NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / 17,082 கோடி மதிப்பிலான செறிவூட்டப்பட்ட அரிசிக்கான திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    17,082 கோடி மதிப்பிலான செறிவூட்டப்பட்ட அரிசிக்கான திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் 
    செறிவூட்டப்பட்ட அரிசிக்கான திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்

    17,082 கோடி மதிப்பிலான செறிவூட்டப்பட்ட அரிசிக்கான திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 09, 2024
    04:48 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) மற்றும் பிற நலத்திட்டங்கள் உட்பட அரசின் அனைத்துத் திட்டங்களின் கீழும் செறிவூட்டப்பட்ட அரிசியை அனைவருக்கும் ஜூலை முதல் வழங்குவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

    இத்திட்டத்தின் மூலம், இந்தாண்டு துவங்கி, டிசம்பர் 2028 வரை இத்திட்டம் நடைமுறையில் இருக்கும்.

    இத்திட்டத்திற்கான 100 சதவீத நிதியை மத்திய அரசு வழங்கும், மொத்தம் ரூ.17,082 கோடி.

    முன்மொழிவு 

    பட்ஜெட் கூட்டத்தொடரில் முன்மொழியப்பட்ட திட்டம்

    2019 மற்றும் 2021 க்கு இடையில் நடத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் (NFHS-5) படி, இரத்த சோகை இந்தியாவில் ஒரு பரவலான பிரச்சினையாக உள்ளது.

    இது குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்களை பல்வேறு வயது மற்றும் வருமான நிலைகளில் பாதிக்கிறது.

    இரும்புச்சத்து குறைபாடு தவிர, வைட்டமின் பி12 மற்றும் ஃபோலிக் அமிலம் போன்ற பிற வைட்டமின் மற்றும் தாதுக் குறைபாடுகளும் நீடித்து, மக்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித்திறனை பாதிக்கிறது.

    இவற்றை ஈடுசெய்ய மக்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்க மத்திய அரசு திட்டத்தினை முன்மொழிந்தது.

    காரணம்

    எதற்காக செறிவூட்டப்பட்ட அரிசி?

    பாதிக்கப்படக்கூடிய மக்களில் இரத்த சோகை மற்றும் நுண்ணூட்டச் சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கான பாதுகாப்பான மற்றும் பயனுள்ள நடவடிக்கையாக உலகளவில் உணவு வலுவூட்டல் பயன்படுத்தப்படுகிறது.

    இந்திய சூழலில் 65% மக்கள் அரிசியை பிரதான உணவாக உட்கொள்வதால், அரிசியானது நுண்ணூட்டச்சத்துக்களை வழங்குவதற்கான சிறந்த மாற்றாகும்.

    நெல் செறிவூட்டலில் FSSAI பரிந்துரைத்த தரங்களின்படி நுண்ணூட்டச் சத்துக்களால் (இரும்பு, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி 12) செறிவூட்டப்பட்ட அரிசி கர்னல்களை (FRK) வழக்கமான அரிசியுடன் (Custom Milled Rice) சேர்ப்பது அடங்கும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய அரசு
    அமைச்சரவை

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    மத்திய அரசு

    ஆந்திரா, தெலுங்கானா வெள்ள பாதிப்பு; உடனடி நிவாரணமாக ரூ.3,448 கோடி வழங்குவதாக மத்திய அமைச்சர் அறிவிப்பு ஆந்திரா
    குரங்கம்மை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: வழிகாட்டுதல்களை வெளியிட்ட மத்திய சுகாதார அமைச்சகம் குரங்கம்மை
    54வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு ஒப்பந்தங்களுக்கான வரிவிதிப்பில் புதிய முடிவு ஜிஎஸ்டி
    அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 5,000 'சைபர் கமாண்டோக்கள்': மத்திய அரசு திட்டம் சைபர் கிரைம்

    அமைச்சரவை

    குட்கா தடை ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு சென்னை உயர் நீதிமன்றம்
    காவல்துறை அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒடிசா அமைச்சர் நபா கிசோர் தாஸ் மாநிலங்கள்
    சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் நிறைவேற்றப்படும் - அமைச்சரவை கூட்டத்தில் முடிவு தமிழ்நாடு
    தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் நீக்கம் மு.க ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025