LOADING...

இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

21 May 2025
பஹல்காம்

பஹல்காம் தாக்குதலுக்கு முன்பு பாகிஸ்தான் அதிகாரியை தொடர்பு கொண்டதாக ஒப்புக்கொண்ட 'ஸ்பை யூடியூபர்' ஜோதி மல்ஹோத்ரா 

புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலய ஊழியருடன் தொடர்பில் இருந்ததாக யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு

மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.2,291 கோடி கல்வி நிதியை பெற்றுத் தர மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

21 May 2025
கர்நாடகா

புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக்

உலக அங்கீகாரம் பெற்ற சர்வதேச புக்கர் பரிசை வென்றிருக்கிறார் கன்னட எழுத்தாளர் பானு முஷ்டாக்.

தமிழக சிறை விதிகளில் திருத்தம்: கைதிகளின் சாதியை கேட்க தடை

சிறைகளில் கைதிகளிடம் ஜாதி விவரங்களை கேட்பது மற்றும் ஜாதி அடிப்படையில் வேலை ஒதுக்குதல் ஆகியவை இனி அனுமதிக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

21 May 2025
இந்தியா

பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அம்பலப்படுத்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் உலகநாடுகளுக்கு இன்று கிளம்புகிறது MPக்கள் குழு 

பாகிஸ்தானின் பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்த சர்வதேச தலைவர்களை சந்திக்கும் ஏழு நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுக்களில் முதலாவது குழு, இன்று புறப்படும்.

பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை? 

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றத்திற்காக கைதான 11 பேருக்கு கிடைக்கக்கூடிய தண்டனை விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

20 May 2025
இந்தியா

இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

போர் பதட்டத்தால் 12 நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டிருந்த அட்டாரி-வாகா எல்லையில் நடைபெறும் கொடியிறக்க நிகழ்வு, இன்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் தொடங்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இனி, நீதித்துறை சேவையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி தேவை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

தொடக்க நிலை நீதித்துறை சேவை பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் வழக்கறிஞர்களுக்கான குறைந்தபட்ச பயிற்சி மூன்று ஆண்டு தேவையை உச்ச நீதிமன்றம் மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது.

20 May 2025
கோவிட் 19

கடந்த 10 நாட்களில் இந்தியாவில் 164 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன

தென்கிழக்கு ஆசிய நாடுகளான சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகளில் கோவிட்-19 தொற்று அதிகரித்து வருவது இந்தியாவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

20 May 2025
பெங்களூர்

பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு

பெங்களூருவில் கடந்த 12 மணிநேரத்தில் பெய்த கனமழை காரணமாக நகரம் வெள்ளக்காடாக மாறியிருக்கும் நிலையில், மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி

பாகிஸ்தானின் முழு ஆழத்திலும் உள்ள இலக்குகளைத் தாக்கும் இராணுவத் திறன் இந்தியாவிடம் உள்ளது என்று இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

20 May 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (மே 21) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

துருக்கியைச் சேர்ந்த விமானப் போக்குவரத்து தரை கையாளும் நிறுவனமான செலிபி ஏர்போர்ட் சர்வீசஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், இந்திய அதிகாரிகளால் அதன் பாதுகாப்பு அனுமதியை ரத்து செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை விசாரிக்கத் தொடங்கியது.

19 May 2025
கொரோனா

கொரோனா பாதிப்புகளில் இந்தியாவில் மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

மே 12 நிலவரப்படி மத்திய சுகாதார அமைச்சகம் தேசிய தரவுகளைப் புதுப்பித்துள்ளது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, நாடு முழுவதும் 257 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

19 May 2025
இந்தியா

"பாகிஸ்தானுடனான போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை" என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தல்

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு எதுவும் இல்லை என்று வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி திங்களன்று நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்தார்.

இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் கிடையாது; இலங்கை பிரஜையை நாடுகடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

உஃபா சட்டத்தின் கீழ் தண்டனையை முடித்தவுடன் நாடு கடத்த வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து, இலங்கைத் தமிழர் ஒருவரைத் தடுத்து வைப்பதில் தலையிட உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை (மே 19) மறுத்துவிட்டது.

அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் ஒரே அளவிலான ஓய்வூதியம்; உச்ச நீதிமன்றம் உத்தரவு

திங்கட்கிழமை (மே 19) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில், கூடுதல் நீதிபதிகள் உட்பட அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளும் முழு ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்களைப் பெறுவார்கள் என்று இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

யூடியூபர், மாணவர், பாதுகாவலர் உட்பட 11 'பாகிஸ்தான் உளவாளிகள்' இதுவரை கைது

பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ISI) உடன் தொடர்புடையதாகக் கூறப்படும் உளவு வலையமைப்பின் மீது நடத்தப்பட்ட ஒரு பெரிய நடவடிக்கையில், இந்திய அதிகாரிகள் நான்கு மாநிலங்களைச் சேர்ந்த குறைந்தது 11 பேரைக் கைது செய்துள்ளனர்.

19 May 2025
ஹரியானா

உளவு பார்க்க யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை சோறு போட்டு வளர்த்த பாகிஸ்தான்

டிராவல் வித் ஜோ என்ற பயண வீடியோக்கள் மூலமாக பிரபலமான இன்ஸ்டாகிராமர் மற்றும் யூட்யூபர் ஜோதி மல்ஹோத்ராவை பாகிஸ்தானிற்காக உளவு பார்த்தாக காவல்துறையினர் கைது செய்தனர்.

19 May 2025
அணுசக்தி

அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களின் நுழைவை எளிதாக்க கொள்கைகளை மறுசீரமைக்க மத்திய அரசு ஆலோசனை 

இந்தியா தனது அணுசக்தித் துறையில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவருவது குறித்து பரிசீலித்து வருகிறது, வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அரசாங்கம் இரண்டு முக்கிய திருத்தங்களை அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

யூகோ வங்கியின் முன்னாள் தலைவரை அமலாக்கத்துறை கைது செய்தது

ரூ. 6,210 கோடி மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்க இயக்குநரகம் (ED) முன்னாள் யூகோ வங்கித் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சுபோத் குமார் கோயலை கைது செய்துள்ளது.

ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை

ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் கொள்ளை வழக்கில் பரபரப்பான திருப்பம் ஏற்பட்டுள்ளது.

மே 8 அன்று பொற்கோவிலுக்கு குறிவைத்த பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த ஒன்பது பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பஞ்சாபின் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலை பாகிஸ்தான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் குறிவைத்தது.

19 May 2025
பெங்களூர்

மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு

25 வயதான இயந்திர கற்றல் பொறியாளர் நிகில் சோம்வான்ஷியின் சமீபத்திய மரணம் இந்தியாவின் தொழில்நுட்பத் துறையில் மன அழுத்தம் மிகுந்த பணியிட நடைமுறைகள் குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது.

19 May 2025
ஹைதராபாத்

ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு சதியா? ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் கைது 

தெலுங்கானா காவல்துறை, ஆந்திரப் பிரதேச காவல்துறையுடன் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில், ஹைதராபாத்தில் நடக்கவிருந்த மிகப்பெரும் வெடிகுண்டு சதித்திட்டத்தை முறியடித்துள்ளது.

19 May 2025
தமிழகம்

சென்னையில் அதிகாலை முதல் மிதமழை; தமிழகத்தில் இன்று கனமழை எச்சரிக்கை எங்கே?

மண்டல வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் 12 செ.மீ. மழை பதிவானது.

18 May 2025
ஹரியானா

'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது 

அசோகா பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியரும், துறைத் தலைவருமான அலி கான் மஹ்முதாபாத், 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்த சமூக ஊடகப் பதிவிற்காக டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது: IMD 

கர்நாடக கடற்கரையிலிருந்து கிழக்கு-மத்திய அரபிக்கடலில் புதன்கிழமை ஒரு சூறாவளி சுழற்சி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) உறுதிப்படுத்தியுள்ளது.

