Page Loader
புற்றுநோய்க்கு காரணம், $15 மில்லியன் வழங்க வேண்டும்: ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு கோர்ட் உத்தரவு

புற்றுநோய்க்கு காரணம், $15 மில்லியன் வழங்க வேண்டும்: ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு கோர்ட் உத்தரவு

எழுதியவர் Venkatalakshmi V
Oct 16, 2024
09:37 am

செய்தி முன்னோட்டம்

பல ஆண்டுகளாக ஜான்சன் & ஜான்சன் (ஜே&ஜே) நிறுவனத்தின் டால்க் பவுடரைப் பயன்படுத்தியதன் விளைவாக, ஒரு அரிய வகை புற்றுநோயான மீசோதெலியோமாவை உருவாக்கியதாகக் குற்றம் சாட்டிய நபருக்கு $15 மில்லியன் செலுத்த வேண்டும் என்று ஒரு நடுவர் மன்றம் செவ்வாயன்று உத்தரவிட்டுள்ளது. வழக்கு தொடுத்த இவான் ப்ளாட்கின், 2021 ஆம் ஆண்டில் தனது நோயறிதலுக்குப் பிறகு, ஜே&ஜேவின் பேபி பவுடரை நுகர்ந்ததால் நோய்வாய்ப்பட்டதாகக் கூறி, நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஃபேர்ஃபீல்ட் கவுண்டி, கனெக்டிகட் சுப்பீரியர் கோர்ட்டில் உள்ள நடுவர் மன்றம் நிறுவனம் கூடுதல் தண்டனைக்குரிய நிவாரணம் தரவேண்டி இருக்கும் எனவும், இது வழக்கை மேற்பார்வையிடும் நீதிபதியால் பின்னர் தீர்மானிக்கப்படும் எனவும் அந்த உத்தரவு தெரிவிக்கிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

வழக்கு

சட்ட சிக்கல்களை சந்தித்து வரும் ஜே&ஜே நிறுவனம்

ஏற்கனவே புற்றுநோய் சம்மந்தப்பட்ட கிட்டத்தட்ட 62,000 க்கும் மேற்பட்ட நபர்களின் கூற்றுகளைத் தீர்க்க ஜே&ஜே முயல்கையில் செவ்வாயன்று இந்த நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது. சட்டரீதியான சவால்களை எதிர்கொள்ளும் இந்த நிறுவனத்தில் திவால் ஒப்பந்தம், பெண்ணோயியல் புற்றுநோய்கள் மீதான வழக்குகளை நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் மீசோதெலியோமா புற்றுநோய் சார்ந்த மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வழக்குகளை அது எதிர்கொள்ளவேண்டியுள்ளது. முன்னதாக இந்த நிறுவனம் இது போன்ற உரிமைகோரல்களில் சிலவற்றை முன்பே தீர்த்து வைத்துள்ளது, எனினும் நாடு தழுவிய தீர்வை முன்மொழியவில்லை. அனைத்து வழக்குகளிலும் உள்ள வாதிகள், ஜே&ஜேயின் டால்க் தயாரிப்புகளில் உள்ள அஸ்பெஸ்டாஸ் என்ற வேதிப்பொருள், மீசோதெலியோமா மற்றும் பிற புற்றுநோய்களை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்கள்.