Page Loader
கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
கல்வி நிதியை பெற்றுத் தர தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது

கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு

எழுதியவர் Venkatalakshmi V
May 21, 2025
09:38 am

செய்தி முன்னோட்டம்

மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.2,291 கோடி கல்வி நிதியை பெற்றுத் தர மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதுநாள் வரை நடவடிக்கையால் மாநிலம்-மத்திய அரசுகளுக்கு இடையே நடந்து வந்த கல்வி நிதி விவகாரம் தற்போது உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டை கூறியுள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த வாரம்,"மத்திய அரசு கல்விக்கான நிதியை தொடர்ந்து நிறுத்தி வருகிறது. இதற்காக உச்சநீதிமன்றத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்," என அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, இன்று உச்சநீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனு

நிதியை மத்திய அரசு சட்டவிரோதமாக நிறுத்தி வைத்துள்ளது என தமிழக அரசு மனு

தமிழக அரசு தொடர்ந்துள்ள மனுவில், பி.எம். ஸ்ரீ மற்றும் சமக்ரா சிக்ஷா போன்ற கல்வித் திட்டங்களுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு சட்டவிரோதமாக நிறுத்தி வைத்துள்ளது. புதிய கல்வி கொள்கையை மாநிலம் அமல்படுத்தவில்லை என்பதையே காரணமாக காட்டி நிதியை நிறுத்துவது நியாயமல்ல. நிலுவையில் உள்ள ரூ.2,291 கோடியை 6% வட்டியுடன் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கல்வி நிதி விநியோகத்தில் சமநிலை தேவைப்படும் இந்த சூழலில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நாடு முழுவதும் முக்கிய எதிரொலியை ஏற்படுத்தும் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post