Page Loader
புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக்
பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் உடன் பத்திரிகையாளர் தீபா பாஸ்தி

புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக்

எழுதியவர் Venkatalakshmi V
May 21, 2025
09:24 am

செய்தி முன்னோட்டம்

உலக அங்கீகாரம் பெற்ற சர்வதேச புக்கர் பரிசை வென்றிருக்கிறார் கன்னட எழுத்தாளர் பானு முஷ்டாக். இதன் மூலம், புக்கர் விருதை வென்ற முதல் கன்னட எழுத்தாளராகும் பெருமையை அவர் பெற்றுள்ளார். எழுத்துலகில் இது ஒரு வரலாற்று சாதனையாகப் போற்றப்படுகிறது. கர்நாடக மாநிலம் ஹாசனை சேர்ந்த பானு முஷ்டாக், நீண்ட ஆண்டுகளாக கதைகள், நாவல்கள், மற்றும் சமூக பிரச்சனைகளை பிரதிபலிக்கும் இலக்கியங்களை எழுதி வருகின்றார். 'ஹசீனா அண்ட் அதர் ஸ்டோரிஸ்' என்ற கதைகளை அடிப்படையாக கொண்டு உருவான அவரது நாவல், ஆங்கிலத்தில் 'Heartlamp' என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டது. இதை பத்திரிகையாளர் தீபா பாஸ்தி மொழிபெயர்த்தார்.

விவரங்கள்

உலக இலக்கியவாதிகளிடம் இருந்து குவியும் வாழ்த்துக்கள்

இந்த நூல், தற்காலிக மனித உணர்வுகள், சமூக விரிசல்கள், மற்றும் பெண் வாழ்க்கையின் நுண்ணிய பண்புகளை எதிரொலிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. வெளியானதும் இலக்கிய உலகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து 'The English Pen 2024' விருதையும் வென்றது. புக்கர் பரிசுக்கான இறுதிப் பட்டியலில் பானு முஷ்டாக் உட்பட ஆறு பேர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், இறுதியாக அவரின் 'Heartlamp' நாவல் தான் இவ்வாண்டு புக்கர் விருதை வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனைக்காக பானு முஷ்டாக் ரூ.56 லட்சம் பரிசுத்தொகையையும் பெற்றுள்ளார். அவருக்கு இந்தியா முழுவதும் மற்றும் உலக இலக்கியவாதிகளிடமிருந்து வாழ்த்து மழை குவிந்துகொண்டிருக்கிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post