அக்கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா தாம் அரசியலில் இருந்து விலகுவதாகவும், தனது குடும்பத்தை உதறித் தள்ளுவதாகவும் சனிக்கிழமை (நவம்பர் 15) அறிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு குட் நியூஸ்; நவம்பர் 19 அன்று PM-KISAN 21வது தவணையை வெளியிடுகிறார் பிரதமர் மோடி
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-KISAN) திட்டத்தின் 21வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி வரும் நவம்பர் 19, 2025 அன்று வெளியிடவுள்ளார்.
குரூப் தேர்வர்களுக்கு கடைசி வாய்ப்பு; நவம்பர் 23க்குள் இதை பண்ணிடுங்க; டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 4 (குரூப் 4) மூலம் நேரடி நியமனத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள தேர்வர்களுக்கு, விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை மீண்டும் பதிவேற்றம் செய்ய இறுதி வாய்ப்பை வழங்கியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் காவல் நிலையத்தில் பயங்கர வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழப்பு; 29 பேர் காயம்
ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள நௌகாம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) நள்ளிரவில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களைச் சோதனை செய்தபோது எதிர்பாராதவிதமாக இந்த விபத்து நடந்ததில், ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
மேம்படுத்தப்பட்ட கடல்சார் பாதுகாப்புக்காக புதிய தலைமுறை MP-AUVsஐ உருவாக்கியது டிஆர்டிஓ; கண்ணிவெடிகள் போன்ற பொருட்களைக் கண்டறிய உதவும்
இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), புதிய தலைமுறை கையடக்கத் தானியங்கி நீருக்கடியில் இயங்கும் வாகனங்களை (Man-Portable Autonomous Underwater Vehicles - MP-AUVs) வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.
தமிழக அரசின் இலவச மிதிவண்டித் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்குக் கல்விப் பயணத்தை எளிதாக்கும் வகையில், 2025-26 ஆம் ஆண்டுக்கான இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தைத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) தொடங்கி வைத்தார்.
பீகார் தேர்தல் முடிவுகளால் ஏமாற்றம்: வாக்குப் பதிவு சமயத்திலும் ₹10,000 வழங்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரு வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட், வாக்குப்பதிவின்போது பெண்களுக்கு ₹10,000 வழங்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
கல்லூரி மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.25,000 உதவித்தொகை; தமிழக அரசின் திட்டத்தில் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
தமிழக அரசு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், பழங்குடியினர் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் கல்லூரி மாணவர்களுக்காக தமிழ்நாடு தொல்குடியினர் புத்தாய்வுத் திட்டத்தை (TNFTR) செயல்படுத்தி வருகிறது.
'நல்லாட்சியின் வெற்றி': பீகார் தேர்தலில் NDA அபார வெற்றி பெற்றதால் மோடி
பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மகத்தான வெற்றியை நோக்கி செல்லும் வேளையில், நல்லாட்சியும் வளர்ச்சியும் வெற்றி பெற்றுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
பயங்கரவாத சதிகாரர்கள் 2,600 கிலோ NPK, 1,000 கிலோ அம்மோனியம் நைட்ரேட் குவியல்களை எவ்வாறு குவித்தனர்
டெல்லி செங்கோட்டை அருகே 13 பேர் கொல்லப்பட்டு 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்த குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணையில், நான்கு நகரங்களில் பல இடங்களில் "தொடர் குண்டுவெடிப்புகளை" நடத்துவதற்கு நன்கு திட்டமிடப்பட்ட சதித்திட்டம் இருந்ததாக லைவ்மிண்ட் அறிக்கை தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், சனிக்கிழமை (நவம்பர் 15) நடைபெறவுள்ள ஆசிரியர்கள் தகுதித் தேர்வு (TET) காரணமாக, அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகப் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் விசாரணையை விரிவுபடுத்திய NIA, பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன
ஃபரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலா மருத்துவக் கல்லூரி மற்றும் அதன் தாய் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பயங்கரவாத வலையமைப்பு குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) தீவிரப்படுத்தியுள்ளது.
பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025: மண்ணை கவ்வுகிறதா பிரசாந்த் கிஷோரின் 'ஜன் சுராஜ்'?
பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025-க்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தற்போது உறுதியாகி வரும் நிலையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அமோக வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைக்கும் நிலையில் உள்ளது.
ஆன்லைனில் SIR படிவங்களை இவர்களால் மட்டும்தான் சமர்ப்பிக்க முடிவும்; தேர்தல் ஆணையம் விளக்கம்
தமிழகத்தில் நடைபெற்று வரும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் (SIR) ஒரு பகுதியாக, வாக்காளர் கணக்கீட்டுப் படிவங்களை ஆன்லைனில் பூர்த்தி செய்வதற்கு ஒரு முக்கிய நிபந்தனையைத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.
விவசாயிகளே அலெர்ட்; பயிர்க் காப்பீடு செய்ய நாளையே கடைசி நாள்
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களுக்குப் பயிர்க் காப்பீடு செய்ய சனிக்கிழமை (நவம்பர் 15) கடைசி நாள் என மாநில வேளாண் அதிகாரிகள் விவசாயிகளுக்கு அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2025: 180+ தொகுதிகளில் NDA கூட்டணி அமோக முன்னிலை
பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025-க்கான வாக்கு எண்ணிக்கை தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பீகார் தேர்தலில் 160 இடங்களுக்கு மேல் முன்னிலை; மெகா வெற்றியை நோக்கி தேசிய ஜனநாயகக் கூட்டணி
2025 பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இரண்டு மணி நேரத்தைக் கடந்த நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 160 இடங்களைக் கடந்து அசுர வேகத்தில் முன்னிலை வகிக்கிறது.
உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 15) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (நவம்பர் 15) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் மறுநாள் முதல் கனமழைக்கு வாய்ப்பு!
வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடையும் நிலையில், தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் நாளை மறுநாள் (நவம்பர் 16, 2025) முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025: விறுவிறுப்பாகத் தொடங்கிய வாக்கு எண்ணிக்கை!
பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் 2025-க்கான வாக்கு எண்ணிக்கை இன்று (நவம்பர் 14, 2025) காலை 8 மணிக்குத் தொடங்கியது.
டெல்லி குண்டுவெடிப்பு தீவிரவாதி டாக்டர் உமர் நபியின் வீட்டை இடித்து தள்ளிய பாதுகாப்புப் படையினர்
இந்த வாரம் நடந்த செங்கோட்டை குண்டுவெடிப்பில் முக்கிய சந்தேக நபரான டாக்டர் உமர் நபியின் புல்வாமா வீட்டினை பாதுகாப்புப் படையினர் இடித்து தள்ளியதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
அல் ஃபலா பல்கலைக்கழகத்தின் உறுப்பினர் உரிமையை ரத்து செய்து இந்திய பல்கலைக்கழகங்கள் சங்கம்; இணையதளமும் முடக்கம்
டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்புச் சம்பவத்தில், அல் ஃபலா பல்கலைக்கழகத்தின் (Al Falah University) இரண்டு ஆசிரியர்கள் மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் அதிர்ச்சியூட்டும் பின்னணியில், இந்தியப் பல்கலைக்கழகங்கள் சங்கம் (AIU) அந்தப் பல்கலைக்கழகத்தின் உறுப்பினர் உரிமையை உடனடியாக இடைநீக்கம் செய்துள்ளது.
"இந்தியா மீது கைவைத்தால் என்ன ஆகும் என உலகை எச்சரிக்கும் தண்டனை": டெல்லி குண்டுவெடிப்பிற்கு அமித்ஷா வார்னிங்
டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை உலகளவில் ஒரு வலுவான செய்தியை அனுப்பும் என்றும், இதுபோன்ற தாக்குதல்கள் மீண்டும் இந்தியாவில் ஒருபோதும் முயற்சிக்கப்படக்கூடாது என்பதை தெளிவுபடுத்தும் என்றும் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா எச்சரித்தார்.
