LOADING...
பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025: விறுவிறுப்பாகத் தொடங்கிய வாக்கு எண்ணிக்கை! 
வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது

பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025: விறுவிறுப்பாகத் தொடங்கிய வாக்கு எண்ணிக்கை! 

எழுதியவர் Venkatalakshmi V
Nov 14, 2025
08:29 am

செய்தி முன்னோட்டம்

பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் 2025-க்கான வாக்கு எண்ணிக்கை இன்று (நவம்பர் 14, 2025) காலை 8 மணிக்குத் தொடங்கியது. மாநிலம் முழுவதும் உள்ள 243 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டதைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. ஆரம்பகட்ட முன்னிலை நிலவரப்படி, முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) பல தொகுதிகளில் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பீகாரில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதைத் தீர்மானிக்கும் இந்தத் தேர்தல் முடிவுகள் இன்று மாலைக்குள் முழுமையாக வெளியாகும்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post