
தமிழகத்திற்கு முதல் நாளிலேயே குவிந்த முதலீடுகள்: உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள்
செய்தி முன்னோட்டம்
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நேற்று (29.8.2024) அமெரிக்காவின், சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல முன்னணி தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அவற்றுள், நோக்கியா, பேபால், ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன், 900 கோடி ரூபாய் முதலீட்டில், சென்னை, கோவை மற்றும் மதுரையில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக 27.8.2024 அன்று சான் பிரான்சிஸ்கோ நகரில் நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். அதில் இந்த நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#SmartClicks | அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! #SunNews | #CMMKStalin | #MKStalinInUS | #InvestInTN | @mkstalin | @TRBRajaa pic.twitter.com/eHNddzLzSB
— Sun News (@sunnewstamil) August 30, 2024
பேபால்
பேபால் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
பேபால் ஹோல்டிங்க்ஸ் நிறுவனம் (PayPal Holdings, Inc.) அமெரிக்க பன்னாட்டு நிதி தொழில்நுட்ப நிறுவனமாகும்.
இது ஆன்லைன் பணப் பரிமாற்றங்களை ஆதரிக்கும் பெரும்பாலான நாடுகளில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைக்கு உதவுகிறது.
காசோலைகள் மற்றும் பண ஆணைகள் போன்ற பாரம்பரிய காகித முறைகளுக்கு மின்னணு மாற்றாக இது செயல்படுகிறது.
பேபால் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே சுமார் 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவிற்கான மேம்பட்ட வளர்ச்சி மையம் (Advanced development center focussed on AI) அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.