வணிகம் செய்தி
பாமர மக்களுக்கும் புரியும்படியான, கலப்படமற்ற வணிகச் செய்திகளை இங்கே படிக்கவும்.
1,400 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஜப்பானிய நிறுவனமான கொங்கோ குமி பற்றி தெரியுமா?
ஜப்பானில் ஒரு குடும்பம் நடத்தும் கட்டுமான நிறுவனமான கொங்கோ குமி, தொடர்ந்து இயங்கும் உலகின் மிகப் பழமையான நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
விவசாயத்துறையில் 7 புதிய திட்டங்கள்; ₹14,000 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
2,817 கோடி ரூபாய் மதிப்பிலான டிஜிட்டல் விவசாயத் திட்டம் மற்றும் பயிர் அறிவியலுக்கான ₹ 3,979 கோடி திட்டம் உட்பட விவசாயத் துறை தொடர்பான ஏழு பெரிய திட்டங்களுக்கு சுமார் ₹14,000 கோடி ஒதுக்குவதற்கு மத்திய அமைச்சரவை திங்களன்று (செப்டம்பர் 2) ஒப்புதல் அளித்துள்ளது.
இலவச ஆதார் புதுப்பிப்புகளுக்கான கடைசி வாய்ப்பு செப்டம்பர் 14 அன்று முடிவடைகிறது
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) செப்டம்பர் 14-ம் தேதியை இலவச ஆதார் விவரங்களைப் புதுப்பிப்பதற்கான இறுதித் தேதியாக அறிவித்துள்ளது.
ரூ.5,947 கோடி முதலீட்டில் மேட்டூரில் புனல் மின் நிலையம் அமைக்கிறது கிரீன்கோ நிறுவனம்
சேலம் மாவட்டம் மேட்டூரில் ரூ.5,947 கோடி மதிப்பில் நீரேற்று புனல் மின் நிலையம் அமைப்பதற்கான பூர்வாங்க வங்கிகளை கீரீன்கோ எனெர்ஜிஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது.
ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி 10 சதவீதம் அதிகரித்து ரூ.1.75 லட்சம் கோடி வசூல்; மத்திய அரசு தகவல்
இந்தியாவின் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ஆகஸ்ட் மாதத்தில் 10% அதிகரித்து சுமார் ரூ.1.75 லட்சம் கோடியாக உள்ளது என்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 1) அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
14.96 பில்லியன் பரிவர்த்தனைகளுடன் ஆகஸ்ட் மாதத்தில் புதிய உச்சம் தொட்டது இந்தியா
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) தரவுகளின்படி, யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) ஆகஸ்ட் 2024 இல் 14.96 பில்லியன் பரிவர்த்தனைகளுடன் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.
வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.38 உயர்வு
எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்ததையடுத்து, இந்தியா முழுவதும் வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர்களின் விலை ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 1) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார காரணங்களால் 27 ஆண்டுகால சேவையை முடித்துக் கொண்டது ஆனந்த்டெக் பத்திரிகை
1997 ஆம் ஆண்டு முதல் கணினி வன்பொருள் பற்றிய விரிவான பகுப்பாய்விற்கு அறியப்பட்ட ஒரு முக்கிய தொழில்நுட்ப மறுஆய்வு இணையதளமான ஆனந்த்டெக் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2024-25 முதல் நான்கு மாதங்களில் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை 17.2 சதவீதம்
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூலைக்கான முதல் நான்கு மாதங்களின் முடிவில் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை முழு ஆண்டு இலக்கில் 17.2 சதவீதத்தைத் தொட்டது.
புதிய உச்சம் தொட்ட இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் 23 நிலவரப்படி 7.02 பில்லியன் டாலர் அதிகரித்து 681.69 பில்லியன் டாலர் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
2024-25 முதல் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.7% ஆக குறைவு; நிதியமைச்சகம் அறிவிப்பு
நிதியாண்டு 2024-25 இன் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 6.7% ஆக வளர்ந்துள்ளதாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி பெயரில் ஆன்லைன் மோசடி; பொதுமக்களுக்கு எச்சரிக்கை
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தனது பெயரை பயன்படுத்தி நடக்கும் மோசடி நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. ரிசர்வ் வங்கி அதிகாரிகளைப் போல் நடித்து பொதுமக்களை ஏமாற்றும் வகையில் மோசடிகள் அதிகரித்து வருவதாக புகார்கள் வருகின்றன.
ஆயுள் காப்பீட்டிற்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்க ஜிஎஸ்டி கவுன்சில் திட்டம்
ஜிஎஸ்டி கவுன்சில், சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து (ஜிஎஸ்டி) குறிப்பிட்ட கால ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகளுக்கு விலக்கு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்திற்கு முதல் நாளிலேயே குவிந்த முதலீடுகள்: உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள்
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நேற்று (29.8.2024) அமெரிக்காவின், சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல முன்னணி தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் முதலீட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல்; ஏர் இந்தியா-விஸ்தாரா இணைப்புக்கான தடை நீங்கியது
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் லிமிடெட்டின் $360 மில்லியன் ($276 மில்லியன்) முதலீட்டிற்கு ஒப்புதல் அளித்து, விஸ்தாராவுடன் ஏர் இந்தியா இணைவதற்கான கடைசித் தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது.
