வாரத்தின் முதல் நாள் இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவு; முதலீட்டார்கள் அதிர்ச்சி
இந்திய பங்குச்சந்தை திங்களன்று குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கங்களை சந்தித்தது. பரந்த அடிப்படையிலான விற்பனையின் மத்தியில் சென்செக்ஸ் அதன் இன்ட்ராடே அதிகபட்சத்திலிருந்து 1,088 புள்ளிகள் சரிந்தது. 81,926.99இல் தொடங்கிய சென்செக்ஸ், ஆரம்பத்தில் கிட்டத்தட்ட 450 புள்ளிகள் உயர்ந்தது. ஆனால் மாலையில், வர்த்தக நேர முடிவில் 638 புள்ளிகள் குறைந்து 81,050இல் நிறைவடைந்தது. இது 0.78% சரிவைக் குறிக்கிறது. நிஃப்டி 50 219 புள்ளிகள் சரிந்து 24,795.75 அல்லது 0.87% குறைந்தது. மிட் மற்றும் ஸ்மால் கேப் பிரிவுகள் இந்த சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டன. பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 1.85% சரிந்தது மற்றும் பிஎஸ்இ ஸ்மால்கேப் குறியீடு 3.27% சரிந்தது.
சந்தை மூலம் ரூ.25 லட்சம் கோடி இழப்பு
பிஎஸ்இயில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் கிட்டத்தட்ட ₹9 லட்சம் கோடி குறைந்து, கடந்த ஆறு அமர்வுகளில் மொத்த இழப்பை தோராயமாக ₹25 லட்சயாக உயர்த்தியுள்ளது. அக்டோபரின் முதல் மூன்று நாட்களில் ₹27,142 கோடி மதிப்பிலான இந்திய பங்குகளில் இருந்து வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (FPI) விலகியது இதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக உள்ளது. இந்த மூலதனத்தின் பெரும்பகுதி சீன சந்தைகளுக்கு மாறுகிறது. மிகவும் கவர்ச்சிகரமான மதிப்பீடுகள் மற்றும் சீனாவில் சமீபத்திய பொருளாதார ஆதரவு நடவடிக்கைகளால் முதலீட்டார்கள் சீனாவிற்கு தங்கள் முதலீடுகளை மாற்றி வருகின்றனர். FPI வெளியேற்றம் தவிர, மத்திய கிழக்கின் புவிசார் அரசியல் பதட்டங்கள் இந்திய பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களிடையே பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன.