Page Loader
மே 8 அன்று பொற்கோவிலுக்கு குறிவைத்த பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு
மே 8 அன்று பொற்கோவிலுக்கு குறிவைத்த பாகிஸ்தான்

மே 8 அன்று பொற்கோவிலுக்கு குறிவைத்த பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு

எழுதியவர் Venkatalakshmi V
May 19, 2025
11:58 am

செய்தி முன்னோட்டம்

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த ஒன்பது பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பஞ்சாபின் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலை பாகிஸ்தான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் குறிவைத்தது. 15வது காலாட்படை பிரிவின் பொது அதிகாரி (GOC) மேஜர் ஜெனரல் கார்த்திக் சி சேஷாத்ரி திங்களன்று, ராணுவ வான் பாதுகாப்பு பீரங்கிகள் பொற்கோயிலை குறிவைத்து ஏவப்பட்ட அனைத்து ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளையும் சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்தார். பொற்கோயில் போன்ற மதத் தலங்கள் உட்பட இந்தியாவின் இராணுவ நிறுவல்களையும் குறிவைக்கும் பாகிஸ்தானின் நடவடிக்கையை, இந்திய இராணுவம் முன்னரே எதிர்பார்த்திருந்ததாக மேஜர் ஜெனரல் கூறினார்.

தாக்குதல்

ஆளில்லா வான்வழி தாக்குதலை நடத்திய பாகிஸ்தான் 

எதிர்பார்த்ததை போல, மே 8 அன்று பாகிஸ்தான் ஆளில்லா வான்வழித் தாக்குதலை நடத்தியது, முக்கியமாக ட்ரோன்கள் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகள் மூலம். "நாங்கள் இதை எதிர்பார்த்ததால் முழுமையாக தயாராக இருந்தோம், எங்கள் துணிச்சலான மற்றும் விழிப்புடன் இருக்கும் இராணுவ வான் பாதுகாப்பு துப்பாக்கி ஏந்தியவர்கள் பாகிஸ்தான் இராணுவத்தின் தீய திட்டங்களை முறியடித்து, பொற்கோயிலை குறிவைத்து தாக்கப்பட்ட அனைத்து ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளையும் சுட்டு வீழ்த்தினர்." என்று அவர் கூறினார். ஆகாஷ் ஏவுகணை அமைப்பு, எல்-70 வான் பாதுகாப்பு துப்பாக்கிகள் உள்ளிட்ட இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகள், அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலையும் பஞ்சாப் நகரங்களையும் பாகிஸ்தான் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களிலிருந்து எவ்வாறு காப்பாற்றின என்பதற்கான ஒரு செயல் விளக்கத்தை இராணுவம் திங்களன்று காட்சிப்படுத்தியது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post