இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 3.7 பில்லியன் டாலர்கள் குறைந்தது; ஆர்பிஐ அறிக்கை
அக்டோபர் 4ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 3.709 பில்லியன் டாலர் குறைந்து 701.176 பில்லியன் டாலராக உள்ளது என்று ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11) தெரிவித்துள்ளது. முந்தைய அறிக்கை வாரத்தில், கையிருப்பு 12.588 பில்லியன் அமெரிக்க டாலர்கள் உயர்ந்து 704.885 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. அதன் மூலம், முதன் முறையாக இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 700 பில்லியன் டாலர்களை கடந்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அக்டோபர் 4 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 3 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக கையிருப்பு குறைந்துள்ளது.
கையிருப்பு குறைந்ததன் பின்னணி
கையிருப்பின் முக்கிய அங்கமான வெளிநாட்டு நாணய சொத்துக்கள் 3.511 பில்லியன் அமெரிக்க டாலர்கள் குறைந்து 612.643 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பில் உள்ள யூரோ, பவுண்ட் மற்றும் யென் போன்ற அமெரிக்க அல்லாத யூனிட்களின் மதிப்பு அல்லது தேய்மானத்தின் விளைவு வெளிநாட்டு நாணய சொத்துக்களின் ஏற்ற இயக்கத்திற்கு காரணமாகிறது. இதற்கிடையே, வாரத்தில் தங்கம் கையிருப்பு 40 மில்லியன் டாலர் குறைந்து 65.756 பில்லியன் டாலராக உள்ளது. சிறப்பு வரைதல் உரிமைகள் (SDRs) 123 மில்லியன் அமெரிக்க டாலர்கள் குறைந்து 18.425 பில்லியன் டாலர்கள் உள்ளது. சர்வதேச நாணய நிதியம் உடனான இந்தியாவின் இருப்பு நிலை அறிக்கை வாரத்தில் 35 மில்லியன் அமெரிக்க டாலர்கள் குறைந்து 4.352 பில்லியன் டாலராக உள்ளது.