18 May 2025
ஹைதராபாத்

ஹைதராபாத் சார்மினார் அருகே அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழப்பு

ஹைதராபாத் பழைய நகரத்தில் உள்ள குல்சார் ஹவுஸ் அருகே, வரலாற்று நினைவுச்சின்னமான சார்மினாருக்கு அருகில் ஏற்பட்ட தீ விபத்தில், குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர்.

18 May 2025
இந்தியா

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் ராஜதந்திர MPக்கள் குழுவில் யார் எங்கு செல்கிறார்கள்; நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும்!

கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த ஒரு கொடிய பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய அரசாங்கம் ஏழு அனைத்துக் கட்சிக் குழுக்களை அறிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி

ஐஐஎம் அகமதாபாத்தின் முன்னாள் மாணவரும் அமேசானின் முன்னாள் தயாரிப்பு மேலாளருமான அனில் ஜாங்கிட், இசை மீதான தனது ஆர்வத்தைத் தொடர உயர்மட்ட கார்ப்பரேட் வாழ்க்கையைத் துறந்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார்.

17 May 2025
லக்னோ

மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு

லக்னோவில் கணவன் மனைவியின் நள்ளிரவு நடைப்பயணம் ஒன்று சோகமாக மாறியது. 37 வயதான வழக்கறிஞர் அனுபம் திவாரி தனது மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து ஆற்றில் குதித்ததாகக் கூறப்படுகிறது.

13 மாணவர்கள் தொடர்ந்த வழக்கு; நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை

சென்னை ஆவடியில் உள்ள ஒரு மையத்தில் தேர்வின் போது மின் தடை ஏற்பட்டதாகக் கூறி 13 மாணவர்கள் தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து, நீட் 2025 முடிவுகளை வெளியிடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

17 May 2025
இந்தியா

பாகிஸ்தானை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்துவோம்; அசாதுதீன் ஒவைசி உறுதி

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைக்க, வெளிநாடுகளுக்குச் செல்லும் மத்திய அரசின் அனைத்துக் கட்சிக் குழுவில் ஏஐஎம்ஐஎம் தலைவரும் ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசியும் இணைந்துள்ளார்.

17 May 2025
யூடியூபர்

பாகிஸ்தானுக்காக இந்தியாவில் உளவு பார்த்ததாக பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது

பாகிஸ்தான் உளவுத்துறைக்காக இந்தியாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில், டிராவல் வித் ஜோ சேனலை நடத்தி வரும் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை ஹிசார் போலீசார் கைது செய்துள்ளனர்.

பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; இந்தியாவின் நிலையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க குழுக்கள் அமைப்பு

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, பயங்கரவாதத்திற்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை என்ற நாட்டின் வலுவான செய்தியை உலக அரங்கில் வலுப்படுத்த அரசு அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவை அமைத்துள்ளது.

17 May 2025
விபத்து

கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி

கரூர் மாவட்டம் வெண்ணமலை அருகே நடந்த ஒரு துயரமான சாலை விபத்தில், கட்டுப்பாட்டை இழந்த ஆம்னிபஸ் சுற்றுலா வேன் மோதியதில் ஒரு சிறுவன், சிறுமி மற்றும் வேன் ஓட்டுநர் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை

சிந்து நதி நீர் ஒப்பந்தம் (IWT) இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, செனாப் நதியில் உள்ள ரன்பீர் கால்வாயின் நீளத்தை 60 கிலோமீட்டரிலிருந்து 120 கிலோமீட்டராக இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலித்து வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

16 May 2025
பொறியியல்

தமிழ்நாடு பொறியியல் படிப்பிற்கு இதுவரை வந்த விண்ணப்பங்கள் எவ்வளவு? அமைச்சர் கோவி செழியன் வெளியிட்ட தகவல்

தமிழகத்தில் கடந்த மே 7 அன்று தொடங்கிய பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை, வெள்ளிக்கிழமை (மே 16) மாலை 6 மணி நிலவரப்படி 1,69,634 விண்ணப்பதாரர்களை ஈர்த்துள்ளதாக தமிழக உயர்கல்வி அமைச்சர் கே.பொன்முடி அறிவித்தார்.