வணிகம் செய்தி

பாமர மக்களுக்கும் புரியும்படியான, கலப்படமற்ற வணிகச் செய்திகளை இங்கே படிக்கவும்.

ரத்தன் டாடாவின் உயிலை நடைமுறைபடுத்த தேர்வு செய்யப்பட்ட ஒன்றுவிட்ட சகோதரிகள் மற்றும் நெருங்கிய நண்பர்

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா தனது ஒன்றுவிட்ட சகோதரிகளான ஷிரீன் மற்றும் டீன்னா ஜெஜீபாய், நெருங்கிய நண்பர் மெஹ்லி மிஸ்திரி மற்றும் வழக்கறிஞர் டேரியஸ் கம்பாட்டா ஆகியோரை தனது உயிலை நிறைவேற்றுபவர்களாக நியமித்துள்ளார்.

18 Oct 2024

இந்தியா

தொடர்ந்து இரண்டாவது வாரமாக சரிவு; இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பில் வீழ்ச்சி

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு அக்டோபர் 11ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 10.746 பில்லியன் டாலர் குறைந்து 690.43 பில்லியன் டாலராக உள்ளது என்று ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை (அக்டோபர் 18) தெரிவித்தது.

உள்நாட்டு உற்பத்திக்கு முக்கியத்துவம்; லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் இறக்குமதிக்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டம்

உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் போன்ற நிறுவனங்களை ஊக்குவிக்கும் நோக்கில், மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் மற்றும் தனிநபர் கணினிகளின் இறக்குமதியை 2025 ஜனவரி மாதத்திற்குப் பிறகு கட்டுப்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய கிழக்கில் உச்சகட்ட பதற்றம்; தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு

தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து, வெள்ளிக்கிழமை முதல் அவுன்ஸ் ஒன்றுக்கு 2,700 டாலர்களைத் தாண்டியுள்ளது.

2,350 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது நோக்கியா நிறுவனம்

தொலைத்தொடர்பு நிறுவனமான நோக்கியா, அதன் தற்போதைய செலவுக் குறைப்பு உத்தியின் ஒரு பகுதியாக, உலகம் முழுவதும் 2,350 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளது.

2.37 மடங்கு அதிகமான விண்ணப்பங்கள்; ஐபிஓ வெளியீட்டில் அதிக வரவேற்பைப் பெற்ற ஹூண்டாய்

ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியாவின் ஆரம்ப பொது வழங்கல் (ஐபிஓ) அதன் இறுதி நாளில் வியாழக்கிழமை (அக்டோபர் 17) அதிக அளவிலான விண்ணப்பங்களை பெற்றது.

தீபாவளியை முன்னிட்டு விவசாயிகளுக்கு ஜாக்பாட்; ரபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தியது மத்திய அரசு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, ஆறு முக்கிய ரபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவின் தங்க இருப்பு 6 ஆண்டுகளில் 210% உயர்ந்துள்ளது

2018 டிசம்பரில் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சக்திகாந்த தாஸ் பொறுப்பேற்றதில் இருந்து இந்தியாவின் தங்க கையிருப்பு 211% அதிகரித்துள்ளது.

தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு

தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அகவிலைப்படியை (DA) 3% உயர்த்த மத்திய அமைச்சரவை இன்று அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.

புற்றுநோய்க்கு காரணம், $15 மில்லியன் வழங்க வேண்டும்: ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு கோர்ட் உத்தரவு

பல ஆண்டுகளாக ஜான்சன் & ஜான்சன் (ஜே&ஜே) நிறுவனத்தின் டால்க் பவுடரைப் பயன்படுத்தியதன் விளைவாக, ஒரு அரிய வகை புற்றுநோயான மீசோதெலியோமாவை உருவாக்கியதாகக் குற்றம் சாட்டிய நபருக்கு $15 மில்லியன் செலுத்த வேண்டும் என்று ஒரு நடுவர் மன்றம் செவ்வாயன்று உத்தரவிட்டுள்ளது.

