NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / ரூ.5,947 கோடி முதலீட்டில் மேட்டூரில் புனல் மின் நிலையம் அமைக்கிறது கிரீன்கோ நிறுவனம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரூ.5,947 கோடி முதலீட்டில் மேட்டூரில் புனல் மின் நிலையம் அமைக்கிறது கிரீன்கோ நிறுவனம்
    மேட்டூரில் புதிய புனல் மின் நிலையம் அமைக்கிறது கிரீன்கோ நிறுவனம்

    ரூ.5,947 கோடி முதலீட்டில் மேட்டூரில் புனல் மின் நிலையம் அமைக்கிறது கிரீன்கோ நிறுவனம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 02, 2024
    01:50 pm

    செய்தி முன்னோட்டம்

    சேலம் மாவட்டம் மேட்டூரில் ரூ.5,947 கோடி மதிப்பில் நீரேற்று புனல் மின் நிலையம் அமைப்பதற்கான பூர்வாங்க வங்கிகளை கீரீன்கோ எனெர்ஜிஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது.

    முன்னதாக, சென்னையில் கடந்த ஆகஸ்ட் 21 அன்று நடந்த தமிழ்நாடு முதலீட்டார்கள் மாநாட்டில் ரூ.20,114 கோடியில் மூன்று புனல் மின் நிலையங்களை அமைக்க கிரீன்கோ எனெர்ஜிஸ் நிறுவனம் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

    முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் மூலம், 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், முதற்கட்டமாக அந்த நிறுவனம் சேலம் மேட்டூரில் ரூ.5,947 கோடியில் மூடப்பட்ட நீரேற்று புனல் மின் நிலையம் அமைப்பதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது.

    விண்ணப்பம்

    கட்டுமானப் பணிகளுக்கு விண்ணப்பம்

    மேட்டூரில் பாலமலை மற்றும் நவிப்பட்டி ஆகிய கிராமங்களை ஒட்டி கிரீன்கோ நிறுவனத்தால் இந்த புனல் மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது.

    கிரீன்கோ நிறுவனம் இங்கு புனல் மின் நிலையத்திற்கான கட்டுமானப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதியை வேண்டி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பத்தைத் தாக்கல் செய்துள்ளது.

    காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் சிக்கல்கள் உள்ள நிலையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், அந்த துறையில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் கிரீன்கோ எனெர்ஜிஸ் நிறுவனம் தமிழகத்தில் முதலீடு செய்துள்ளது தமிழக அரசு இந்த துறைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தின் ஒரு அங்கமாக பார்க்கப்படுகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    மேட்டூரில் வருகிறது புதிய புனல் மின் நிலையம்

    #BREAKING | மேட்டூரில் ₹5,947 கோடியில் புனல் மின் நிலையம் அமைக்கிறது க்ரீன்கோ நிறுவனம்!#SunNews | #CMMKStalin | #Greenko | #PumpedStorageProject | @mkstalin | @TRBRajaa pic.twitter.com/lBjRsLJ5pl

    — Sun News (@sunnewstamil) September 2, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சேலம்
    முதலீடு
    தமிழ்நாடு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    சேலம்

    சேலத்தில் சக மாணவியை கர்ப்பமாக்கிய 10ம் வகுப்பு மாணவன் - அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளி மாணவர்கள்
    பஞ்சாப் ராணுவ நிலைய துப்பாக்கி சூடு: இறந்தவர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்  இந்தியா
    சேலம் காவிரி ஆற்றி 4 மாணவர்கள் மூழ்கி பலி! சோக சம்பவம்  தமிழ்நாடு
    சேலம் அரசு மருத்துவமனை ஆவின் பாலகத்தில் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள்  அரசு மருத்துவமனை

    முதலீடு

    இந்தியாவில் நிரந்தர வைப்புநிதிக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள் முதலீட்டு குறிப்புகள்
    தபால் நிலைய சேமிப்புத் திட்டங்களின் கீழ் சேமிக்கப்படும் தொகைக்கு எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது? இந்தியா
    புதிய முதலீடுகளை ஈர்க்குமா சந்திரயான் 3யின் வெற்றி? சந்திரயான் 3
    அயர்லாந்தில் இருந்து ரூ.9,000 கோடி பணம் வருவதாக கூறி தொழிலதிபர்களிடம் பணம் பறிப்பு - க்ரைம் ஸ்டோரி  க்ரைம் ஸ்டோரி

    தமிழ்நாடு

    மதுரை மக்களுக்கு நற்செய்தி; எம்.பி. சு.வெங்கடேசன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பு மதுரை
    கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம்; மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட முதல்வர் ஸ்டாலின் பெற்றுக்கொண்டார் கலைஞர் கருணாநிதி
    மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: 720க்கு 720 பெற்று நாமக்கல் மாணவர் சாதனை மருத்துவக் கல்லூரி
    தமிழ்நாட்டில் நாளை (ஆகஸ்ட் 20) மின்தடை ஏற்படும் பகுதிகள்; முழுமையான பட்டியல் தமிழ்நாடு செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025