NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஹைதராபாத் சார்மினார் அருகே அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹைதராபாத் சார்மினார் அருகே அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழப்பு
    சார்மினார் அருகே அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து

    ஹைதராபாத் சார்மினார் அருகே அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    May 18, 2025
    01:00 pm

    செய்தி முன்னோட்டம்

    ஹைதராபாத் பழைய நகரத்தில் உள்ள குல்சார் ஹவுஸ் அருகே, வரலாற்று நினைவுச்சின்னமான சார்மினாருக்கு அருகில் ஏற்பட்ட தீ விபத்தில், குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர்.

    மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டுள்ளனர். மீட்புக் குழுவினர் இதுவரை 10 முதல் 15 பேரை வெற்றிகரமாக மீட்டுள்ளனர்.

    உள்ளூர் எம்.எல்.ஏ., சம்பவ இடத்தை பார்வையிட்டு நிலைமையை மதிப்பிடவும், நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்கவும் முயற்சித்து வருவதாக கூறியுள்ளார்.

    மத்திய அமைச்சரும், மாநில பாஜக தலைவருமான ஜி.கிஷன் ரெட்டி, தெலுங்கானா அமைச்சர் பொன்னம் பிரபாகரும் சம்பவ இடத்திற்கு வந்து, தற்போதைய நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டனர்.

    சார்மினார் முன்னாள் எம்எல்ஏவும், ஏஐஎம்ஐஎம் தலைவருமான மும்தாஜ் அகமது கானும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

    விவரங்கள்

    தீ விபத்து பற்றிய விவரங்கள்

    தீ விபத்து குறித்து பேசிய தெலுங்கானா அமைச்சர் பொன்னம் பிரபாகர்,"காலை 6:00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது, காலை 6:16 மணியளவில், தெலுங்கானா தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்தில் இருந்தனர். அனைவரையும் காப்பாற்ற அவர்கள் தங்களால் இயன்றதைச் செய்தனர், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, தீ ஏற்கனவே பரவலாகப் பரவியிருந்தது. கட்டிடத்திற்குள் இருந்தவர்களில் பெரும்பாலோர் உயிரிழந்தனர்" என்றார்.

    மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி, அவசரகால நடவடிக்கைகளில் உள்ள இடைவெளிகளை எடுத்துரைத்தார்.

    "இந்த விபத்து ஷார்ட் சர்க்யூட் காரணமாக நடந்தது. விபத்தில் பலர் இறந்துள்ளனர். சிலர் காயமடைந்துள்ளனர். நான் யாரையும் குறை சொல்லவில்லை. ஆனால் ஹைதராபாத் வேகமாக வளர்ந்து வரும் நகரம் என்பதால், காவல்துறை, நகராட்சி, தீயணைப்பு மற்றும் மின்சாரத் துறைகள் பலப்படுத்தப்பட வேண்டும்."

    நிவாரணம்

    பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்தார் 

    பிரதமர் நரேந்திர மோடி, "தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்பு மிகுந்த வேதனையளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்" என்று X இல் ஒரு பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    மேலும், பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார்.

    இந்த சம்பவம் குறித்து விரிவான தகவல்களைப் பெற, சம்பந்தப்பட்ட அமைச்சர் பொன்னம் பிரபாகரை முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தொடர்பு கொண்டார். தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதலமைச்சர் தொலைபேசி மூலம் ஆறுதல் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹைதராபாத்
    தீ விபத்து

    சமீபத்திய

    'எம்.எஸ். தோனியின் ரசிகர்கள் உண்மையானவர்கள், மற்றவர்கள் பணத்தால் வாங்கப்பட்டவர்கள்': சர்ச்சையை கிளப்பிய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்  எம்எஸ் தோனி
    ஹைதராபாத் சார்மினார் அருகே அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழப்பு ஹைதராபாத்
    இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் ராஜதந்திர MPக்கள் குழுவில் யார் எங்கு செல்கிறார்கள்; நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும்! இந்தியா
    கார்த்திக் சுப்புராஜ்- சூர்யாவின் 'ரெட்ரோ' இந்த தேதியில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது நடிகர் சூர்யா

    ஹைதராபாத்

    ஹைதராபாத்தில் உள்ள குடோனில் பயங்கர தீ விபத்து: 9 பேர் பலி தெலுங்கானா
    தெலுங்கானா தேர்தல்- நடிகர்கள் சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன், ஜூனியர் என்டிஆர் வாக்களித்தனர் தெலுங்கானா
    தெலுங்கானாவின் முதலமைச்சராக பதவியேற்கிறார் ரேவந்த் ரெட்டி; விழாவில் சோனியா, ராகுல் பங்கேற்கின்றனர் தெலுங்கானா
    கிரிக்கெட்டில் கால் பதித்த நடிகர் சூர்யா- புதிய கிரிக்கெட் அணியை வாங்கினார் நடிகர் சூர்யா

    தீ விபத்து

    சேலம் அரசு மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து  சேலம்
    பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள மாலில் தீ விபத்து: 11 பேர் உயிரிழப்பு  பாகிஸ்தான்
    குஜராத் மாநிலம் சூரத் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - 7 பேர் உடல்கள் மீட்பு  குஜராத்
    அண்ணனூர் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் திடீர் தீ விபத்து  காவல்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025