LOADING...
இன்று முதல் ஒரு ரூபாய் கட்டணத்தில் சென்னை முழுக்க பயணிக்கலாம்; சூப்பர் சலுகை அறிவிப்பு
ஒரு ரூபாய் கட்டணத்தில் சென்னை முழுக்க பயணிக்கலாம்

இன்று முதல் ஒரு ரூபாய் கட்டணத்தில் சென்னை முழுக்க பயணிக்கலாம்; சூப்பர் சலுகை அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Nov 13, 2025
01:44 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை மாநகரப் பொதுப் போக்குவரத்து வசதிகளை ஒரே தளத்தின் கீழ் கொண்டு வரும் விதமாக, கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி தொடங்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட சென்னை ஒன் (Chennai One) செயலி, மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்துக் கழகம் (CUMTA) மூலம் உருவாக்கப்பட்ட இந்தச் செயலி, மாநகரப் பேருந்து, மெட்ரோ மற்றும் புறநகர் ரயில் சேவைகளுக்கான பயணச்சீட்டை ஒரே QR குறியீடு மூலம் பெற வழிவகை செய்கிறது. இந்தச் செயலி அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மாத காலத்திற்குள் 5.5 லட்சத்திற்கும் அதிகமான பயனர்களைப் பதிவு செய்துள்ளதுடன், 8.1 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகளைப் பதிவு செய்துள்ளது.

சலுகை

சிறப்புச் சலுகை

பொதுப் போக்குவரத்துப் பயணங்களில் டிஜிட்டல் மற்றும் ரொக்கமில்லாப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் நோக்குடன், சென்னை ஒன் செயலி மூலம் பயணிகள் வியாழக்கிழமை (நவம்பர் 13) முதல் வெறும் 1 ரூபாயில் பேருந்து, மெட்ரோ அல்லது புறநகர் ரயில்களில் பயணிக்கச் சிறப்புச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தச் சலுகை பீம் பேமெண்ட்ஸ் (BHIM Payments) செயலி அல்லது நவி யுபிஐ (Navi UPI) செயலி மூலம் பணம் செலுத்தும் பயனர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட பயனர் ஒரு டிக்கெட்டுக்கு மட்டுமே இந்தச் சலுகையைப் பெற முடியும் என்றும், அதன் பிறகு மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளுக்கு ஆச்சரியமூட்டும் கேஷ்பேக்குகள் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post