Page Loader
ZFE: இனி நீங்கள் க்ளைம் கவலையின்றி சோமாட்டோவில் உணவு ஆர்டர் செய்யலாம்

ZFE: இனி நீங்கள் க்ளைம் கவலையின்றி சோமாட்டோவில் உணவு ஆர்டர் செய்யலாம்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 28, 2024
01:50 pm

செய்தி முன்னோட்டம்

சோமாட்டோ நிறுவனம் Zomato for Enterprise (ZFE) என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து அதன் CEO தீபிந்தர் கோயல் வெளியிட்ட அறிக்கைபடி, Zomato for Enterprise (ZFE) உணவு செலவு நிர்வாகத்திற்காக கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக பிரத்யேக வடிவமைக்கப்பட்ட தளமாகும். "கார்ப்பரேட் ஊழியர்களால் செய்யப்படும் பல Zomato ஆர்டர்கள் வணிகம் தொடர்பானவை மற்றும் நிறுவனத்தால் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். திருப்பிச் செலுத்தும் செயல்முறை சிக்கலானது மற்றும் நேரத்தை எடுத்துக்கொள்ளும்". இப்போது ZFE மூலம், பணியாளர்கள் தங்கள் வணிக ஆர்டர்களை நேரடியாக தங்கள் முதலாளியிடம் பணம் செலுத்தாமல் பில் செய்யலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

செயல்பாடு

இந்த செயலி எப்படி வேலை செய்கிறது?

இந்த செயலியில் பிசினஸ் அக்கவுண்ட் மூலமாக வணிக நிறுவனங்கள் ஊழியர்களைச் சேர்க்க, வரவு செலவுத் திட்டங்களை அமைக்க, வரிசைப்படுத்தும் விதிகளை வரையறுக்க மற்றும் பலவற்றிற்கு ZFE உதவுகிறது. தீபிந்தர் கோயல் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளன்படி, 100 க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் ஏற்கனவே ZFE ஐப் பயன்படுத்துகின்றன. இந்த வசதி தற்போது பல வணிக நிர்வாகங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இணைய enterprise@zomato.com என்ற மின்ஜல் முகவரிக்கு மெயில் அனுப்புமாறும் அவர் தெரிவித்துள்ளார்.