டெல்லி குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட மூன்றாவது கார் அல்-ஃபாலா பல்கலைக்கழத்தில் இருந்து பறிமுதல்
செங்கோட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் ஈடுபட்ட டாக்டர் உமர் உன் நபி உளவு பார்க்கப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு மாருதி பிரெஸ்ஸா, ஹரியானாவின் அல்-ஃபலா பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக TOI தெரிவித்துள்ளது.
குழந்தைகள் தின ஸ்பெஷல்: மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு இலவச மலை ரயில் பயணம் ஏற்பாடு
குழந்தைகள் தினத்தை (நவம்பர் 14) முன்னிட்டு, டார்ஜிலிங் இமாலயன் ரயில்வே (DHR), மாற்றுத்திறனாளிச் சிறுவர்களுக்காகச் சிலிகுரியில் இருந்து ரோங்டாங் வரைப் பாரம்பரிய மலை ரயில் பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது.
நிலைமை கவலைக்கிடம்; டெல்லி காற்று மாசுபாடு குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கவலை
டெல்லி தேசியத் தலைநகர் பிராந்தியத்தில் காற்றுத் தரக் குறியீடு (AQI) மிகவும் மோசமான பிரிவில் நீடிப்பதால், உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை (நவம்பர் 13) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஃபரிதாபாத் அல்-ஃபலா பல்கலைக்கழகம்: 'போலி' NAAC அங்கீகாரம்; சதித்திட்டத்தின் மையமாக செயல்பட்ட 'அறை 13
டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலா பல்கலைக்கழகத்தின் மீது தற்போது பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்; அகவிலைப்படி 55% இலிருந்து 58% ஆக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாக, அவர்களின் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (நவம்பர் 13) அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
யுபிஎஸ்சி நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்றவர்களுக்குத் தமிழக அரசின் ₹50,000 ஊக்கத்தொகை; விண்ணப்பிப்பது எப்படி?
மத்திய அரசுப் பணிகளுக்கான குடிமைப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டிலிருந்து தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்குடன், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் யுபிஎஸ்சி நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்றவர்களுக்கான ஊக்கத்தொகைத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இன்று முதல் ஒரு ரூபாய் கட்டணத்தில் சென்னை முழுக்க பயணிக்கலாம்; சூப்பர் சலுகை அறிவிப்பு
சென்னை மாநகரப் பொதுப் போக்குவரத்து வசதிகளை ஒரே தளத்தின் கீழ் கொண்டு வரும் விதமாக, கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி தொடங்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட சென்னை ஒன் (Chennai One) செயலி, மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
செங்கோட்டையில் குண்டுவெடிப்பதற்கு முன்னர் மசூதிக்கு சென்ற தீவிரவாதி; வெளியான CCTV காட்சி
செங்கோட்டை குண்டுவெடிப்பு அருகே வெடித்த i20 காரை ஓட்டிச் சென்ற டாக்டர் உமர் உன் நபி, சம்பவத்திற்கு முன்பு பழைய டெல்லியில் உள்ள ஃபைஸ்-இ-இலாஹி மசூதிக்குள் நுழைந்து வெளியேறுவது கேமராவில் பதிவாகியுள்ளது.
டாக்டர் உமர் தலைமையில் 8 பேர் கொண்ட 'ஜெய்ஷ்' குழு அயோத்தியா உட்பட 4 இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது
கடந்த நவம்பர் 10 அன்று டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக "பயங்கரவாதச் செயல்" என்று உறுதிப்படுத்தியுள்ளது.
2026 ஆம் ஆண்டில் எந்தெந்த நாட்களுக்கு பொது விடுமுறை? பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு
தமிழக அரசு, 2026ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
உ.பி.யில் இரவு நேரத்தில் பணிபுரியும் பெண்களுக்கு இரட்டிப்பு ஊதியம்; தொழிலாளர் சட்டத்தில் முக்கியச் சீர்திருத்தம்
பணிபுரியும் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் ஒரு முக்கியச் சீர்திருத்தமாக, உத்தரப் பிரதேச அரசு இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை பெண்கள் இரவுப் பணிகளில் பணியாற்ற அனுமதி அளித்து ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 14) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.