15 Oct 2024

இந்தியா

31 அதிநவீன பிரிடேட்டர் ட்ரோன்களுக்கான ₹34,500 கோடி ஒப்பந்தம்: இந்தியா-அமெரிக்கா கையெழுத்து

34,500 கோடி மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இந்தியாவும், அமெரிக்காவும் கையெழுத்திட்டுள்ளன.

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 2024: அசெமோக்லு, ஜான்சன் மற்றும் ராபின்சன் ஆகியோர் வென்றனர்

2024 ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு டேரன் அசெமோக்லு, சைமன் ஜான்சன் மற்றும் ஜேம்ஸ் ஏ. ராபின்சன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

13 Oct 2024

தீபாவளி

வேலை பார்த்தா இந்த கம்பெனில பார்க்கணும்; தீபாவளி போனஸாக ஊழியர்களுக்கு மெர்சிடிஸ் பென்ஸ் கார் பரிசளித்த சென்னை நிறுவனம்

சென்னையை தளமாகக் கொண்ட ஸ்டீல் டிசைன் மற்றும் டீடெய்லிங் நிறுவனமான டீம் டீடெய்லிங் சொல்யூஷன்ஸ் (Team Detailing Solutions) தனது ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 28 கார்கள் மற்றும் 29 பைக்குகளை பரிசாக வழங்கி அசத்தி உள்ளது.

13 Oct 2024

அதானி

2024 ஆம் ஆண்டில் அதிக வருமானம் ஈட்டிய இந்தியர்களில் கௌதம் அதானி முதலிடம்; ஃபோர்ப்ஸ் பட்டியல் வெளியீடு

ஃபோர்ப்ஸ் இந்தியா பணக்காரர்கள் அறிக்கை 2024இன் படி, அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி இந்த ஆண்டில் அதிக செல்வம் ஈட்டியவராக உருவெடுத்துள்ளார்.

12 Oct 2024

இந்தியா

இந்தியாவின் 14வது மகாரத்னா நிறுவனமாக மாறியது ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்; மத்திய அரசு ஒப்புதல்

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்), இந்திய அரசாங்கத்தால் மஹாரத்னா நிறுவனமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

12 Oct 2024

போயிங்

5 பில்லியன் டாலர் வருவாய் இழப்பு; 17,000 ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தது போயிங் நிறுவனம்

அதிகரித்து வரும் நிதி இழப்புகள் மற்றும் வேலைநிறுத்தங்களுக்கு மத்தியில் 17,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்வதாக போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது.

பிரதமர் கதிசக்தி திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க பரிந்துரை

தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் (டிபிஐஐடி) செயலாளரான அமர்தீப் சிங் பாட்டியா, பிரதமர் கதிசக்தி முன்முயற்சியின் கீழ் மொத்தம் ₹15.39 லட்சம் கோடி மதிப்பிலான 208 முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் ஒப்புதலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

11 Oct 2024

இந்தியா

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 3.7 பில்லியன் டாலர்கள் குறைந்தது; ஆர்பிஐ அறிக்கை

அக்டோபர் 4ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 3.709 பில்லியன் டாலர் குறைந்து 701.176 பில்லியன் டாலராக உள்ளது என்று ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11) தெரிவித்துள்ளது.

11 Oct 2024

டாடா

டாடா டிரஸ்டின் தலைவராக நோயல் டாடா நியமனம்; டிரஸ்ட் கூட்டத்தில் முடிவு

வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11) டாடா குழுமத்தின் சேவைப் பிரிவான டாடா டிரஸ்ட்ஸின் தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டார்.

10 Oct 2024

டாடா

டாடா அறக்கட்டளையின் வாரிசாக அடுத்து வழிநடத்தவுள்ளாரா நோயல் டாடா? யார் அவர்?

ரத்தன் டாடாவின் சமீபத்திய மறைவு, எதிர்காலத்தில் டாடா அறக்கட்டளைகளை யார் வழிநடத்துவது என்பது பற்றிய விவாதங்களைத் தூண்டியுள்ளது.

