NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / "பாகிஸ்தானுடனான போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை" என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தல்
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    "பாகிஸ்தானுடனான போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை" என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தல்
    ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான முடிவு இரு அண்டை நாடுகளுக்கும் இடையே எடுக்கப்பட்டது: வெளியுறவுச் செயலாளர்

    "பாகிஸ்தானுடனான போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை" என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தல்

    எழுதியவர் Venkatalakshmi V
    May 19, 2025
    07:40 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு எதுவும் இல்லை என்று வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி திங்களன்று நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்தார்.

    ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான முடிவு இரு அண்டை நாடுகளுக்கும் இடையே இருதரப்பு மட்டத்தில் எடுக்கப்பட்டது என்றும் அவர் வலியுறுத்தினார்.

    மோதலை நிறுத்துவதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தின் பங்கு குறித்து சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து மிஸ்ரியின் கருத்துக்கள் வந்தன.

    "போர் நிறுத்தத்தை எளிதாக்கியதாக டிரம்ப் குறைந்தது ஏழு முறையாவது பகிரங்கமாகக் கூறினார். இந்தியா ஏன் அமைதியாக இருந்தது?" என்று குழுவில் இருந்த ஒருவர் கேட்டார்.

    மற்றொரு உறுப்பினர், "இந்தியா ஏன் டிரம்ப் மீண்டும் மீண்டும் அதே கதையை கூற அனுமதித்தது" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

    தலையீடு

    மூன்றாம் தரப்பு தலையீடு இல்லாத போர் நிறுத்தம் என மீண்டும் வலியுறுத்தல்

    வெளியுறவுச் செயலாளர் இந்தக் கூற்றுக்களை மறுத்து, இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்தம் என்பது மூன்றாம் தரப்பு தலையீடு இல்லாத இருதரப்பு முடிவு என்று கூறியதாக இந்தியா டுடே செய்தி கூறியது.

    "போர்நிறுத்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா எந்தப் பங்கையும் வகிக்கவில்லை" என்று மிஸ்ரி குழுவிடம் கூறினார்.

    அணுகுண்டு அச்சறுத்தல்

    'பாகிஸ்தானிடம் இருந்து அணுகுண்டு அச்சறுத்தல் இல்லை'

    இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் வழக்கமான போரின் எல்லைக்குள் இருப்பதாகவும், இஸ்லாமாபாத்தின் அணு ஆயுத தோரணை அல்லது சமிக்ஞைக்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் வெளியுறவுச் செயலாளர் மீண்டும் வலியுறுத்தினார்.

    வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வெளியிட்ட அறிக்கை குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த மிஸ்ரி, அமைச்சரின் வார்த்தைகளை உறுப்பினர்கள் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம் என்று வலியுறுத்தினார்.

    முதல் கட்ட ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) உள்ள பயங்கரவாத இலக்குகள் மட்டுமே தாக்கப்பட்டதாக இந்தியா, பாகிஸ்தானிற்கு தெரிவித்ததாக ஜெய்சங்கர் கூறியதாக அவர் தெளிவுபடுத்தினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பாகிஸ்தான்
    அமெரிக்கா
    டொனால்ட் டிரம்ப்

    சமீபத்திய

    அதிக மதிப்புள்ள சைபர் குற்றங்களுக்கு எதிராக இ-ஜீரோ எஃப்ஐஆர்; மத்திய உள்துறை அமைச்சகம் புதிய முயற்சி சைபர் கிரைம்
    "பாகிஸ்தானுடனான போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை" என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தல் இந்தியா
    துருக்கிய ஃபேஷன் பிராண்டுகள் விற்பனையை நிறுத்தம்; இந்திய ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் அதிரடி துருக்கி
    புற்றுநோய் கண்டறியப்பட்ட பிறகு ஜோ பைடனின் முதல் பதிவு ஜோ பைடன்

    இந்தியா

    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'பார்கவாஸ்த்ரா' வெற்றிகரமாக சோதனை: இந்தியாவின் பாதுகாப்பு அம்சத்தில் மற்றொரு மைல்கல் போர்
    இந்தியா-மியான்மர் எல்லையில் பதற்றம்: 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை மணிப்பூர்
    ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தான் கண்ணில் மண்ணை தூவி பயங்கரவாத தளங்களை இந்தியா எவ்வாறு தாக்கியது? ஆபரேஷன் சிந்தூர்
    மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க காலக்கெடு நிர்ணயித்தது சரியா? உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை எழுப்பியுள்ள ஜனாதிபதி திரௌபதி முர்மு திரௌபதி முர்மு

    பாகிஸ்தான்

    பாகிஸ்தானின் அணு உலையை இந்தியா தாக்கியதா: IAF விளக்கம் விமானப்படை
    அணு ஆயுதத்தை காட்டி இனி மிரட்ட முடியாது; பாகிஸ்தான் வெள்ளைக்கொடி காட்டியதன் பின்னணி இதுதானா? இந்தியா
    'அய்யயோ, நாங்க எந்த ஆயுதமும் பாகிஸ்தானுக்கு கொடுக்கல'; சீனா விளக்கம் சீனா
    இந்திய பத்திரிகையாளர்களை குறிவைக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்புகள்; மத்திய பாதுகாப்புத் துறை அலெர்ட் உளவுத்துறை

    அமெரிக்கா

    இந்திய மாணவர்களுக்கு வழங்கப்படும் அமெரிக்க விசாக்கள் 30% குறைந்துள்ளது விசா
    ஜம்மு-காஷ்மீருக்கு 'பயணம் செய்ய வேண்டாம்' என்ற அமெரிக்கா எச்சரிக்கை வெளியிட்டுள்ளது ஜம்மு காஷ்மீர்
    24 வயதில் ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்கி 28 வயதில் கோடீஸ்வரராக ஓய்வு; அசர வைத்த இளைஞர் டிரெண்டிங்
    நிலவிலிருந்து எடுத்து வந்த அரிய பாறைகளை அமெரிக்காவுடன் ஆராய்ச்சிக்காக பகிர்ந்து கொள்ளும் சீனா நிலவு ஆராய்ச்சி

    டொனால்ட் டிரம்ப்

    பரஸ்பர வரிகளை இடை நிறுத்திய டிரம்ப்: யாருக்கு லாபம்? பங்கு
    அமெரிக்கா பின்வாங்கியதைத் தொடர்ந்து பதிலடி வரிவிதிப்பை தற்காலிகமாக நிறுத்தியது ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
    டொனால்ட் டிரம்ப் வரிவிதிப்பின் தாக்கம்; அமெரிக்காவில் அதிக விற்பனையான ஆடி காருக்கு நேர்ந்த சோகம் ஆடி
    சீனா மீது கூடுதல் வரிகளை விதித்து பழிவாங்கும் டிரம்ப்; மொத்த வரி இப்போது 145% ஆக உயர்வு சீனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025