
சென்னையில் அதிகாலை முதல் மிதமழை; தமிழகத்தில் இன்று கனமழை எச்சரிக்கை எங்கே?
செய்தி முன்னோட்டம்
மண்டல வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் 12 செ.மீ. மழை பதிவானது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. மத்திய கிழக்கு அரபிக்கடலில், கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அருகில், மே 21 ஆம் தேதி மேலும் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதன் காரணமாக, மே 22ஆம் தேதி அந்த பகுதியில் குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகக்கூடும்.
இதனையடுத்து, தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களுக்கும், நாளை 8 மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
இன்று, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
அதோடு சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலை 10 மணி வரை மழை தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மே 22 ஆம் தேதி வரை மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும் என முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனை முன்னிட்டு, அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#Watch | கரு மேகங்கள் சூழ்ந்து ரம்மியமாக காட்சியளிக்கும் சென்னை!
— Sun News (@sunnewstamil) May 19, 2025
பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால், குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.#SunNews | #ChennaiRains | #WeatherUpdate pic.twitter.com/hxMcIV4mPb
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#வானிலைசெய்திகள் | சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட 18 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்#SunNews | #RainUpdate | #ChennaiRains pic.twitter.com/XO6uui7jy4
— Sun News (@sunnewstamil) May 19, 2025