எல்ஐசி நிறுவனத்திற்கு அபராதம் விதித்து ஜிஎஸ்டி ஆணையம் நோட்டீஸ்
மகாராஷ்டிரா மாநிலத்தில் வட்டி மற்றும் அபராதம் செலுத்துமாறு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆணையம் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்திற்கு (எல்ஐசி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ரூ.10 லட்சம் கோடி வருமானத்தை தாண்டிய இந்தியாவின் முதல் நிறுவனமாக RIL முன்னிலை
ரிலையன்ஸ், ஆண்டு வருவாயில் ரூ.10 லட்சம் கோடியைத் தாண்டிய முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
ரிலையன்ஸ் ஏஜிஎம்: ஜியோ டிவிஓஎஸ், ஜியோ ஹோமுக்கான புதிய அம்சங்கள் வெளியீடு
இன்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஏஜிஎம் 2024 கூட்டம் நடைபெற்றது. முகேஷ் அம்பானி, நிறுவனத்தின் முன்னேற்றத்தை வெளிப்படுத்தும் முக்கிய முன்னேற்றங்களை எடுத்துரைத்தார்.
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டின் புதிய CEO-ஆக, Flipkart நிர்வாகி அமிதேஷ் ஜா நியமனம்
ஸ்விக்கி அதன் விரைவான வர்த்தக முயற்சியான இன்ஸ்டாமார்ட்டில் குறிப்பிடத்தக்க தலைமை மாற்றத்தை அறிவித்துள்ளது.
ZFE: இனி நீங்கள் க்ளைம் கவலையின்றி சோமாட்டோவில் உணவு ஆர்டர் செய்யலாம்
சோமாட்டோ நிறுவனம் Zomato for Enterprise (ZFE) என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
சோனி இந்தியாவுடனான ஒப்பந்தத்தை முறித்து கொண்டது ஜீ என்டர்டெயின்மென்ட்
Zee என்டர்டெயின்மென்ட், முன்னதாக சோனி இந்தியா, மற்றும் பங்களா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் (BEPL) என அழைக்கப்பட்ட Culver Max Entertainment Private Limited (CMEPL) உடனான தீர்வு ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது.
பிக்பாஸ்கெட் நிறுவனம், ஸேப்ட்டோ, பளிங்கிட்க்கு போட்டியாக 600 கடைகளை திறக்க உள்ளது
டாடாவுக்குச் சொந்தமான நிறுவனமான பிக்பாஸ்கெட் நிறுவனம், பளிங்கிட், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் மற்றும் ஸேப்ட்டோ ஆகியவற்றால் ஆதிக்கம் செலுத்தப்படும் வர்த்தகத் துறையில் தனது நிலையை வலுப்படுத்த தயாராகி வருகிறது.
ஐபிஓ வெளியீட்டில் மோசடி; பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனருக்கு செபி நோட்டீஸ்
பேடிஎம்மின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா மற்றும் நவம்பர் 2021இல் அதன் ஆரம்ப பொதுப் பங்கீட்டின் போது பணியாற்றிய போர்டு உறுப்பினர்களுக்கு இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஐரோப்பாவில் Miiro ஹோட்டல்களுடன் இணைந்து வணிகத்தை விரிவாக்கும் Indigoவின் தாய் நிறுவனம்
இண்டிகோ விமான நிறுவனத்தில் குறிப்பிடத்தக்க பங்குதாரரான InterGlobe என்டர்ப்ரைசஸ், Miiro என்ற போட்டிக் லைஃப்ஸ்டைல் ஹோட்டல்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் ஐரோப்பாவிற்கு தனது விருந்தோம்பல் பிரிவை விரிவுபடுத்தியுள்ளது.
விவசாயம் மற்றும் MSMEகளுக்கு கடன் அணுகலை டிஜிட்டலாகும் முயற்சியாக ULI அறிமுகம்
ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ், நாடு முழுவதும் ஒருங்கிணைந்த கடன் இடைமுகத்தை (யுஎல்ஐ) தொடங்குவதற்கான திட்டங்களை இன்று வெளிப்படுத்தினார்.
பேடிஎம் நிறுவனத்தின் பங்குகள் 3 மாதத்தில் 54% உயர்வு; காரணம் என்ன?
பேடிஎம்மின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் பங்குகள் சமீபத்தில் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியைக் கண்டுள்ளன.
டிசிஎஸ்ஸில் ₹5,950 முதலீடு செய்திருந்தால் ரிட்டர்ன்ஸ் ₹1.25 லட்சம் வந்திருக்கும்; எப்படி தெரியுமா?
உலகளாவிய ஐடி சேவைகளை வழங்கும் முன்னணி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு 20வது ஆண்டை எட்டியுள்ளது.
