LOADING...
பீகார் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து லாலுவின் மகள் ரோகிணி ஆச்சார்யா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவிப்பு
பீகார் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து லாலுவின் மகள் ரோகிணி ஆச்சார்யா அதிரடி முடிவு

பீகார் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து லாலுவின் மகள் ரோகிணி ஆச்சார்யா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Nov 15, 2025
04:11 pm

செய்தி முன்னோட்டம்

2025 பீகார் சட்டமன்றத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணி படுதோல்வியைச் சந்தித்த ஒரு நாள் கழித்து, அக்கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா தாம் அரசியலில் இருந்து விலகுவதாகவும், தனது குடும்பத்தை உதறித் தள்ளுவதாகவும் சனிக்கிழமை (நவம்பர் 15) அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டப் பதிவில், "நான் அரசியலில் இருந்து விலகுகிறேன், எனது குடும்பத்தை நான் உதறித் தள்ளுகிறேன்... சஞ்சய் யாதவ் மற்றும் ரமீஸ் ஆகியோர்தான் இதைச் செய்யச் சொன்னார்கள்... அனைத்துப் பழிகளையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்." என்று கூறியுள்ளார்.

குற்றச்சாட்டு

ரோகிணி மீது குற்றச்சாட்டு

பீகார் தேர்தலில் கட்சியின் மோசமான தோல்விக்குப் பலர் ரோகிணியைக் குற்றம் சாட்டியதாகத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிங்கப்பூரில் இருந்த அவர், பிரச்சாரத்திற்காக அழைக்கப்பட்டபோதும், அது அவரது சகோதரர் தேஜஸ்வி போட்டியிட்ட ராகோபூர் தொகுதிக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது அவர் அரசியலை விட்டு விலகுவதாகவும், குடும்பத்தைத் துறப்பதாகவும் எடுத்துள்ள இந்த முடிவு, லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தில் நிலவும் மோதலை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. முன்னதாக, தேஜ் பிரதாப் யாதவும் பொறுப்பற்ற நடத்தை காரணமாகக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, லாலு யாதவ் அவருக்கும் குடும்ப உறவுகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.