எல்ஐசி நிறுவனத்திற்கு அபராதம் விதித்து ஜிஎஸ்டி ஆணையம் நோட்டீஸ்
மகாராஷ்டிரா மாநிலத்தில் வட்டி மற்றும் அபராதம் செலுத்துமாறு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆணையம் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்திற்கு (எல்ஐசி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த உத்தரவிற்கு எதிராக மும்பையில் உள்ள மாநில வரி இணை ஆணையரிடம் எல்ஐசி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. எல்ஐசியின் பரிமாற்றத் தாக்கல் படி, நிதியாண்டு 2019-20க்கான ஜிஎஸ்டி டிமாண்ட் ஆர்டர் ரூ. 294 கோடி செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது. முன்னதாக, புதன்கிழமை (ஆகஸ்ட் 28) எல்ஐசி மற்றொரு ஜிஎஸ்டி கோரிக்கை உத்தரவைப் பெற்றது. இது பெங்களூரிலிருந்து ரூ. 38.09 கோடிக்கு வந்தது. அதற்கும் முன்னர், ஜூலை மாதம் எல்ஐசி, 2018-19 நிதியாண்டுக்கான ரூ.794 கொடிக்கான ஜிஎஸ்டி ஆர்டருக்கான உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தது குறிபிடத்தக்கது.
இந்திய ஷிப்பிங் கழகத்திற்கு ஜிஎஸ்டி நோட்டீஸ்
மும்பை பங்குச் சந்தையில் இந்திய ஷிப்பிங் கழகம் தாக்கல் செய்த தகவலின்படி, 2019-20 நிதியாண்டிற்கான மகாராஷ்டிரா அரசின் மாநில வரி துணை ஆணையரிடமிருந்து 160 கோடி ரூபாய் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கோரிக்கை அறிவிப்பை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 29) பெற்றுள்ளது. வரிக் கூறுகள் நிலுவைத் தொகையில் நிறுவனம் சுமார் 77.66 கோடி செலுத்த வேண்டியுள்ளது என்றும், மீதமுள்ள தொகை நிலுவைத் தொகை மற்றும் அபராதக் கட்டணங்கள் மீதான வட்டியுடன் செலுத்தப்படும் என்றும் வரி உத்தரவு குறிப்பிடுகிறது. நிறுவனம் மாநில வரித்துறை இணை ஆணையரிடம் மேல்முறையீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது, மேலும் ஒரு சாதகமான முடிவை எதிர்பார்க்கிறது.