முன்னணி தொழிலதிபராக இருந்தும் பணக்காரர் பட்டியலில் இடம்பெறாத ரத்தன் டாடா; காரணம் தெரியுமா?

மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா உலகளவில் மிகவும் செல்வாக்கு மிக்க வணிகத் தலைவர்களில் ஒருவராக இருந்தார்.

10 Oct 2024

டாடா

இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் சாந்தனு நாயுடு; யார் இந்த இளம் டாடா நிர்வாகி?

டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா, தனது 86 வயதில் நேற்று, அக்டோபர் 9 ஆம் தேதி அன்று காலமானார்.

ரத்தன் டாடா மறைவுக்குப் பின் டாடா குழுமத்தை வழிநடத்தப் போவது யார்? சூடுபிடித்த வாரிசு விவாதம்

டாடா சன்ஸ் நிறுவனத்தின் எமரிட்டஸ் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா, தனது 86வது வயதில் மும்பையில் புதன்கிழமை (அக்டோபர் 9) காலமானார்.

10 Oct 2024

டாடா

ரத்தன் டாடா: டாடா குழுமத்தை 5 பில்லியன் டாலரிலிருந்து 100 பில்லியன் டாலராக உயர்த்திய தலைவர்

இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் தொழிலதிபர்கள் மற்றும் பரோபகாரர்களில் ஒருவரான ரத்தன் நேவல் டாடா, தனது 86வது வயதில், அக்டோபர் 9, 2024 புதன்கிழமை அன்று காலமானார்.

வேலையில் ப்ரோமோஷன் வேண்டுமா? அப்படியென்றால் நீங்கள் ஆஃபீஸிற்கு வர வேண்டும்

சமீபத்திய ஆய்வில், 91% இந்திய CEO க்கள், பதவி உயர்வுகள், சம்பள உயர்வுகள் மற்றும் விருப்பமான சலுகைகளை, தொடர்ந்து அலுவலகத்திற்கு வரும் ஊழியர்களுக்கு அளிக்கத் தயாராக உள்ளனர்.

09 Oct 2024

யுபிஐ

UPI Liteக்கான பரிவர்த்தனை வரம்பு ₹1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது 

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) UPI Liteக்கான ஒரு பரிவர்த்தனை வரம்பை ₹500ல் இருந்து ₹1,000 ஆக உயர்த்தியுள்ளது.

17,082 கோடி மதிப்பிலான செறிவூட்டப்பட்ட அரிசிக்கான திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் 

பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) மற்றும் பிற நலத்திட்டங்கள் உட்பட அரசின் அனைத்துத் திட்டங்களின் கீழும் செறிவூட்டப்பட்ட அரிசியை அனைவருக்கும் ஜூலை முதல் வழங்குவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

09 Oct 2024

ஆர்பிஐ

ரெப்போ விகிதத்தை 6.5%, FY25க்கான GDP 7.2% : RBI அறிவிப்பு

இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) நிதிக் கொள்கைக் குழு (எம்பிசி) தொடர்ந்து 10வது முறையாக முக்கிய ரெப்போ விகிதத்தை 6.5 சதவீதமாகப் பராமரிக்கத் முடிவு செய்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓவிற்கு தயாராகும் ஹூண்டாய்; அடுத்த வாரம் வெளியிட திட்டம்

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் ஐபிஓ சந்தாக்களுக்காக அடுத்த வாரம் திறக்கப்பட உள்ளது.

