Page Loader
தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
இன்றும், நாளையும் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்

தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

எழுதியவர் Venkatalakshmi V
May 18, 2025
08:56 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சில பகுதிகளில் பலத்த காற்றும் இருக்கும் என்றும் அந்த மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று மதியம் வரை திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் 10 செ.மீ. அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் 6 முதல் 7 செ.மீ. வரை மழை பெய்துள்ளது. மேலும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், கோவை, விருதுநகர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பதிவாகியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

மழை

சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்

இன்றும் நாளையும், தமிழகத்தின் பல இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும் எனவும், குறிப்பாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், கோவை, சேலம், நீலகிரி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகரப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில், சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.