
தமிழக சிறை விதிகளில் திருத்தம்: கைதிகளின் சாதியை கேட்க தடை
செய்தி முன்னோட்டம்
சிறைகளில் கைதிகளிடம் ஜாதி விவரங்களை கேட்பது மற்றும் ஜாதி அடிப்படையில் வேலை ஒதுக்குதல் ஆகியவை இனி அனுமதிக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்காக சிறை விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசிதழில் வெளியிட்டுள்ளது.
அதன்படி, புதிய கைதிகள் சிறையில் அடைக்கப்படும்போது, அவர்களின் ஜாதி தொடர்பான எந்தவொரு தகவலும் சிறை அதிகாரிகள் பெறக்கூடாது, பதிவு செய்யக்கூடாது என்றும், அந்த விவரங்கள் எந்த பதிவேட்டிலும் இடம்பெறக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கைதிகள் ஜாதி அடிப்படையில் வகைப்படுத்தப்படக்கூடாது என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
அதோடு சிறை பணிகள், குறிப்பாக கழிவுநீர் தொட்டிகள் சுத்தம் செய்வது போன்றவை, ஜாதி அடிப்படையில் ஒதுக்கக் கூடாது என்றும், அந்த பணிகள் யந்திரங்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | சிறை விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு#SunNews | #TNGovt | #Prison pic.twitter.com/CSo1Q2jy81
— Sun News (@sunnewstamil) May 20, 2025