மாலத்தீவுடன் கரன்சி பரிமாற்ற ஒப்பந்தம்; இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கை

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) திங்கட்கிழமை (அக்டோபர் 7) வெளியிட்ட ஒரு அறிக்கையில், சார்க் நாணய மாற்று கட்டமைப்பின் 2024-27இன் கீழ் மாலத்தீவு நாணய ஆணையத்துடன் (எம்எம்ஏ) நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

07 Oct 2024

இந்தியா

இந்தியாவின் பசுமை மின்துறையில் ரூ.2,000 கோடி முதலீடு செய்கிறது ஹிட்டாச்சி எனர்ஜி

ஹிட்டாச்சி எனர்ஜி, வரும் ஆண்டுகளில் இந்தியாவின் பசுமை மின் துறையில் ₹2,000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

வாரத்தின் முதல் நாள் இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவு; முதலீட்டார்கள் அதிர்ச்சி

இந்திய பங்குச்சந்தை திங்களன்று குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கங்களை சந்தித்தது. பரந்த அடிப்படையிலான விற்பனையின் மத்தியில் சென்செக்ஸ் அதன் இன்ட்ராடே அதிகபட்சத்திலிருந்து 1,088 புள்ளிகள் சரிந்தது.

06 Oct 2024

அதானி

சமையல் எரிவாயுவில் பசுமை ஹைட்ரஜன்; கார்பன் உமிழ்வைக் குறைக்க அதானி நிறுவனம் அதிரடி திட்டம்

அதானி குழுமம் மற்றும் பிரெஞ்சு எரிசக்தி நிறுவனமான டோட்டல் எனர்ஜிஸ் கூட்டு நிறுவனமான அதானி டோட்டல் கேஸ் லிமிடெட் (ஏடிஜிஎல்) அகமதாபாத்தின் சில பகுதிகளில் கார்பன் உமிழ்வைக் குறைத்து இந்தியாவின் நிகர-பூஜ்ஜிய இலக்குகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டு, சமையல் எரிவாயுவுடன் பசுமை ஹைட்ரஜனைக் கலக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது.

இப்போது Swiggy உங்கள் உணவு ஆர்டர்களை வெறும் 10 நிமிடங்களில் டெலிவரி செய்யும்

இந்தியாவின் முக்கிய உணவு விநியோக தளமான ஸ்விக்கி, போல்ட் என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

உறுப்பினராக ஆண்டுக்கு ₹50,000 செலவாகும் Swiggyஇன் 'ரேர் கிளப்'; சிறப்பம்சங்கள் என்ன? 

இந்தியாவின் முன்னணி உணவு விநியோக தளமான ஸ்விக்கி, "ரேர் கிளப்" என்ற பிரத்யேக வரவேற்பு உறுப்பினர் திட்டத்தை சோதித்து வருவதாக கூறப்படுகிறது.

04 Oct 2024

இந்தியா

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் தனிநபர் வருமானம் $2,000 உயரும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கணிப்பு

அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியாவின் தனிநபர் வருமானம் கணிசமாக அதிகரிக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கணித்துள்ளார்.

விவசாயிகளுக்கு ரூ.2000; பிஎம் கிசான் சம்மன் நிதியின் 18வது தவணையை நாளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி

நாடு முழுவதும் உள்ள 9.4 கோடி விவசாயிகள் பயனடையும் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் 18வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (அக்டோபர் 5) விநியோகிக்க உள்ளார்.

04 Oct 2024

இந்தியா

புதிய உச்சம் தொட்ட இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு; முதல்முறையாக 700 பில்லியன் டாலர்களை கடந்து சாதனை

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 12.588 பில்லியன் டாலர்கள் உயர்ந்து, செப்டம்பர் 27ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 704.885 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (அக்டோபர் 4) அறிவித்துள்ளது.

இஸ்ரேல்-ஈரான் மோதலால் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்; நிபுணர்கள் எச்சரிக்கை

இஸ்ரேல் மீது ஈரானின் சமீபத்திய ஏவுகணைத் தாக்குதல்கள் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சாத்தியமான இடையூறுகள் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளன.

உலக பணக்காரர்கள் பட்டியலில் 2வது இடத்தை பிடித்த மார்க் ஜூக்கர்பெர்க்; முதலிடத்தில் யார்?

மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை பின்னுக்கு தள்ளி உலகின் இரண்டாவது பணக்காரர் என்ற இடத்தை பிடித்துள்ளார்.