உங்கள் கவனத்திற்கு, செப்டம்பர் மாதம் இந்த நாட்கள் பேங்க் விடுமுறையாம்
இந்தியா ஆண்டு முழுவதும் பரந்த அளவிலான வங்கி விடுமுறைகளைக் கடைப்பிடிக்கிறது.
Uber Black பிரீமியம் ரைட் சேவை இந்தியாவில் மீண்டும் வர உள்ளது
உலகளாவிய டாக்ஸி ரைடு நிறுவனமான உபர், அதன் பிரீமியம் சேவையான Uber Black ஐ இந்தியாவில் மீண்டும் அறிமுகப்படுத்த உள்ளது.
செபியின் தடைக்குப் பிறகு அனில் அம்பானியின் அடுத்தகட்ட நகர்வு என்ன?
வர்த்தக அதிபரான அனில் அம்பானி, இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (SEBI) சமீபத்திய உத்தரவை மதிப்பீடு செய்து வருகிறார்.
இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கான ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு நோட்டீஸை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு
இந்திய அரசாங்கம் இன்ஃபோசிஸிடமிருந்து 4 பில்லியன் டாலர் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு நோட்டீஸை திரும்பப் பெறுவது குறித்து பரிசீலித்து வருகிறது என்று அரசு வட்டாரங்களில் இருந்து தகவல் வந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
தகுதியற்ற பணியாளர்களுடன் பறந்ததற்காக ஏர் இந்தியாவுக்கு ₹90 லட்சம் அபராதம்
விமான நிறுவனமான ஏர் இந்தியா, தகுதியற்ற பணியாளர்களுடன் விமானத்தை இயக்கியதற்காக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) ₹90 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
லெஜெண்ட்ஸ் சேவையை நிறுத்துவதாக ஜொமோட்டோ சிஇஓ தீபிந்தர் கோயல் அறிவிப்பு
ஜொமோட்டோ தனது இன்டர்சிட்டி உணவு விநியோக சேவையான லெஜெண்ட்ஸை நிறுத்துவதாக அதன் தலைமை செயல் அதிகாரி தீபிந்தர் கோயல் தெரிவித்தார்.
அனில் அம்பானிக்கு ₹25 கோடி அபராதம் மற்றும் 5 ஆண்டுகள் தடை; செபி அதிரடி உத்தரவு
தொழிலதிபர் அனில் அம்பானி, ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் முன்னாள் முக்கிய அதிகாரிகள் உட்பட 24 பேர்/நிறுவனங்களை பங்குச் சந்தையில் இருந்து ஐந்தாண்டுகளுக்கு தடை செய்வதாக இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி அறிவித்துள்ளது.
ரஷ்ய எண்ணெய் இறக்குமதியில் சீனாவை பின்னுக்குத் தள்ளி நம்பர் 1 இடத்தைப் பிடித்தது இந்தியா
சமீபத்திய இறக்குமதி தரவுகளின்படி, ஜூலை மாதத்தில் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் சீனாவை விஞ்சி இந்தியா உலகின் மிகப்பெரிய எண்ணெய் இறக்குமதியாளராக மாறியுள்ளது.
விழுப்புரத்தில் தொழிற்சாலை; ரூ.400 கோடி முதலீடு செய்ய தமிழக அரசுடன் டாபர் நிறுவனம் ஒப்பந்தம்
இந்தியாவின் மிகப்பெரிய வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள் (எஃப்எம்சிஜி) நிறுவனங்களில் ஒன்றான டாபர், தமிழகத்தில் ரூ.400 கோடி முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
₹933 கோடியை இந்தியாவில் முதலீடு செய்கிறது டெக்கத்லான்
புகழ்பெற்ற பிரெஞ்சு விளையாட்டு பொருட்கள் விற்பனை நிறுவனமான டெக்கத்லான் (Decathlon) அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் 100 மில்லியன் யூரோக்களை (சுமார் ₹933 கோடி) முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
Paytm இன் பொழுதுபோக்கு டிக்கெட் வணிகத்தை Zomato வாங்க உள்ளது; மேலும் தகவல்கள்
ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் (OCL)இன் பொழுதுபோக்கு மற்றும் நிகழ்வுகளுக்கான டிக்கெட் வழங்கும் பிரிவான பேடிஎம் இன்சைடரை, ரூ 2048.4 கோடிக்கு வாங்குவதன் மூலம் சோமாட்டோ தனது வணிக எல்லைகளை விரிவுபடுத்த ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
பிரபலமான பரிந்துரை திட்டத்திற்கான கமிஷன் பகிர்வை Zerodha நிறுத்துகிறது: அதற்கான காரணம் இங்கே
இந்தியாவின் முன்னணி பங்குத் தரகரான Zerodha, டீமேட் கணக்கு பரிந்துரைகளுக்கு தரகு வருவாயைப் பகிர்ந்து கொள்ளும் நடைமுறையை நிறுத்துவதற்கான தனது முடிவை அறிவித்துள்ளது.
ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணிநீக்கம்: 1,000 மென்பொருள் பொறியாளர்களை நீக்கியதாக தகவல்
அமெரிக்காவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் (GM), உலகம் முழுவதும் 1,000 மென்பொருள் பொறியாளர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது.