NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / தொடர்ந்து இரண்டாவது வாரமாக சரிவு; இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பில் வீழ்ச்சி
    அடுத்த செய்திக் கட்டுரை
    தொடர்ந்து இரண்டாவது வாரமாக சரிவு; இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பில் வீழ்ச்சி
    தொடர்ந்து இரண்டாவது வாரமாக சரிவை சந்திக்கும் அந்நியச் செலாவணி கையிருப்பு

    தொடர்ந்து இரண்டாவது வாரமாக சரிவு; இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பில் வீழ்ச்சி

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 18, 2024
    07:00 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு அக்டோபர் 11ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 10.746 பில்லியன் டாலர் குறைந்து 690.43 பில்லியன் டாலராக உள்ளது என்று ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை (அக்டோபர் 18) தெரிவித்தது.

    முந்தைய அறிக்கை வாரத்தில், கையிருப்பு 3.709 பில்லியன் டாலர் குறைந்து 701.176 பில்லியன் டாலராக இருந்தது.

    செப்டம்பர் இறுதியில், கையிருப்பு இதுவரை இல்லாத வகையில் 704.885 பில்லியன் அமெரிக்க டாலர்கள் எனும் புதிய உச்சத்தை எட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    அக்டோபர் 11 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், கையிருப்பின் முக்கிய அங்கமான வெளிநாட்டு நாணயச் சொத்துக்கள் 10.542 பில்லியன் அமெரிக்க டாலர்கள் குறைந்து 602.101 பில்லியன் டாலர்களாக உள்ளது என்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட தரவு காட்டுகிறது.

    தேய்மானம்

    வெளிநாட்டு நாணய சொத்துக்களின் மதிப்பு குறைவால் ஏற்பட்ட தாக்கம்

    டாலர் அடிப்படையில் வெளிப்படுத்தப்படும், அந்நியச் செலாவணி கையிருப்பில் உள்ள யூரோ, பவுண்ட் மற்றும் யென் போன்ற அமெரிக்க அல்லாத யூனிட்களின் மதிப்பு அல்லது தேய்மானத்தின் விளைவு காரணமாக வெளிநாட்டு நாணய சொத்துக்களின் கையிருப்பு மதிப்பு குறைந்துள்ளதாகத் தெரிகிறது.

    வாரத்தில் தங்கம் கையிருப்பு 726 மில்லியன் டாலர் அதிகரித்து 63.613 பில்லியன் டாலராக உள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. சிறப்பு வரைதல் உரிமைகள் (SDRs) 121 மில்லியன் டாலர்கள் அதிகரித்து 18.54 பில்லியன் டாலர்களாக உள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

    சர்வதேச நாணய நிதியம் உடனான இந்தியாவின் இருப்பு நிலை அறிக்கை வாரத்தில் 66 மில்லியன் அமெரிக்க டாலர்கள் குறைந்து 4.458 பில்லியன் டாலராக உள்ளது என்று ஆர்பிஐ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ரிசர்வ் வங்கி
    ஆர்பிஐ
    வணிக புதுப்பிப்பு

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இந்தியா

    உஷார் மக்களே! மயோனைஸ், சிப்ஸ் அதிகம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும் என மருத்துவர்கள் எச்சரிக்கை நீரிழிவு நோய்
    பூமியைத் தாக்கிய வலிமையான காந்தப் புயல்; லடாக் பகுதியில் தோன்றிய அதிசய துருவ ஒளிகள் பூமி
    ஹரியானாவில் அக்டோபர் 15ஆம் தேதி புதிய அரசு பதவியேற்பு; மீண்டும் முதல்வராகிறார் நயாப் சிங் சைனி? ஹரியானா
    இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 3.7 பில்லியன் டாலர்கள் குறைந்தது; ஆர்பிஐ அறிக்கை ரிசர்வ் வங்கி

    ரிசர்வ் வங்கி

    UPI பணப் பரிவர்த்தனை வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்திய ரிசர்வ் வங்கி இந்தியா
    நடப்பு நிதியாண்டில் மூன்றாம் முறையாக தங்கக் கடன் பத்திரங்களை வெளியிட்டிருக்கும் ரிசர்வ் வங்கி தங்க விலை
    மும்பையில் செயல்படும் ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்  மும்பை
    நிர்மலா சீதாராமனை குறிவைத்து RBIக்கு வெடிகுண்டு மிரட்டல்: மின்னஞ்சலின் முழு விளக்கம் இதோ   நிர்மலா சீதாராமன்

    ஆர்பிஐ

    50 வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்திய குடும்பங்களின் சேமிப்பு அளவு வீழ்ச்சி: ஆர்பிஐ  வணிகம்
    12 ஆயிரம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக ஆர்பிஐ தகவல் இந்தியா
    கடைசி தேதிக்கு பிறகும் ₹2,000 நோட்டுகள் கைவசம் இருக்கிறதா? வங்கியிலிருந்து பணம் பெற 2 வழிகள் ரிசர்வ் வங்கி
    பிப்., 29க்கு பிறகு Paytm Payments Bank பரிவர்த்தனைகள் நிறுத்தப்படும் என அறிவிப்பு ரிசர்வ் வங்கி

    வணிக புதுப்பிப்பு

    தங்கம் விலை அதிகரிப்பு - இன்றைய நாளின் விலை விபரங்கள் தங்கம் வெள்ளி விலை
    தங்கம் விலையில் அதிரடி மாற்றம் - இன்றைய நாளில் எவ்வளவு சரிவு? தங்கம் வெள்ளி விலை
    தங்கம் விலையில் அதிரடி மாற்றம் - இன்றைய விலை விபரம் தங்கம் வெள்ளி விலை
    ஒரே நாளில் கிடுகிடுவென சரிந்த தங்கம் விலை - வாங்க சரியான நேரம் தங்கம் வெள்ளி விலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025